Friday, October 27, 2006

ஏ-9 பாதை திறக்கப்படாவிட்டால் பேச்சுக்கான வாய்பு இல்லை!!!

யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக அவர் தெரிவித்த கருத்து:
மனிதாபிமான பிரச்சனைகளின் கீழ் பிரதானமாக இருப்பது ஏ-9 பாதை திறப்பு.
யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
நாங்கள் மனிதாபிமான பிரச்சனைகளை பேசுவோம் என்கிறோம். சிறிலங்கா அரசாங்கத் தரப்போ அரசியல் விவகாரங்களைப் பேசுவோம் என்கின்றனர். ஆகையால் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் இல்லை. காத்திருந்து பார்ப்போம் என்றார் தயா மாஸ்டர்.
ஜெனீவாவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஒருவரோ, எல்லாவற்றையும் இரண்டு நாட்களில் விவாதித்துவிட முடியாது. பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

முதலில் வறுமையில் செத்துக்கொண்டிருக்கும் யாழ்மக்களுக்கு உணவு போகவேண்டும், உணவே கொடுக்கமறுக்கும் சிங்களம் உரிமையை கொடுத்து விடுமா? உனவுகொடுக்க இவ்வளவு யோசிக்கும் சிங்களம், உரிமையை கொடுக்க எவ்வளவு யோசிக்கும் அதுவரை அங்கிருப்பவர்கள் உயிருடன் இருக்க உணவுவேண்டும்.