வடபோர் அரங்கில் சிறீலங்காப் படைகளுக்கு ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து அதனை ஈடுசெய்யும் பொருட்டு பிறிதொரு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சிறீலங்காப் படைகள் தாயாராகி வருகின்றன.
நேற்றைய தினம் யாழ் சென்ற சிறீலங்காவின் முப்படைகளின் தளபதி ஏயா மார்ஷல் டொனால்ட் பெரேரா, சிறீலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர் இராணுவ நடவடிக்கை தொடர்பான திட்டங்களை பலாலி, வரணி, கிளாலி, மற்றும் மிருசுவில் பகுதியில் உள்ள படை அதிகாரிகளுக்கு விளக்கியதாக தெரியவருகிறது.
குறிப்பாக கிளாலி ஊடாக பூநகரி நோக்கிய கடல் தரையிறக்கம் ஒன்றை மேற்கொண்டு பூநகரியை ஆக்கிரமிக்கும் படைநடவடிகக்கைக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருவதாக இராணுவ உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆழம் குறைந்த கடற்பரப்பில் சிறீலங்காவின் கடற்கலன்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இதன்கென பொதுமக்களின் படகுகள் மற்றும் படகுகளுக்கான வெளியிணைப்பு இயந்திரங்களை பெற்று ஆழம் குறைந்த கடலில் எவ்வாறு தரையிறக்கத்தை மேற்கொள்ளுவது தொடர்பிலான கடற்பயிற்சிகளில் சிறீலங்காப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேநேரம் வடபோர் முனையில் சிறீலங்காப் படைகளுகு ஏற்பட்டுள்ள பேரிழப்புக்களை ஈடுசெய்ய விடுலைப் புலிகளின் நிர்வாகக் கட்டுப்பாட்டுப் பகுதிகளான பூநகரி, ஆனையிறவு, வாகரை ஆகிய பகுதிகளைக் கைப்பற்ற பாரிய இராணுவ சிறீலங்காப் படைகள் மேற்கொள்ளலாம் என ஹின்டுஸ்தான் ரைம்ஸ் நாளேடு எதிர்வு கூறியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
போர் அரங்கில் சிறீலங்காப் படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியை ஈடுசெய்ய தமிழீழத் தேசியத் தலைவரின் மாவீரர் தின கொள்கை விளக்க உரைக்கு முன்னர் பாரிய இராணுவ நடவடிக்கைச் செய்யவேண்டிய இக்கட்டான நிலைக்குள் சிறீலங்காப் படைகள் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஹின்டுஸ்தான் நாளேடுக்கு பத்தி ஒன்றை எழுதியிருக்கும் ஊடகவியலாளர் பி.கே.பாலச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment