Tuesday, October 31, 2006

அரசு போர்தான் என்றால் புலிகளும் அதற்குத்தயார்!

ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது வலிந்து ஒரு போரைத் திணிக்கத் தயாராகின்றது. போர்தான் அரசின் நிலை என்றால் அதனை எதிர்கொள்ளப் புலிகளும் தயாராகவே உள்ளனர். தங்கள் மீது திணிக்கப்படுகின்ற ஆயுத வன்முறையை விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போராட வேண்டிய கட்டாயத்தினுள் தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். இவ்வாறு தெரிவித்தார் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாள ரும், பேச்சுக்குழுவின் தலைவருமாகிய சு.ப.தமிழ்ச்செல்வன்.
ஜெனிவாவில் பேச்சுகள் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்வி களுக்கு பதிலளித்த தமிழ்ச்செல்வன் மேலும் கூறியதாவது:

ஸ்ரீலங்கா இனவாதத் தலைவர்களால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தமிழ்மக்கள் இனப்படுகொலைக்கு உள் ளாக்கப்பட்டபோதுதான் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தும் கட்டத்துக்கு வந்தார்கள்.
ஆயுத வன்முறைகள் எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட நிலையில்தான் தற்காப்பு நிலையில்தான் ஆயுதப்போராட்டம் ஆரம்பமாகியது.

ஸ்ரீலங்கா அரசு ஒரு கொடிய யுத்தத்தை எமது மக்கள் மீது திணித்திருக்கின்றபோது, எமது மக்கள் ஒன்றும் செய்யமுடியாத நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் தங்களைத் தற்காத்துக்கொள்ள போராடவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்; தள்ளப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்.
ஆகவே, அமைதி வழியில் ஒரு சமாதானத்தீர்வை அடைய முயன்றாலும் இலங்கை அரசு அனைத்து வழிகளையும் மூடி மீண்டும் எமது தேசத்தின் மீதும் மக்கள் மீதும் ஒரு கொடிய யுத்தத்தைத் திணிக்கவே முயல்கின்றது.
ஆகவே, விரும்பியோ விரும்பாமலோ அதை எதிர்கொண்டேயாக வேண்டும். தமிழ்மக்கள் தற்காத்துக் கொள்வதற்கு வேறு மாற்றுவழி இல்லை என்றே கருதுகின்றேன்.

ஒரு சிறிய மனிதாபிமானப் பிரச்சினைக்கு தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகளை நிராகரித்து உதாசீனப் படுத்தி மீண்டும் போர்ச் சூழலை எமது தேசத்தின் மீது திணிக்க எம்மீது திணிக்க ஸ்ரீலங்கா அரசு முயன்று கொண்டிருக்கின்றது.

பெரிய போர் நடவடிக்கைக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதை அனுசரணையாளர்களுக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்து விளக்கியுள்ளோம். ஆகவே, எம்மீது திணிக்கப்படும் போரை எதிர்கொள்வதைத்தவிர எமக்கு மாற்றுவழி இல்லை. சர்வதேசத்தால் முடிந்தால், சர்வதேசத்தின் பேராதரவுடன் கொண்டுவரப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்தி கண்காணிப்புக் குழுவை செயற்படவைத்தும் வன்முறைகளுக்கு முடிவுகட்டி சமாதான முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்கு ஸ்ரீலங்கா அரசை வழிக்குக் கொண்டுவர முடியும்.
ஜெனிவா மையம் மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனிவாப் பேச்சுக் களத்தைப் பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனிதாபிமான மையமான, மனித உரிமைகளின் மையமான ஜெனிவாவின் மையத்தில் நின்று கொண்டு எம்மக்களினது மனிதாபிமான வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். அந்த வகையில் எம்முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவுக்கு நாங்கள் வரும்போது தெட்டத்தெளிவாக எம்கருத்தை முன்வைத்துவிட்டுத்தான் வந்தோம். தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய எந்த ஒரு சிறு விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ள ஸ்ரீலங்கா அரசு ஒத்துழைக்கும் என்று நாம் நம்பவில்லை. முழுமையாக சர்வதேச சமூகத்தை நம்பியே அவர்களினது அழைப்புக்கு மதிப்பளித்து நாம் வந்தோம் என்று கூறியிருக்கிறோம். ஸ்ரீலங்கா அரசு ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். அது இங்கே நிரூபணமாகியிருக்கிறது. தனது முகத்தை ஸ்ரீலங்கா அரசு அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீலங்கா அரசு தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் தெளிவாகப் புரிந்திருக்கும்.

சர்வதேச சமூகம் எம்மை ஒரு நம்பிக்கையோடு அழைத்துக் கொண்டுவந்தது. ஆனால் ஸ்ரீலங்கா அரசு முரண்டுபிடித்து தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டி எங்களுடைய மக்களின் பேரவலத்துக்கு தீர்வேற்படுத்தும் ஒரு மிகச் சிறிய நடவடிக்கையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே உள்ள நடைமுறையான 6 லட்சம் மக்களுக்கான முக்கிய தரை வழிப்பாதையாகவுள்ள ஏ9 பாதையைத் திறப்பதை மறுத்துவிட்டது. இதனால் இந்தப் பேச்சு முயற்சியை முடக்கியிருக்கின்றார்கள். இந்தப் பழியை ஸ்ரீலங்கா அரசே ஏற்கவேண்டும்.

இருநாட்கள் நாங்கள் எடுத்த முயற்சிகளில் எந்தவிதமான இணக்கப்பாட்டுக்கும், விட்டுக்கொடுப்புக்கும் ஸ்ரீலங்கா அரசு முன்வரவில்லை. ஸ்ரீலங்கா அரசு அமைதி வழியில் எமது மக்களுடைய மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கோ, அரசியல் கோரிக்கைகளுக்கோ, அரசியல் தீர்வு முயற்சிகளுக்கோ எந்த விதத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த வெறிப்போக்கையும் ஒரு வன்முறைச் செய்தியாகத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குமான ஒரு வெளிப்பாட்டைதான் காட்டிக்கெண்டுள்ளனர். நிச்சயமாக இது தமிழ் மக்களை மட்டுமல்ல ஸ்ரீலங்காவையே ஒரு பேரழிவுக்குள் தள்ளுகிற முயற்சியாக ஸ்ரீலங்கா பேரினவாத தலைமைகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஸ்ரீலங்கா அரசின் அநீதியான கொடூரமான செயற்பாடுகளை முறியடிக்க முன்வரவேண்டும். உலகம் இதனை வெகுவிரைவில் புரியும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசு தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும்; எடுக்கும் நிலை உருவாகும்.

சிங்கள இனவாதத் தலைவர்களை ஒருவழிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் பெருமுயற்சி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. பேச்சின்போதும் தாக்குதல் முயற்சி வலிந்த தாக்குதல்களை இரு தரப்பும் மேற்கொள்ளாது என்று நோர்வே அனுசரணையாளர்கள் சொல்லியிருந்தனர். ஆனால், பேச்சு நடந்துகொண்டிருக்கும்போதே பேச்சு அரங்கில் இருக்கும்போதே தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வலிந்த தாக்குதல் முயற்சிகளை நாம் எடுத்துக்கூறினோம். ஆனால், இதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

ஸ்ரீலங்கா அரசானது கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டைப் பொய்யான காரணங்களைக் கூறி முடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்துவிடத்தான் முயற்சிக்கிறது. இதிலிருந்து எமது மக்கள் விடுதலைபெற சுதந்திரத்துக்கான போராட்டத்தைத் தொடர எமது தலைவரின் வழியில் நின்று போராடுவார்கள்.

புலம்பெயர் வாழ் எம்மக்கள் என்றுமில்லாத வகையில் முழுமையான ஆதரவை வழங்குவர். ஏனெனில், மனிதாபிமானம் பேசப்படுகிற ஜெனிவாவின் தலைநகரில் நாங்கள் வந்துநின்றுகொண்டு எம்மக்களின் மனிதாபிமானப் பிரச்சினையை முன்வைத்தோம். அது நிராகரிக்கப்பட்டிருப்பது எம்மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது. அவமானப்படுத்தியுள்ளது. ஆகவே, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் அணிதிரள வைக்கின்ற ஏற்பாட்டையே இப்போது ஸ்ரீலங்கா அரசு ஜெனிவாவிலில் வந்து செய்துவிட்டுப் போகிறது.

தமிழ் மக்களை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்க, கொன்றொழிக்க ஸ்ரீலங்கா அரசு முயன்று கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கை, கொடிய பயங்கரவாத நடவடிக்கை, எம்மக்களைத் தாங்கிநிற்கும் புலம்பெயர் மக்கள் அளிக்கின்ற உதவிகளை கொண்டு சேர்க்கும் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிதி முடக்கம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த ஸ்ரீலங்கா அரசு முயற்சிக்கிறது. தாயகத்திலே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளைக்கூட முடக்கியுள்ளனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் பலவீனப்படுத்தியுள்ளனர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளன. ஸ்ரீலங்கா அரசின் கொடூரங்கள் இது மட்டுமல்ல. இனியும் வரும். தலைமைப் பீடமே உத்தியை வகுக்கும்

எங்களுடைய மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் தேவையும் சூழலையும் கருதி எங்களது உத்திகளை தலைமைப்பீடம் எடுக்கும். எமது தேசியத்தலைவரின் வருடாந்த கொள்கைப்பிரகடனமானது மிக மிக முக்கியமானது. மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது. ஸ்ரீலங்கா அரசின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும், சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும், எமது மக்கள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் எமது தேசியத்தலைவரின் அந்தக் கொள்கைப்பிரகடன உரை வரும் என்று நினைக்கின்றேன். நிச்சயமாக நாங்களும் அந்த உரையை ஆவலாக எதிர்பார்க்கிறோம்.

ஸ்ரீலங்கா அரசானது பேச்சுகளுக்கான நாட்கள் தீர்மானிக்கப்பட்ட நிலையிலும் மிகப் பிரமாண்டமான ஒரு படையெடுப்பை எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை எம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை.

எமது மக்களின் நெற்றியிலே துப்பாக்கிகளை நீட்டி வைத்துக்கொண்டு எங்களை அழிக்க ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம் மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தவிர வேறு வழியில்லை.

ஆகவே, ஸ்ரீலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கை மற்றும் படையெடுப்புக்களை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்ள தங்களைப் பாதுகாக்க தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வழிதான் தமிழ் மக்களுக்கான வழி. அந்த இறுதிக்கட்டத்தைப் புறந்தள்ள முடியாது. போர் மீது எம் மக்கள் விருப்பமின்றி இருந்தாலும் துரதிஷ்டவசமாக மக்கள் எதிர்கொள்வர். நீதியும், நியாயமும், தர்மமும் எம் பக்கமே உள்ளது. அதுவே வெற்றி பெறும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

நன்றி>லங்கசிறி.

Sunday, October 29, 2006

சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை!!!

தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில் கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். ஜெனீவாவில் அது நிரூபணமாகியிருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாப் பேச்சுக்கள் - 02 முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு:
மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனீவா பேச்சுக் களத்தை பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனிதாபிமான மையமான மனித உரிமைகளின் மையமான ஜெனீவாவின் மையத்தில் நின்று கொண்டு எம்மக்களினது மனிதாபிமான வேண்டுகோளை விடுத்திருக்கிறோம். அந்த வகையில் எம்முயற்சி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் எமது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவுக்கு நாங்கள் வரும்போது தெட்டத்தெளிவாக என்கருத்தை முன்வைத்துவிட்டுத்தான் வந்தோம். தமிழ் மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய எந்த ஒரு சிறுவிட்டுக் கொடுப்பையும் மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று நாம் நம்பவில்லை. முழுமையாக சர்வதேச சமூகத்தை நம்பியே அவர்களினது அழைப்புக்கு மதிப்பளித்து நாம் வந்தோம் என்று கூறியிருக்கிறோம். சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். அது இங்கே நிரூபணமாகியிருக்கிறது. தனது முகத்தை சிறிலங்கா அரசாங்கம் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் தொடர்பான தனது நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் தெளிவாக புரிந்திருக்கும்.

சர்வதேச சமூகம் எம்மை ஒரு நம்பிக்கையோடு அழைத்துக் கொண்டு வந்தது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் முரண்டுபிடித்து தன்னுடைய பிடிவாதத்தைக் காட்டி எங்களுடைய மக்களின் பேரவலத்துக்கு தீர்வேற்படுத்தும் ஒரு மிகச் சிறிய நடவடிக்கையான யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலே உள்ள நடைமுறையான 6 இலட்சம் மக்களுக்கான முக்கிய தரை வழிப்பாதையாக உள்ள ஏ-9 பாதையை திறப்பதை மறுத்துவிட்டது. இதனால் இந்தப் பேச்சுவார்த்தை முயற்சியை முடக்கியிருக்கின்றார்கள். இந்தப் பழியை சிறிலங்கா அரசாங்கமே ஏற்க வேண்டும்.

இருநாட்கள் நாங்கள் எடுத்த முயற்சிகளில் எந்த விதமான இணக்கப்பாட்டுக்கும் விட்டுக்கொடுப்புக்கும் சிறிலங்கா அரசாங்கம் முன்வரவில்லை. சிறிலங்கா அரசாங்கம் அமைதி வழியில் எமது மக்களுடைய மனிதாபிமான பிரச்சனைகளுக்கோ அரசியல் கோரிக்கைகளுக்கோ அரசியல் தீர்வு முயற்சிகளுக்கோ எந்த விதத்திலும் அனுசரித்துப் போகும் தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவர்கள் யுத்த வெறிப் போக்கையும் ஒரு வன்முறைச் செய்தியாக தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கும் இன அழிப்பு யுத்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்வதற்குமான ஒரு வெளிப்பாட்டைத்தான் காட்டிக் கொண்டுள்ளனர். நிச்சயமாக இது தமிழ் மக்களை மட்டுமல்ல- சிறிலங்காவையே ஒரு பேரழிவுக்குள்ளுள் தள்ளுகிற முயற்சியாக சிறிலங்கா பேரினவாத தலைமைகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதைத்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.

சிங்கள மக்களும் தமிழ் மக்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் அநீதியான-கொடூரமான செயற்பாடுகளை முறியடிக்க முன்வர வேண்டும்.

உலகம் இதனை வெகுவிரைவில் புரியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பில் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும். எடுக்கும் நிலை உருவாகும்.

சிங்கள இனவாதத்தலைவர்களை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கு சர்வதேச சமூகம் பெருமுயற்சி எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

வலிந்த தாக்குதல்களை இருதரப்பும் மேற்கொள்ளாது என்று நோர்வே அனுசரணையாளர்கள் சொல்லியிருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே பேச்சுவார்த்தை அரங்கில் இருக்கும்போதே தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வலிந்த தாக்குதல் முயற்சிகளை நாம் எடுத்துக் கூறினோம். ஆனால் இதற்கான எந்த ஒரு ஆக்கப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கமானது கண்காணிப்புக்குழுவின் செயற்பாட்டை பொய்யான காரணங்களைக் கூறி முடக்கிவிட்டு மீண்டும் மீண்டும் எமது மக்கள் மீது இன அழிப்பு யுத்தத்தை கட்டவிழ்த்துவிடத்தான் போகிறார்கள். இதிலிருந்து எமது மக்கள் விடுதலை பெற- சுதந்திரத்துக்கான போராட்டத்தை தொடர எமது தலைவரின் வழியில் நின்று போராடுவார்கள்.

புலம்பெயர் வாழ் எம்மக்கள் என்றுமில்லாத வகையில் முழுமையான ஆதரவை வழங்குவர். ஏனெனில் மனிதாபிமானம் பேசப்படுகிற ஜெனீவாவின் தலைநகரில் நாங்கள் வந்து நின்று கொண்டு எம்மக்களின் மனிதாபிமானப் பிரச்சனையை முன்வைத்தோம். ஆனால் நிராகரிக்கப்பட்டுள்ளதால் எம்மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளனர். அவமானப்படுத்தியுள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அணிதிரள வைக்கின்ற ஏற்பாட்டையே இப்போது சிறிலங்கா அரசாங்கம் ஜெனீவாவிலிருந்து செய்துவிட்டுப் போகிறது.

தமிழ் மக்களை அனைத்து வகைகளிலும் அழித்தொழிக்க கொன்றொழிக்க சிறிலங்கா அரசாங்கம் முயன்று கொண்டிருக்கிறது. இராணுவ நடவடிக்கை, கொடிய பயங்கரவாத நடவடிக்கை, எம்மக்களைத் தாங்கி நிற்கும் புலம்பெயர் மக்கள் அளிக்கின்ற உதவிகளை கொண்டு சேர்க்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் ஆகியவற்றின் மூலம் இத்தகைய கொடூரத்தை நிகழ்த்த சிறிலங்கா அரசாங்கம் முயற்சிக்கிறது. தாயகத்திலே சர்வதேச மனிதாபிமான அமைப்புகளைக் கூட முடக்கியுள்ளனர். அவர்களின் அனைத்து நடவடிக்கைளையும் பலவீனப்படுத்தியுள்ளனர். இதனை சர்வதேச அமைப்புகள் கண்டித்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரங்கள் இதுமட்டுமல்ல. இனியும் வரும்.

எங்களுடைய மக்களுக்கு நன்மையளிக்கக் கூடியவகையில் தேவையும் சூழலையும் கருதி எங்களது உத்திகளை தலைமைப்பீடம் எடுக்கும். எமது தேசியத் தலைவரின் வருடாந்திர கொள்கைப் பிரகடனமானது மிக மிக முக்கியமானது. மிகவும் எதிர்பார்க்கப்படுகிற- எதிர்பார்க்கப்படும் விடயமாக உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான நடவடிக்கைகள் தொடர்பாகவும் சர்வதேச சமூகம் மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் தொடர்பாகவும் எமது மக்கள் எதிர்வரும் காலத்தில் முன்னெடுக்க விடயங்கள் தொடர்பாகவும் எமது தேசியத் தலைவரின் அந்த கொள்கைப் பிரகடன உரை வரும் என்று நினைக்கின்றேன். நிசச்யமாக நாங்களும் அந்த உரையை ஆவலாக எதிர்பார்க்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கமானது பேச்சுக்களுக்கான நாட்கள் தீர்மானிக்கப்பட நிலையிலும் மிகப் பிரம்மாண்டமான ஒரு படையெடுப்பை எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்துவிட்டது. அதனை எம் மக்கள் எப்படி எதிர்கொண்டனர் என்பது உலகறிந்த உண்மை.

எமது மக்களின் நெற்றியிலே துப்பாக்கிகளை நீட்டி வைத்துக்கொண்டு எங்களை அழிக்க ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும்போது எம்மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளும் வழியைத் தவிர வேறு வழியில்லை.
ஆகவே சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பு நடவடிக்கை மற்றும் படையெடுப்புகளை எதிர்கொண்டு அதனை வெற்றி கொள்ள- தங்களைப் பாதுகாக்க- தங்களது தலைவிதியை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையுடன் வாழும் வழிதான் தமிழ் மக்களுக்கான வழி. அந்த இறுதிக்கட்டத்தைப் புறந்தள்ள முடியாது. போர்மீது எம் மக்கள் விருப்பமின்றி இருந்தாலும் துரதிர்ஸ்டவசமாக மக்கள் எதிர்கொள்வர். நீதியும் நியாயமும் தர்மமும் எம் பக்கமே உள்ளது. அதுவே வெற்றி பெறும் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன

சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்த இதர கருத்துகளின் தொகுப்பு:
பிரபாகரனுக்கு பின்னரான தலைமை குறித்து?
காலம் காலமாக சிறிலங்கா அரசாங்கத்தால் இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட எம்மக்களினது உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவுமான போராட்டத்தின் தலைவராக- ஒடுக்கப்பட்ட அடக்குமுறைகளுக்குள்ளான தேசிய இனத்தின் தலைவராக- எம்மக்களை வழிநடத்திச் செல்லக்கூடிய சக்திமிக்க தலைவராக- அனைத்து மக்களாலும் மதிக்கப்படக்கூடிய கௌரவிக்கப்படக்கூடிய தலைவராக தலைவர் பிரபாகரன் தான் எங்கள் தேசிய இனத்தில் தோன்றிய தலைவர். அழிந்துபோகும் நிலையில் இருந்த மக்கள் அவருடைய காலத்தில்தான் இன்று உலகத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றனர். அவரால்தான் எம்மக்கள் மீண்டும் உயிர்த்தெழுந்து சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் சக்தியைப் பெற்றுள்ளனர்.

ஆகவே அவரது காலத்தில்தான் நாம் விடுதலை பெற வேண்டும் என்பதுதான் உலகத்தில் வாழ்கின்ற அத்தனை தமிழ் மக்களினது வேண்டுகையாக உள்ளது. ஆகவே அடுத்த தலைமைகளைப் பற்றி எமது தமிழ்த் தேசிய இனம் சிந்திக்க வேண்டிய தேவையோ அவசியமோ இல்லை. ஆப்பிரிக்க மக்களுக்கு ஒரு நெல்சன் மண்டேலா- அமெரிக்க மக்களுக்கு ஜோர்ஜ் வாசிங்ரன்- கியூபா மக்களுக்கு பிடல் காஸ்ட்ரேப- சீன மக்களுக்கு மா-சேதுங் இப்படி பல்வேறு நாடுகளில் ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தேசியத் தலைமை சுதந்திரத்தை வழிநடத்திச் செல்லுகிற உறுதிமிக்க தலைமைதான் வழிகாட்டியிருக்கிறது.

அதேபோல்தான் எங்கள் தேசத்துக்கும் வழிகாட்ட வழிநடத்த எங்களது தேசியத் தலைவர் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களையும் தேசத்தையும் நேசிக்கிற தலைவராக உள்ளதால் எங்களது மக்கள் அசைக்க முடியாத சக்தியாக இருப்பார்கள்.

அன்ரன் பாலசிங்கம் பங்கேற்காமை ஏன்?
கலாநிதி அன்ரன் பாலசிங்கம் உடல்நலக் குறைவாக இருப்பதால் பயணிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பயணிக்க முடியாத நிலையில் இருப்பதால் அவர் இப்பேச்சுக்களில் பங்கேற்கவில்லை.

இந்தியா தொடர்பிலான நிலைப்பாடு என்ன?
இந்தியா தொடர்பான எமது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக எமது தேசியத் தலைவர் அவர்கள் பல வழிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தியாவில் வாழுகிற பல கோடி தமிழ் மக்களின் அபிலாசைகளையும் இந்தியா புரிந்திருக்கிறது. பிராந்திய நாடு என்ற வகையில் இந்தியாவும் வன்முறைக்கு முடிவு கட்டி சமாதான வழியில் அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தை பலமுறை வெளிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் ஏற்பாட்டில் நடைமுறையிருந்தல் வடக்கு-கிழக்கு இணைப்பை சிறிலங்கா அரசாங்கம் இப்போது சட்டவிரோதமாக்கியிருக்கிறது. இதன் மூலம் அரசியல் வழித்தீர்வுக்கான அனைத்து முயற்சிகளையும் முடக்கிவிட்டுத்தான் சிறிலங்கா அரசாங்கம் பேச்சு மேசைக்கு வந்தது. அரசியல் தீர்வு பற்றிப் பேசுவோம் என்று சொல்கிறார்களே தவிர அவர்களிடம் அரசியல் தீர்வு எதுவுமே இல்லை என்பதைத்தான் அறிய முற்பட்டும் அறிய முடியாமல் போன விடயம்.

ஐரோப்பியத் தடை பற்றி?
எம் மக்கள் மீதான தடைதான் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை. அது சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பரப்புரைகளால் ஏற்படுத்தப்பட்ட தடை.

ஐக்கிய இலங்கைக் கட்டமைப்புக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எரிக் சொல்ஹெய்ம் கருத்து குறித்து?
எரிக் சொல்ஹெய்ம் அவர்களும் சர்வதேச சமூகமும் அண்மைக்காலமாக சமரச வழியில் அண்மைத்தீர்வை எட்ட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றனர். ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ சாதாரணமான மனிதாபிமான பிரச்சனைகளுக்கே தீர்வைக்காண முடியாத அரசாங்கமாக உள்ளது. அப்படியான அரசாங்கம் எப்படி எமது தமிழ் மக்களின் அபிலாசைகளையும் அரசியல் கோரிக்கைகளையும் உரிமைகளையும் மதித்து தீர்வை முன்வைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியான விடயம்.

அண்மையில் வடக்கு-கிழக்கைப் பிரித்து தமிழர் தாயகத்தை- தமிழ் மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களுடைய மனங்களை நோகடித்து அரசியல் தீர்வுக்கான வழிகளையே சீர்குலைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்களுடைய நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எவ்வளவு தூரம் கணக்கில் எடுக்கப் போகிறார்கள் என்பது இப்போதைய கேள்வி. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த உதாசீனப்போக்கு- சர்வதேசத்தை மதிக்காத இந்தப் போக்கு- தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை- தமிழர்களின் அபிலாசைகளை புறந்தள்ளி தமிழ் மக்களின் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்துவிடுகிற இந்தப் போக்கை தமிழ் மக்கள் இனி ஒருபோதும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயம் செய்யும் நிலையை நோக்கி தாங்களே தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையேயான ஒப்பந்தம் தொடர்பில்?
சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையேயான ஒப்பந்தமானது ஒரு சந்தர்பவாதக்கூட்டா? தங்களுடைய சுயநலம் நோக்கம் கொண்ட கூட்டா? உண்மையாகவே தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக் கொடுப்பதற்கும் வழங்குவதற்குமான கூட்டா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் கூட்டை உருவாக்கியுள்ள அதே நேரத்தில் சிறிலங்கா அரசாங்கமானது ஒரு மனிதப் பேரவலத்தை எமது மண்ணில் உருவாக்கி- நிலைமைகளை மோசமாக்கி- யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை சீர்குலைத்து- மனிதாபிமான நெருக்கடிகளை ஏற்படுத்தி- களநிலையில் மிக மோசமான சூழ்நிலையை உருவாக்க முயன்றனர். எந்த ஒரு சூழ்நிலையிலும் இது ஒரு அரசியல் தீர்வை முன்வைப்பதற்கான கூட்டாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. இந்தக் கட்டத்தில் ஒரு சாதாரண விடயத்துக்குத் சிறிய தீர்வைத் தந்து நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கலாம். ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதனைக்கூட விரும்பவில்லை என்கிறபோது அவர்களின் கூட்டில் எங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டாக இருக்கலாம் என்றுதான் நாங்கள் நம்புகிறோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

படுதோல்வியில் முடிந்தது பேச்சுவார்தை?

ஏ-9 பாதை திறக்கப்படுமாயின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
ஜெனீவா பேச்சுவார்த்தை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் றோயல் நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒக்ரோபர் 28, 29 ஆகிய திகதிகளில் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இப்பேச்சுக்களுக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் அனுசரணை வழங்கியது.
இணைத்தலைமை நாடுகள், 2006 ஓகஸ்டில் வெளியிடப்பட்ட தமது அறிக்கையில், இரண்டு தரப்பும் உடனடியாக வன்முறைகளை நிறுத்தி, இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படியும், சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும்படியும் இரண்டு தரப்பையும் கேட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் தமது தொடக்க உரையின்போது, சிறிலங்கா அரசாங்கத்தினாலும், அதன் பாதுகாப்புப் படைகளாலும் ஏற்படுத்தப்பட்ட அவசர மனிதாபிமானப் பிரச்சினைகள் பற்றிக் கருத்துத் தெரிவித்திருந்தார்கள். யுத்தநிறுத்த உடன்பாட்டினை 100 வீதம் அமுல்படுத்துவதும், யுத்தநிறுத்தக் கண்காணிப்பக்குழுவினைப் பலப்படுத்துவதும் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலையினைக் கொண்டுவரும் என்றும், சமாதான முயற்சிகளில் ஒரு திருப்திகரமான தீர்வினை எட்டுவதற்கு உதவும் என்றும் தன் ஆரம்ப உரையில் விடுதலைப் புலிகள் தெரிவித்தார்கள்.

மக்களுடைய துன்பங்களை பேச்சுக்களின் போது விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினார்கள். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், ஏ-9 பாதை மூடப்பட்டமையானது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குள் வாழ்ந்து வந்த ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை, அறுபதாயிரம் சிறிலங்கா ஆயுதப்படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலைக்குள் வாழும் நிலைக்குள் கொண்டுசென்றுள்ளது என விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தார்கள்.

இப்பாதை மூடப்பட்டதானது புதிய பேர்ளின் சுவரினைத் தோற்றுவிக்கின்றது என விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினர். மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான உரிமையை மீறுகின்ற நடவடிக்கையாக ஏ-9 பாதையை மூடியமையானது அமைவதுடன் அது யுத்தநிறுத்த உடன்படிக்கையை மீறுவது மட்டுமன்றி அது குடும்ப உறவினர்கள் பிரிவதற்கும் மனித அவலத்திற்கும் வழிவகுத்தது.

உணவை மட்டும் வழங்குவது சிறைக்கைதிகளுக்கு உணவளிப்பது போன்றதென விடுதலைப் புலிகள் குறிப்பிட்டனர். ஏ-9 பாதையை மீளத் திறப்பதற்கு மறுப்பதற்குத் திருப்திகரமான காரணங்கள் சிறிலங்கா அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. ஏ-9 பாதை 1994-2002 வரை மூடப்பட்டிருந்ததை சிறிலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலேயே அவ்வாறு நடைபெற்றதென்பதைச் சுட்டிக்காட்டிய விடுதலைப் புலிகள், மக்களை மீண்டும் போர்ச்சூழலுக்குள் தள்ளி, ஒரு மனிதப் பேரவலத்தைத் தோற்றுவித்து, ஓர் அடக்கப்பட்ட மக்களுடன் பேச்சுக்களை நடாத்துவதற்கே சிறிலங்கா அரசாங்கம் விரும்புகிறதா என்று கேள்வி எழுப்பினர்.
விடுதலைப் புலிகள் யுத்தநிறுத்த உடன்படிக்கை மற்றும் ஜெனீவா - 1 ஆகியவற்றை அமுல்படுத்துவது பற்றியும் கண்காணிப்புக்குழுவின் பங்களிப்பை வலுப்படுத்துவது பற்றியும் வலியுறுத்தினர். எவ்வாறிருந்தும், சிறிலங்கா அரசாங்கம் மேற்குறிப்பிட்ட விடயத்தில் மிகக்குறைந்தளவே கவனம் செலுத்தியது. தமது அதிருப்தியை வெளிப்படுத்திய விடுதலைப் புலிகள் இரண்டு தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து சமாதான முயற்சிகள் இடம்பெறுவதற்கு அத்திவாரமாக அமைந்த யுத்தநிறுத்த உடன்படிக்கை தவிர்ந்த வேறொரு ஆவணம் இருப்பின் அதை இனங்காட்டும்படி கேட்டனர்.
இரு பிரதான சிங்களக் கட்சிகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை விடுதலைப் புலிகள் வரவேற்றனர். இனப்பிரச்சினை தொடர்பாக தெற்கிலுள்ள அரசியல் கட்சிகளுக்கிடையே ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் அரசியல் பேச்சுக்களில் ஈடுபடுவதற்குத் தாம் தயாராக இருப்பர் என விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இயல்புநிலை ஏற்படுத்தப்பட்டு, ஒரு உகந்த சூழ்நிலை தோற்றுவிக்கப்படும் என விடுதலைப் புலிகள் எதிர்பார்க்கின்றனர்.
கலந்துரையாடலின் போது, சிறிலங்கா அரசாங்கம் தமிழர் தாயகத்தில் சனநாயகம் மற்றும் பன்மைத் தன்மைபற்றிய விடயங்களை எழுப்பியது. சிறிலங்கா அரசாங்கத்தைவிடத் தாம் சனநாயகக் கோட்பாடுகளுக்குத் தம்மை அர்ப்பணித்திருப்பதாகக் கூறிய விடுதலைப் புலிகள் இடைக்காலத் தன்னாட்சி நிர்வாகக் கட்டமைப்பிற்கான வரைபை உதாரணமாக எடுத்துக்கூறினர்.

சனநாயகம் மற்றும் பன்மைத்தன்மை ஆகியவற்றில் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்து முகமாக சிறிலங்கா அரசாங்கம் ஆறாவது திருத்தத்தை அகற்ற முடியுமா என விடுதலைப் புலிகள் சவால் விட்டனர். சனநாயக வழிமுறையூடாக தனிநாட்டை அமைப்பதைத் தடுக்கும் சிறிலங்கா அரசியலமைப்டபின் ஆறாவது திருத்தத்தையும் விடுதலைப் புலிகள் சுட்டிக்காட்டினர். தமிழ் மக்களின் அபிலாசைகளை நிரூபிப்பதற்கு தமிழர் தாயகத்திலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரை அகற்றி சர்வதேச கண்காணிப்பாளர் முன்னிலையில் ஒரு கருத்துக்கணிப்பை நடாத்துவதற்கும் விடுதலைப்புலிகள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு சவால் விடுத்தனர்.
அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கு முன்னர் ஏ-9 பாதை திறக்கப்படுமாயின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்தற்குத் தயாராக இருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். எவ்வாறிருந்தும், சிறிலங்கா அரசாங்கம் இதற்கு சாதகமாகப் பதிலளிக்கவில்லை. அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்பதற்கு முன்னர் ஏ-9 பாதையைதத் திறப்பதற்கு நோர்வே ஏற்பாட்டாளர்களும் கண்காணிப்புக்குழுவும் தமது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

பேச்சுவார்த்தையில் ஏ-9 பாதையை திறக்கமறுத்தது சிறிலங்கா.

ஜெனீவாவில் இருநாட்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏ-9 பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்துவிட்டது.
இருநாட்கள் பேச்சுக்குப் பின்னர் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சிறிலங்கா அரசாங்க தரப்புக்குழுத் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோ இதனைத் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
6 இலட்சம் மக்களுக்கான தரைவழிப்பாதையை மூடி அவர்களை சிறைக்கைதிகளைப் போல் உருவாக்கியுள்ள நிலையில் ஏ-9 பாதையை திறக்க வேண்டிக்கொண்ட போதும் அதனை மறுத்துவிட்டது சிறிலங்கா அரசாங்கம்.
இத்தகைய ஒரு சிறிய விட்டுக்கொடுப்பைக் கூட சிறிலங்கா அரசாங்கம் செய்யாதிருப்பது யுத்தநிறுத்த மீறலும் மனித உரிமை மீறலுமாக இருக்கிறது.
சிறிலங்கா அரசாங்கத்தின் விட்டுக்கொடுக்காத போக்கை எடுத்துச் சொல்ல வேண்டிய துரதிர்ஸ்டவசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.
நன்றி>புதினம்.

பாரிய அளவில் இராணுவம் குவிப்பு: இளந்திரையன் எச்சரிக்கை!!!

யாழ். வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கான தயாரிப்புக்கள் மற்றும் ஒத்திகைகளை மேற்கொண்டிருப்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜெனீவாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் நாள் பேச்சுக்கள் தொடங்குவதற்கு முன்பாக ஊடகவியலாளர்களிடம் இளந்திரையன் கூறியதாவது:
ஆத்திரமூட்டும் நடவடிக்கையின் மூலமாக சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் நடைபெறும் பேச்சுக்களிலும் அது எதிரொலிக்கும்.
சிறிலங்காவின் வலிந்த தாக்குதல்கள் மற்றும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமையால் உருவாக்கப்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் இணைத் தலைமை நாடுகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் அழைப்பை ஏற்று தமிழீழ விடுதலைப் புலிகள் குழு ஜெனீவா வந்துள்ளது.
இராணுவ நடவடிக்கைகளுக்கு அப்பால் மனித அவலங்கள் தொடர்பில் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் யாழ். மக்களினது வாழ்க்கையை மேலும் சீர்குலைக்கும் வகையில் சிறிலங்கா இராணுவம் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. கொழும்பின் இராணுவ நடவடிக்கைக்கு இப்போது சர்வதேச சமூகம்தான் சாட்சியாகும் என்றார் இளந்திரையன்.
பலாலி இராணுவத் தளத்திலிருந்து மேலதிகமான துருப்புக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை வடபோர்முனை முன்னரங்க நிலைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பலாலி, தொண்டமனாறு நீரேரி, வளலாய் மற்றும் வடமராட்சிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று சனிக்கிழமை இரவு முழுவதும் பாரிய பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் திடீர் யாழ். வருகையைத் தொடர்ந்து இந்த பயிற்சி நடவடிக்கைகளும் மேலதிக இராணுவக் குவிப்பும் நடைபெற்றுள்ளது.
பலாலி இராணுவ தளத்துக்கு நேற்று சென்ற சரத் பொன்சேகா, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி மற்றும் 51, 52, 53 ஆம் படையணிகளின் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரால் பலாலி இராணுவ முகாமிலிருந்து நடத்தப்பட்டு வரும் யாழ். பண்பலை (FM) வானொலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
வரணி, உசன், கச்சாய், நாவற்காடு, எழுதுமட்டுவாள், கொடிகாமம், மீசாலை கிழக்கு, அல்லாரை மற்றும் தனங்கிளப்பு ஆகிய தென்மராட்சி பிரதேசங்களில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வடபோர்முனை பகுதியில் இருதரப்பு ஆர்ட்டிலறி மற்றும் மோர்ட்டார் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சிக்கான தொலைபேசித் தொடர்புகள் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் துண்டிக்கப்பட்டுள்ளன.
நன்றி>புதினம்.

இராணுவத்தரப்பில் 613 பேர் பலி- 2,956 பேர் படுகாயம்.

சிறிலங்கா இராணுவத் தரப்பில் கடந்த யூலை 31 ஆம் நாள் முதல் ஒக்ரோபர் 18 ஆம் நாள் வரையிலான மோதல்களில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 613 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,956 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

யூலை 31 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் (முகமாலை, ஹபரணை, காலி சேர்க்காமல்) காலை வரையிலான 74 நாட்கள் வரையிலான விவரங்கள்:

யாழ்ப்பாணம்:
யாழ். இராணுவத் தலைமையகக் குறிப்புக்களின் படி 62 நாட்களில் அதாவது ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் காலை 6 மணிவரை 29 அதிகாரிகள் மற்றும் 333 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 92 அதிகாரிகள் மற்றும் 1,718 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழில் ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் செப்ரெம்பர் 6 வரை 19 அதிகாரிகள் மற்றும் 202 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 49 அதிகாரிகள் மற்றும் 851 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

செப்ரெம்பர் 6 ஆம் நாள் இரவு 6 மணி முதல் செப்ரெம்பர் 9 ஆம் நாள் இரவு 7 மணி வரையில் 2 அதிகாரிகள் மற்றும் 32 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 9 அதிகாரிகள் மற்றும் 188 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

செப்ரெம்பர் 9 ஆம் நாள் இரவு 7 மணி முதல் ஒக்ரோபர் 11 ஆம் நாள் காலை 6 மணி வரையில் 46 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 10 அதிகாரிகள் மற்றும் 188 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒக்ரோபர் 11 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் காலை 6 மணிவரை 8 அதிகாரிகள் உட்பட 53 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒக்ரோபர் 11 ஆம் நாள் முகமாலை சமர் தொடர்பிலான உத்தியோகப்பூர்வ விவரங்கள் யாழ். தலைமையகத்தில் வெளிப்படுத்தப்படவில்லை.

கட்டைப்பறிச்சான்- மகிந்தபுர- சேருனுவர பிரதேசங்கள்:
ஓகஸ்ட் 2 முதல் ஓகஸ்ட் 30 வரை: 12 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 7 அதிகாரிகள் மற்றும் 94 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.

மாவிலாறு:
யூலை 31 ஆம் நாள் முதல் ஓகஸ்ட் 25 வரை 2 அதிகாரிகள் மற்றும் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 8 அதிகாரிகள் மற்றும் 106 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
செப்ரெம்பர் 9 ஆம் நாளன்று 7 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். மொத்தம் 113 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பூர்:
யூலை 31 ஆம் நாள் முதல் செப்ரெம்பர் 26 வரை 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 11 அதிகாரிகள் மற்றும் 156 இராணுவத்தினர் படுகாயமடைந்தனர்.
74 நாட்களில் ஒரு அதிகாரி உட்பட 10 இராணுவத்தினர் காணவில்லை.

ஒக்ரோபர் 11-க்குப் பின்னர்.....

முகமாலை சமர்:
முகமாலை சமரைப் பொறுத்த வரையில் சிறிலங்காவின் தேசிய ஊடக சபையின் அறிக்கையின்படி 18 அதிகாரிகள் மற்றும் 128 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 616 பேர் படுகாயமடைந்தனர். 6 யுத்த டாங்கிகள் இழக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு சிதைவடையச் செய்யப்பட்டதை இராணுவ முன்னரங்க நிலைகளிலிருந்து பார்க்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இயங்கு நிலையில் ஒரு டாங்கி இருப்பதை சிறிலங்கா புலனாய்வுத்துறை உறுதி செய்துள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு டாங்கியும் ரூ. 10 மில்லியன் மதிப்பிலானது. அப்படியான நிலையில் முகமாலை சமரில் மட்டும் ரூ. 60 மில்லியன் இழக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளிடம் 3 டாங்கிகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது தெளிவாகத் தெரியவில்லை என்றும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.
ஹபரணைத் தாக்குதலில் 116 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 130 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காலி தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த ஒருவரும் பொதுமகன் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். 8 போராளிகள் உடல் கிடைத்துள்ளதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்றும் அந்த ஊடகம் கூறியுள்ளது.

கொல்லப்பட்டோர் மொத்த எண்ணிக்கை:
ஆக முகமாலை சமர் இழப்பைச் சேர்க்கும் போது (18 அதிகாரிகள் மற்றும் 128 இராணுவத்தினர்) மொத்தம் 496 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஹபரனையில் 116 கடற்படையினர் மற்றும் காலியில் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை சேர்க்கும் போது 613 ஆகவும் அதிகரிக்கிறது.

மொத்தமாக யூலை மாதம் முதல் காலி தாக்குதல் வரை கொல்லப்பட்ட இராணுவத்தினரின் எண்ணிக்கையானது 613.

படுகாயமடைந்தோர் மொத்த எண்ணிக்கை:
யூலை 31 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் காலை 118 இராணுவ அதிகாரிகளும் 2,081 இராணுவத்தினரும் படுகாயமடைந்துள்ளனர் என்பது உத்தியோகப்பூர்வ தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதனுடன் முகாமாலையில் 616- ஹபரணையில் 130 மற்றும் காலியில் 11 கடற்படையினர் காயமடைந்துள்ளதை சேர்க்கும்போது மொத்தமாக 2,956 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர்.
- 72 நாட்களை கணக்கிட்டுப் பார்த்தால் சராசரியாக ஒருநாளைக்கு 8 இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 41 பேர் படுகாயமடைந்தும் உள்ளனர்.
- இந்த எண்ணிக்கையானது இராணுவம் மற்றும் கடற்படையினர் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பிலானவை மட்டுமே. இதர சம்பவங்களையும் கணக்கிட்டால் எண்ணிக்கை உயரும்.

- மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒரு நாளைக்கு சராசரியாக மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் எனவும் கொழும்பு ஊடகம் கூறியுள்ளது.
நன்றி>புதினம்.

Saturday, October 28, 2006

முதல்நாள் பேச்சுக்களில் எந்த பயனும் ஏற்படவில்லை.

முதல் நாள் பேச்சுக்களில் எந்தப் பயனும் ஏற்படவில்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் முதல் நாள் பேச்சுக்களில் இரு தரப்பும் அறிக்கைகளை வாசித்ததே பலனுள்ள விடயம் இதனை விட எந்தப்பயனுள்ள இணக்கங்களும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த காலபேச்சுக்களில் ஏற்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தவும் தற்போதைய பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் படி வலியுறுத்தியதுடன் தமிழ் மக்களது மனிதபிமான பிரச்சினைகளை அரச தரப்பின் முன்வைத்ததாகவும் முக்கியமாக 6 லட்சம் மக்களிற்கு பிரச்சினையாகவுள்ள ஏ 9 பாதை திறப்பு விடயத்தை தாம் வலியுறுத்தியதாகவும் அதற்கு அரசதரப்பில் இருந்து எந்த வித பதிலும் கிடைக்கவில்லை.
நாளைய தினம் பாதை திறப்பிற்கான அரசின் சாதகமான பதிலை தாம் எதிர் பார்ப்பதாகவும் ஏ 9 பாதை திறப்பதற்கு சாதகமான பதில் கிடைக்கமால் தொடர்ந்து பேச்சுக்களை நகர்வது சாத்தியம் இல்லை ஏ 9 பாதை மூடப்பட்டது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் பாதை திறப்பு விடயத்தில் அரச தரப்பினர் மற்றும் சர்வதேச சமூகம் ஒரு சாதகமான நிலைக்கு வர வேண்டும் என தெரிவித்த தமிழ்செல்வன்

மக்களின் மனிதபிமான பிரச்சினைகளில் அக்கறை காட்டமால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்ற விடயத்தையே அரச தரப்பினர் வலியுறுத்தி வந்ததாகவும் அப்படியாயின் எவ்வகையான அரசியல் தீர்வை வைத்திருக்கிறீர்கள் என தாம் கேட்டதற்கு பதில் அளித்த அரச தரப்பினர் தற்போது தம்மிடம் எந்த தீர்வு திட்டமும் இல்லை எனவும் இப்போது தான் தாம் எதிர் கட்சியுடன் கூட்டுச்சேர்ந்திருப்பதாகவும் விரைவில் அவர்களுடன் இணைந்து தீர்வு திட்டம் ஒன்றை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்ததாக தமிழ்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் இன்றைபேச்சுக்களில் எந்தபயனும் கிட்டவில்லை எனினும் நாளைய தினம் திட்டமிட்டபடி பேச்சுக்கள் நடைபெறும் எனவும் தமிழ்செல்வன் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்க உரை.

தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித அவலங்கள் என்ன? எத்தகைய வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன? என்பது உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் நிலைமையை ஜெனீவாவில் இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் விளக்கினார்.
சிறிலங்கா அரசாங்கக் குழுவினருடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயக நிலைமைகளை விளக்கி சு.ப. தமிழ்ச்செல்வன் ஆற்றிய தொடக்க உரை:

இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டுவரும் நோர்வே அரசாங்கத்திற்கும் பேச்சுக்களை நடாத்துவதற்கு இடமளித்து உதவிய சுவிற்சலாந்து அரசாங்கத்திற்கும் முதலில் எமது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்.

இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கு மதிப்பளித்து எமக்கு சமாதானத்திலுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதற்காகவே நாம் இங்கு வந்துள்ளோம்.

ஐந்து வருடத்திற்கு முன்பு மார்கழி 24, 2001 இல் நாம் ஒருதலைப்பட்சமாக ஒரு மாதத்திற்கு யுத்தநிறுத்தம் ஒன்றினைப் பிரகடனப்படுத்தினோம். இலங்கை அரசாங்கம் எமது சமாதான சமிக்கைகளை ஊதாசீனப்படுத்தியது. நோர்வே அனுசரணையாளரின் அயராத உழைப்பினால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் வரையப்பட்டது. எமது தேசியத் தலைவரும் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதில் கையொப்பமிட்டனர். யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு சர்வதேச மட்டத்தில் அமோக வரவேற்புக் கிடைத்தது.

இதுவரைகாலமும் சர்வதேச ஆதரவுடன் இருதரப்பினராலும் கையொப்பமிடப்பட்டு அமுலுக்கு வந்த ஒரேயொரு ஒப்பந்தமாக இது விளங்கியது. இராணுவ சமநிலை காரணமாக ஏற்பட்ட இந்த ஒப்பந்தம் பல தசாப்தங்களாக இடம்பெற்றுவரும் இனப்பிரச்சினையை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும் என நாம் நம்பினோம்.

அரசியலமைப்புச் சாக்குப்போக்கு
ஆறு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைகளில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் வாழும் மக்களுக்கு இயல்பு வாழ்க்கையினைக் கொண்டுவருவதற்கான பல முன்மொழிவுகள் கொண்டுவரப்பட்டன. யுத்தநிறுத்த உடன்படிக்கையின் பயன்களை எமது மக்கள் அனுபவிப்பதற்காக ஒரு இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்குக் கோரினோம். சிறிலங்கா அரசியலமைப்பைக் காரணங்காட்டி அதுவும் மறுக்கப்பட்டது. பின்னர், வடகிழக்கில் இயல்புவாழ்க்கையை உருவாக்குவதற்கான முக்கிய அமைப்பாக சிரானை செயற்படுத்த அரசு உறுதிமொழி வழங்கியும் அது செயலற்றதாக்கப்பட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் யுத்தநிறுத்த உடன்படிக்கையை வலுப்படுத்துவதாகவன்றி வலுச் சமநிலையைக் குழப்புவதாகவே அமைந்தது. தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி மக்களின் வாழ்க்கையில் இயல்புநிலையைத் தோற்றுவிப்பது எட்டாக் கனியாகவே இருந்தது.

சிரான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தை முடக்கப்பட்ட நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்நிலையில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துவதற்கான அவசர தேவையினை கருத்திற்கொண்டு இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைக்கான ஆலோசனையை முன்வைத்தோம். பேச்சுக்கள் இதனடிப்படையில் மீள ஆரம்பிப்பதை தடுக்கும் நோக்கோடு பாராளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது. தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. தமிழர்கள் இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை ஆதரித்த தமது 22 பிரதிநிதிகளை தமிழ் மக்கள் தெரிவுசெய்தனர். இவர்கள் தமிழர் தாயகத்தின் அதீத பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இருப்பினும் சிறீலங்கா அரசு மக்களின் குரலை உதாசீனம்செய்து இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையைப்பற்றிப் பேசுவதற்கு வரமறுத்தது.

இக்காலகட்டத்தில் எமது தாயகப்பகுதியில் சுனாமிப் பேரவலம் டிசம்பர் 2004 இல் நிகழ்ந்தது. எமது கட்டமைப்புக்கள், படையணிகள், உள்ளுர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களுமே, நினைத்துப்பார்க்க முடியாத அவலத்தை சந்தித்த எமது மக்களுக்குக் கைகொடுக்க முன்வந்தனர். சர்வதேச சமூகம் மிகப்பெரிய அளவில் சுனாமி உதவியினை வழங்குவதற்கு முன்வந்தபோதிலும் இந்தத் தீவில் சுனாமி அவலத்தின் மிகப் பெரிய பங்கிற்கு முகம்கொடுத்த எமது தாயகப்பகுதிக்கு மிகக் குறைவாகவே சர்வதேச உதவி எட்டியது. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து ஆறு மாதத்திற்குப் பின்பு இருதரப்பு மற்றும் பன்னாட்டு நன்கொடையாளர்களின் ஊக்குவிப்புடனும் நோர்வேயின் அனுசரணையுடனும் சுனாமிப் பொதுக்கட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்பந்தம் சர்வதேச உதவி தமிழர் தாயகத்தையும் எட்டச்செய்து சமாதான முன்னெடுப்பகளுக்கும் பெரும் அனுசரணையாக இருந்திருக்கும். இதுவும் அரசியலமைப்பை சாட்டாகவைத்து நிராகரிக்கப்பட்டது.

அண்மையில் வடகிழக்கு இணைக்கப்பட்டது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று சிறீலங்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தமையானது இந்நீதிமன்றம் சிங்களப் பெரும்பான்மைப்போக்கிற்கு உதவுகின்ற தொடர்ச்சியான செயற்பாட்டின் ஓர் அங்கமாகக் கருதப்படவேண்டும் என்பதையே காட்டுகின்றது. வடகிழக்கு தமிழர்களின் தொன்மையான தாயகப்பிரதேசம். ஆயிரமாயிரம் வருடங்களாக இது தமிழர் தாயகப்பிரதேசமாகவே இருந்திருக்கிறது. சிறீலங்கா நீதிமன்றத்தின் அண்மைய தீர்மானமானது சிறீலங்கா அரசியலமைப்பின்கீழ் சிறீலங்காப் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியாது என்ற கருத்திற்கு குவிந்துவரும் சாட்சியங்களில் ஒன்றாக அமைந்திருக்கின்றது.

ஜெனீவா – 1 உம் ஒட்டுக்குழுக்களும்
இந்நிலையில் மகிந்த ராஜபக்ச யதார்த்தவாதியாகத் தன்னை இனங்காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்தார். அவர் 2006ம் ஆண்டு முற்பகுதியில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுல் படுத்துவது பற்றி பேசுவதற்கு ஒப்புக்கொண்டார். இக்காலகட்டத்தில் கண்காணிப்புக் குழு, ஒட்டுக்குழுக்களைப் பற்றியும் அரச படைகள் அவர்களுடன் சேர்ந்தியங்குவது பற்றியும் தம்முடைய விசாரணைகள் அடங்கிய ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. டிசம்பர் 2005 இலிருந்து பேச்சுக்களுக்கான இணக்கம் ஜனவரி 26 இல் அடையுமட்டும் ஒட்டுக்குழுக்களின் வன்முறைகள் மிகவேகமாக அதிகரித்தன. கண்காணிப்புக் குழுவின் ஒட்டுக்குழுக்கள் பற்றிய அறிக்கை இவ்வன்முறைகளில் எவ்வித மாற்றத்தினையும் கொண்டுவரவில்லை. இத்தீவு முழுமையான நிழல் யுத்தம் ஒன்றிற்குத் திரும்பியது. யுத்தநிறுத்த ஒப்பந்தத்தைப் பலவீனப்படுத்தும் வகையில் நிலமைகள் வளர்ந்துவருவதுபற்றி நாம் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்கூறினோம்.

ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் யுத்தநிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசு விலகிச்செயற்படும் ஒட்டுக்குழுக்களுக்கும் அரச படைகளுக்கும் இடையே உள்ள ஒத்துழைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் நாம் ஆதாரங்களுடன் சமர்ப்பித்தோம். உயர்பாதுகாப்பு வலயங்களினால் மக்கள் அடையும் நெருக்கடி பற்றியும் உணர்த்தப்பட்டது. தமிழ் மக்களது விவசாய நிலங்கள், மீன்பிடிப்பிரதேசங்கள், பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், வீடுகள் என்பன இராணுவமயமாக்கப்பட்டமைபற்றி நாம் சுட்டிக்காட்டினோம். அத்தோடு இதனால் எமது அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் கொலை செய்யப்படுவதையும் எடுத்துரைத்தோம். யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் சரத்து 1.13 இற்கமைய தமிழர் தாயகத்தில் நாம் செய்துவந்த எமது அரசியல் வேலைகளை இவ்வன்முறைகளினால் நிறுத்தவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானோம். இவ்வாதாரங்களைக் காட்டி யுத்தநிறுத்த உடன்படிக்கையின் சரத்து 1.8 , 1.13 களை அமுல்ப்படுத்துமாறு கேட்டுக்கொண்டோம்.
சமாதான நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு யுத்தநிறுத்தம் 100 வீதம் அமுல் படுத்தப்படவேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் ஜெனீவாப் பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அடுத்த சுற்றுப்பேச்சுக்கான திகதியும் தீர்மானிக்கப்பட்டது. ஜெனீவா-1 பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட உடன்பாட்டினை அமுல் படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதிலேயே அடுத்தசுற்றுப் பேச்சுவார்த்தை தங்கியிருக்கின்றது என்பதை நாம் வலியுறுத்தினோம். நேர்மையான யுத்தநிறுத்த அமுலாக்கலையே நாம் எமது மக்களுக்காக அரசிடமிருந்து எதிர்பார்த்தோம்.

ஜெனீவா-1 இன் பின்பு - பிரகடனப்படுத்தப்படாத போர்.
கவலைக்கிடமாக, ஜெனீவாவில் உடன்பாடுகண்ட எவையுமே இலங்கை அரசினால் அமுல் படுத்தப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் நடவடிக்கை தமிழர் தாயகப் பிரதேசத்தின் நிலமையை மோசமாக்கி எம்மையும் தமிழ் மக்களையும் விரக்தியின் விளிம்பிற்கு இட்டுச் சென்றது. சிறீலங்கா இராணுவத்தின் அப்பட்டமானதும் கொடூரமானதுமான குழந்தைகளினதும் சிறுவர்களினதும் படுகொலைகள் உள்ளுரிலும் வெளியூரிலும் வாழும் தமிழர் மனங்களை உறையச்செய்தது. சர்வதேச சமூகம்கூட இச்சம்பவங்களைப் பற்றி தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. இலங்கை இராணுவம் சர்வதேச சமூகத்தினால்; தனது படுகொலைகள் கண்டனத்திற்குள்ளாகும்போது நேரடி வன்முறைகளிலிருந்து விலகி ஒருபடி மேலே சென்று விமானத்தாக்குதல், ஆட்டிலறித் தாக்குதல் மூலம் பொதுமக்கள் கொலைகளில் ஈடுபட்டது. திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் மக்கள்மீது தரை, கடல், விமானத்திலிருந்து தாக்குதல் மேற்கொண்டது. இதன்மூலம் பிரகடனப்படுத்தப்படாத போரில் அரசு இறங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.

இலங்கை அரசின் அழுத்தத்தினால் ஐரோப்பிய ஒன்றியம் எமது அமைப்பின்மேல் விதித்த தடையே சிறிலங்கா அரசாங்கமும் இராணுவமும் அவ்வாறான நடவடிக்கைகளில் தயக்கமின்றி ஈடுபட உதவியது. இது சமாதான நடவடிக்கையினையும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டினையும் பாதிக்கும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் எடுத்துக்கூறினோம். இத்துரதிர்ஸ்ட நிலையை நாம் கண்காணிப்புக் குழுவிற்குச் சுட்டிக்காட்டியபோது அவர்கள் அதைப் புரிந்துகொண்டனர். இலங்கை அரசு எம்மீது தடைவிதிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கறைபூசுவதற்கு முயன்றமையானது யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அமுல்ப படுத்துவதில் அரசாங்கத்திற்குள்ள அக்கறையின்மையினையே எடுத்துக்காட்டுகின்றது.

ஜெனீவா உடன்பாடுகள் அமுல்ப்படுத்தப்படாத நிலையில் நோர்வே அனுசரணையாளர்கள் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதற்கு எம்மை அழைத்திருந்தார்கள். நாம் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளுக்கு மதிப்பளித்து யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை அமுல்ப்படுத்துவதற்கு அது முக்கியமானது என்பதையும் மதித்து நோர்வேயின் அழைப்பை ஏற்றோம். முன்னைய நேரடிப் பேச்சுக்களில் எடுத்துக்கொண்ட உடன்பாடுகள் எவையும் அமுல்ப்படுத்தப்படாத நிலையில் ஒஸ்லோவில் அரசுடனான நேரடிப் பேச்சுக்கள் சாத்தியமற்றதாகியது. எமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்குரிய உத்தரவாதங்கள் கிடைக்கப்படாத பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றமாட்டோம் எனக் கூறினோம். இருப்பினும், நோர்வேயுடனும் கண்காணிப்புக் குழுவுடனும் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுபற்றிக் கலந்துரையாடினோம். ஆனால் சிறீலங்கா அரசு கண்காணிப்புக் குழுவின் முக்கியத்துவத்தை உதாசீனம்செய்து எவ்வித ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளிலும் பங்குபற்றாமல் வெளியேறியது. அவர்கள் தீவிற்குத் திரும்பியதும் இராணுவ வன்முறைகள் மேலும் தீவிரமடைந்ததுடன் பிரகடனப்படுத்தப்படாத போர் ஒன்றையும் ஆரம்பித்தது.

இக்கால கட்டத்தில் ரோக்கியோவில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் சந்திப்பைத் தொடர்ந்து அது ஒட்டுக்குழுக்களின் வன்முறையை நிறுத்துமாறும் தீவு முழுவதும் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்குமாறும் இலங்கை அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. அத்தோடு எமக்கு சமாதானத்தின்பால் உள்ள ஆர்வத்தினையும் வரவேற்றது. எமது செயற்பாடுகளை ஆதரித்து 15 வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒரே தினத்தில் உரிமைக் குரல் என்ற எழுச்சி நிகழ்வைக் கொண்டாடி அவர்களின் ஆதங்கங்களையும் அபிலாசைகளையும் தீர்த்துவைக்கும் பிரதிநிதிகளாக எம்மை வரித்துக்கொண்டார்கள்.

தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்படாத போர் தீவிரமடைந்துகொண்டு வந்தது. கவலைக்கிடமாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை இதற்கு ஒரு காரணமாக இருந்தது. நான்கு வருட யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் சந்திக்காத அவலங்களை எமது மக்கள் சந்தித்தனர். திருகோணமலையிலும் வாகரையிலும் எமது தளங்கள் மீதே இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இது நாம் காத்துவந்த பொறுமையை சோதித்தது. நாமும் சில தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். அரசின் தாக்குதல்களை நிறுத்தும் முகமாகவே எமது தற்காப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

மாவிலாறு
திருகோணமலையில் உருவான மாவிலாறு விடயம் சீறிலங்கா அரசின் தொடர்ந்துவரும் நிலைப்பாட்டின் ஓர் அங்கமே. தமிழ் சிங்கள சமூகத்தவர்களிடையேயான நீர் விநியோகத்திலேயே பிரச்சினை ஆரம்பமானது. தமிழ் மக்கள் தாம் நீர் விநியோகத்திலும் புனரமைப்புக்களிலும் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தினர். தமது பிரச்சினைகளை வெளிப்படுத்துமுகமாக மாவிலாறு மதகின் கதவுகளை மூடினர். இக்கதவுகள் எமது கட்டப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ளதால் நாம் எமது மக்களுடன் பேசி இப்பிரச்சினைக்கு தீர்வுகொண்டுவர முயற்சித்தோம். ஒரு சிவில் அதிகாரி மக்களை அணுகி அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்ப்பதன்மூலம் இவ்விடயத்திற்கு முடிவுகொண்டு வந்திருக்கலாம். இலங்கை அரசு ஒரு சிவில் பிரச்சினைக்கு சிவில் அணுகுமுறையை ஊதாசீனம்செய்து இராணுவரீதியில் கதவைத்திறக்க முயற்சித்தது. அதற்காகப் பல புதிய போர் முனைகளைத் திறந்தது. எமது கட்டுப்பாட்டுப் பகுதியில் பாரிய ஆட்டிலெறித் தாக்குதல்களை மேற்கொண்டது. இந்த இராணுவ நகர்வை நிறுத்தவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம். இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்கும் மூதூர் பிரதேசத்திலிருந்தே இராணுவ நகர்வுகளும் எறிகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டமையால் மூதூரிலுள்ள இராணுவ நிலைகள் மீது எமது நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இராணுவம் மக்கள் மீது எறிகணைத் தாக்குதல்களை நடாத்திப் பலரை கொன்றுவிட்டு எம்மீது பழி சுமத்தியது. இந்நிலையில் நாம் எமது பழைய நிலைகளுக்குத் திரும்பினோம்.

இதற்கிடையில் அச்சமயம் கிளிநொச்சியில் தங்கியிருந்த நோர்வேயின் விசேட தூதுவர் ஜோன் ஹான்சன் பவரோடு இது பற்றிக் கலந்துரையாடினோம். அவருடைய ஆலோசனையின்படி எமது கட்டுப்பாட்டிலுள்ள பூட்டியிருந்த மதகுக் கதவுகளை கண்காணிப்புக் குழுவினரோடு சென்று திறந்துவிடுவதாக முடிவெடுத்தோம்.

கண்காணிப்புக் குழுத் தலைவரோடு அவ்விடத்திற்குச் சென்றோம். எமது வருகையை அறிந்த அரச படைகள் அணைக்கட்டின்மீது எறிகணைத் தாக்குதல் நடத்தின. கண்காணிப்புக் குழுத் தலைவரினதும் ஏனைய கண்காணிப்பாளர்களினதும் உயிர்கள் ஆபத்திற்குள்ளாகின. அவர்கள் தமது நோக்கத்தை நிறைவேற்றாமல் திரும்பினர். மறுநாள், மதகுகள் எம்மால் திறந்துவிடப்பட்டன.

இந்த சிவில் பிரச்சினைக்கு அரசு மேற்கொண்ட நடவடிக்கை சிறிலங்கா அரசாங்கத்தின் இரகசிய இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமைந்தது. இதற்கு அது 10,000 துருப்புக்களை பயன்படுத்தியமை எம்மை திருகோணமலையிலுள்ள சம்பூரிலிருந்து வெளியேற்றும் நோக்கம் கொண்டதாகவே தோற்றமளித்தது. கண்காணிப்புக் குழுவும் "இந்த நடவடிக்கைகள் தண்ணீருக்கானவையல்ல, வேறு நோக்கம் கொண்டவை போலத் தோன்றுகின்றது " என்று குறிப்பிட்டது. பலரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும்வகையில் அரசு எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை கைப்பற்றி இதன்மூலம் உடன்படிக்கையிலிருந்து விலகியது.

வலிந்த இராணுவத் தாக்குதல்கள்
இராணுவம் வலிந்த தாக்குதல்களை நடத்தியபோதெல்லாம் நாம் கண்காணிப்புக் குழுவிற்குத் தெரியப்படுத்தியும் அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்கி அவர்களை அவ்விடங்களுக்கு அழைத்துச்சென்று காட்டியுமிருந்தோம். குறிப்பாக, கிழக்கில் தாக்குதல்கள் இராணுவத்தாலேயே முன்னெடுக்கப்பட்டது என்பதை கண்காணிப்புக் குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் திருகோணமலை, அம்பாறை என தொடர்ந்த தாக்குதல்கள் யாழ்குடாவின் முகமாலை முன்னரங்க நிலைக்கும் சென்றன. உடன்படிக்கை சரத்து 2.7 இல் ஒப்புக்கொள்ளப்பட்ட 16 பாதைகளில் பல அரசினால் மூடப்பட்டன. யாழ்ப்பாணத்திற்கான ஒரேயொரு தரைப்பாதையான யு-9 பாதையும் மூடப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கு செல்லும் விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. முகமாலைத் தாக்குதல்கள் தொடர 24 மணித்தியால ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்களின் நாளாந்த வாழ்வை இது மிகவும் பாதித்தது. இத்தாக்குதல்கள் எம்மாலேயே ஆரம்பிக்கப்பட்டது என அரசாங்கம் குற்றம்சாட்டியது. நாம் உடன்பாட்டு விதிகள் 3.8, 3.9 இன் பிரகாரம் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பிற்கும் அவர்களின் நடமாடும் சுதந்திரத்திற்கும் அனுமதி வழங்கி களத்தில் சென்று உண்மை நிலைகளை அறியச் சொன்னோம். ஆயினும், அரச படைகள் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உண்டு எனவும் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கமுடியாது எனவும் மறுத்து அவர்கள் பிரசன்னத்தைத் தடுத்தன. இதனால் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடு வலுவிழந்தது. இதனைச் சாதமாகப் பயன்படுத்தி வலிந்த தாக்குதலை இராணுவம் தொடர்ந்து முன்னெடுத்தது.
இப்படியான ஒரு சூழலில்தான் நோர்வேயினதும் இணைத் தலைமை நாடுகளினதும் வேண்டுகோளிற்கிணங்க நாம் நல்லெண்ண சமிக்கையாக ஓர் நிபந்தனையற்ற நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இணங்கினோம். அரசு நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு காலமிழுத்து இணங்கியபோதிலும், தனது வலிந்த இராணுவ நடவடிக்கைகளையும் விமானத் தாக்குதலையும் தொடர்ந்தது. பேச்சுக்களுக்கு முன்னர் எம்மீது பாரிய போரைத் திணிக்க அரசு முயன்றது. நாம் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்த அதே சமயத்தில் வாகரையில் வலிந்த தாக்குதல்களை இராணுவம் மேற்கொண்டது. சிறிலங்கா அரசு போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாரிய படைநடவடிக்கைகளை முன்னெடுக்க முயன்றால் எமது முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டி ஏற்படும் எனத் தெரியப்படுத்தினோம்.

ஏ-9 பாதை மூடப்பட்டதால் ஏற்பட்ட மக்களின் அவலங்களைக் கருத்தில் கொண்டு அது திறக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். அதற்கான எமது பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாகச் சொன்னோம். இலங்கை அரசு எமது நல்லெண்ணச் சமிக்ஞையை நிராகரித்து ஒரு புதிய வலிந்த தாக்குதலை முகமாலையில் மேற்கொண்டது. இதனை எதிர்த்து நாம் எமது நிலைகளில் இருந்து தற்காப்புத் தாக்குதல் நடாத்தினோம். பெரும் இழப்புக்களைச் சந்தித்த நிலையில் அரச படைகள் தாக்குதலை நிறுத்திக்கொண்டன. மக்களின் அவல நிலை பற்றி அதனுடைய கரிசனையற்றபோக்குத் தொடர்ந்தது.

மனிதாபிமானப் பணியாளர்களைத் தடுத்தல்
வாகரையில் இடம்பெயர்ந்திருக்கும் 50,000 அகதிகளுக்கு உதவி செய்வதற்கு மனிதாபிமான உதவிகள் செய்யும் அமைப்புகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள்கூட சிறீலங்கா அரசின் கடும்போக்கை மாற்றவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் பல மனிதாபிமான அமைப்புக்களின் வேலைகள் சிறீலங்கா அரசின் எரிபொருள், கட்டுமானப் பொருள் தடையினால் முடக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு மருத்துவமனையில் தமது பணிகளைப் புரிந்துவந்த எம்.எஸ்.எவ் மருத்துவ நிறுவனத்தின் 4 நிபுணர்களை சிறீலங்கா அரசு வெளியேற்றியுள்ளது. இதைவிட ஐ.சி.ஆர்.சி நிறுவனத்தினால் கிளிநொச்சி மருத்துவ சேவை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட வைத்திய நிபுணர் குழு ஒன்றிற்கு சிறீலங்கா அரசு அனுமதி மறுத்துள்ளது. தற்பொழுது கிளிநொச்சி மருத்துவமனையில் மருத்துவ நிபுணர் ஒருவர்கூட இல்லை.

மக்கள்
சர்வதேச ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் காலத்தில் பொதுமக்களின் கொலைகளும் காணாமல்போதலும் தொடர்கின்றன.
சிறீலங்கா இராணுவம் ஒட்டுப்படைகளைக் கருவியாகப் பயன்படுத்தி ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 870 பொதுமக்கள் கொலைசெய்தும், 408 மக்கள் காணாமல்போகச் செய்தும் இருக்கிறது. இவர்களில் 98 பேர் சிறுவர்கள். இரவில் இராணுவ நடமாட்டத்தின்பொழுது நாய் குரைப்பதால் பீதியில் நித்திரையற்ற நிலையில் மக்கள் உள்ளார்கள். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் பீதி மிக அதிகமாகவே உள்ளது.

அல்லைப்பிட்டியில் இரு குழந்தைகள் பெற்றோரின் அரவணைப்பில் தூங்கும்போது குடும்பமாகவே கொலைசெய்யப்பட்டனர். இரண்டு வயதுக் குழந்தையைத் தூக்கிவைத்திருந்த தகப்பனுடன் சேர்த்து அந்தக் குழந்தையும் கொல்லப்பட்டது. பட்டினிக்கெதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் திருகோணமலையில் குப்புறப்படுத்த நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அண்ணளவாக 300 சிறுவர்கள் அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் கடத்திச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஜெனிவாப் பேச்சுவார்த்தையின்பொழுது அரச குழுவின் தலைவர் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்டதைப் பற்றியும் திருகோணமலையில் 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதைப் பற்றியும் விசாரணைகள் நடத்துவதாகவும் குற்றவாளிகள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறினர். இவ்விசாரணைகளுக்கு என்ன நடந்தது?

பாரபட்சமற்ற வான்தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் அதேயளவான பொதுமக்களின் உயிர்களைக் காவுகொண்டுள்ளன. 53 மாணவிகள் முல்லைத்தீவில் கொல்லப்பட்டனர். புதுக்குடியிருப்பில், குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 2 குழந்தைகளும் உள்ளடங்குவர். மட்டக்களப்பில் நிறைமாதக் கர்ப்பிணியின் வயிற்றில் எறிகணைச் சன்னங்கள் தாக்கியதால் வயிற்றிலேயே குழந்தை இறந்தது.

181,643 மக்கள் தமிழர் தாயகப் பகுதியில் இடம்பெயர்ந்துள்ளார்கள். திருகோணமலையில் இடம்பெயர்ந்த பெரும்பான்மையானோருக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவி கிட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அனேக மக்கள் மழையிலும் மரங்களின் கீழுமே வாழ்கின்றார்கள். ஒரு தாய் மழை நேரத்தில் மரத்தின் கீழ் குழந்தையைப் பிரசவித்தார். பெற்றோர் இரவில் மழை பெய்யும்போது எழும்பி தமது குழந்தைகளை மழையிலிருந்து காப்பாற்றும்விதமாக அவர்களின் தலைகளின்மேல் கிடைத்ததைக் காப்பாகப் பிடித்திருக்கிறார்கள். கடனெடுத்து நெல் விதைத்தோர் தமது பயிர்களை விட்டுவிட்டு இடம்பெயர்ந்து கடனை அடைக்கமுடியாத நிலையில் உள்ளார்கள். 81 பாடசாலைகள் அழிக்கப்பட்டோ அல்லது இடப்பெயர்வினால் செயற்படாமலோ உள்ளன. இது பாதுகாப்பு வலையத்தினால் முடக்கப்பட்ட 68 பாடசாலைகளுக்கு மேலதிகமானது.

யு-9 பாதை மூடப்பட்டதால் ஏற்பட்ட பட்டினிச்சாவு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடி கொடூரமான, வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். குழந்தைகள் பால்மா இல்லாமல் போசாக்கற்று அவர்களுடைய வளர்ச்சியில் நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளார்கள். மீனவர்கள் இரவு ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். விவசாயிகள் நெருக்கடி நிலமையாலும் எரிபொருள் தட்டுப்பாட்டாலும் விதை நெல் தட்டுப்பாட்டாலும் தமது பயிர்ச் செய்கைகளை முன்னெடுக்கமுடியாமல் உள்ளார்கள். நாளாந்த சம்பளத்திற்கு உழைப்போருக்கு வேலையில்லாமல் அவர்களது குடும்பங்கள் பட்டினியை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளது.

எமது பகுதிகளுக்கு எரிபொருள் எடுத்துச் செல்வதற்கு இராணுவத்தினால் விதிக்கப்பட்ட தடையும் யாழ்ப்பாணத்தில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடும் அங்குள்ள பிரதான மருத்துவமனைகளின்; செயற்பாடுகளை முடக்கியுள்ளது. மின்சார உற்பத்திக்கு எரிபொருளையே நம்பியிருக்கும் இடங்களில் இந்தத் தடை எத்தகைய மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இலங்கை இராணுவத்தினதும் அதனது ஒட்டுக்குழுக்களினதும் கைகளில் மக்கள் படும் அவலங்கள் பற்றிய பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இத்தீவில் நிரந்தர சமாதானத்தையும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வையும் தரவல்ல போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பலப்படுத்துவதே இப்பேச்சுவார்த்தைமூலம் நாம் பெறக்கூடிய உச்சக்கட்ட அடைவு ஆகும். மூன்று தசாப்தகாலப் போரைத் தணிவுக்குக் கொண்டுவந்த பெருமை இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்திற்கு உண்டு. இதனை அமுல்ப்படுத்துவதில் சர்வதேசத்தின் பங்கு மிகவும் காத்திரமாக இருக்கிறது. இலங்கை அரசின் மேல் அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் அதனுடைய இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி அதனுடைய போர் நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குவதையும் நிறுத்தும் வல்லமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு.

சிறீலங்கா அரசு பேச்சுவார்த்தையில் பங்குகொள்வதை நாம் வரவேற்கின்றோம். இங்கு அவர்கள் தமிழர் தாயகத்தில் உள்ள மக்களின் அவலங்களைத் தீர்ப்பதற்கு ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம்.

யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை 100 வீதம் அமுல் படுத்தவும் கண்காணிப்புக்குழுவின் பணிக்கு வலுச் சேர்க்கவும் உதவும்படி சர்வதேச சமூகத்தையும் இணைத்தலைமை நாடுகளையும் நோர்வே அனுசரணையாளர்களையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நடவடிக்கையானது எமது மக்களின் வாழ்வில் இயல்பு நிலையைக் கொண்டுவரவும் அதனூடாக சமாதானப் பேச்சுக்களை முன்னெடுக்கவும் ஒரு திருப்தியான தீர்வை எட்டுவதற்கும் உத்தரவாதமளிப்பதற்கும் உதவும் என்று நாம் நம்புகின்றோம் என்றார் சு.ப. தமிழ்ச்செல்வன்.

சிறிலங்கா அரசாங்கக் குழுவின் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா உரையில் இடம்பெற்றவை:

- கௌரவமான அமைதியையை நாட்டில் உருவாக்குவதற்கான அடிப்படையான சூழ்நிலைக்கு இந்தப் பேச்சுக்கள் உதவும

- உண்மையான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் அமைதி உருவாக்கப்பட வேண்டும்.

- அமைதி முயற்சிகளில் உள்ள ஈடுபாட்டினால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டை மகிந்த கூட்டினார். மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துட்ன இணைந்துள்ளது.

- முன்னைய ஜெனீவா பேச்சுக்களுக்கும் யூன் ஓஸ்லோ பேச்சுகளுக்கும் விடுதலைப் புலிகள் வர மறுத்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவில்லை.

- தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்க மகிந்த ராஜபக்ச தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் வல்லுநர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

- பெப்ருவரி ஜெனீவா பேச்சுகளுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் வன்முறைகளால் 897 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டுள்ள பொதுமக்களையும் உள்ளடக்கிய 1363 படுகொலைகளுக்கு புலிகள் பொறுப்பு.

- சிறிலங்கா சமாதான செயலகப் பிரதிப் பணிப்பாளரையும் அவர்கள் கொன்றுள்ளனர்.

- புலிகளின் படையணிகளில் சிறார் தொடர்ந்து சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

- மாவிலாறு நீரை 60 ஆயிரம் மக்களுக்கு விடுதலைப் புலிகள் திறந்துவிட யூலையில் மறுத்தமைக்குப் பின்னர் வன்முறைகள் படிப்படியாக அதிகரித்தன.

- ஓகஸ்ட் மாதம் மூதூரிலிருந்து முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர். வடபகுதியிலிருந்து 1991ஆம் ஆண்டு முதல் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் புலிகள் வெளியேற்றினர். அதன் பின்னர் மன்னாரிலிருந்து வெளியேற்றினர். தற்போது கிழக்கு வாழும் முஸ்லிம்களை பலியாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்.

- ஒக்ரோபர் 16ஆம் நாள் ஹபரணையில் 100க்கும் மேற்பட்ட கடையினர் கொல்லப்பட்டனர்.
- விடுதலைப் புலிகளின் வன்முறைகளால் ஆத்திரமடையும் சிங்களவர்கள் இயல்பிலே மோதலில் ஈடுபடும் நிலை உருவாக்கப்படுகிறது.

- கொப்பிட்டிகெல்லவவில் யூலை 15ஆம் நாள் 64 பொதுமக்களை கிளைமோர் மூலம் விடுதலைப் புலிகள் கொன்றனர்.

- முஸ்லிம்களை வெளியேற்றும் நோக்கில் மூதூரில் ஊடுருவி புலிகள் தாக்குதல் நடத்தியதில் 53 ஆயிரம் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.

- கெப்பிட்டிக்கொல்லவவில் நேற்றும் கிளைமோர் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கில் அக்கரைப்பற்றில் சிறிலங்காவின் சிறப்பு அதிரடிப்படை வாகனம் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது. வவுனியாவில் மன்னார் வீதியில் இன்று காலைகூட சிறிலங்கா காவல்துறை நிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

- இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் பேச்சுக்களை தொடர மகிந்த ராஜபக்ச முடிவு செய்தார்.

- பேச்சுகளில் நாம் ஈடுபடுவதானது பலவீனத்தை வெளிப்படுத்துவது அல்ல. இலங்கையின் அனைத்து மக்களுக்கும் குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களுக்கான அமைதியை உருவாகக் வேண்டும் என்ற எமது ஈடுபாட்டின் வெளிப்பாட்டிலேயே நாம் பேச்சுக்களுக்கு முன்வந்துள்ளோம்.

- நாளாந்தம் நடைபெறும் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டு எமது நாட்டைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை மேற்கொள்கிறோம் என்றார் நிமல் சிறிபால டி சில்வா.
நன்றி>புதினம்.

ஜெனீவாப் பேச்சுக்கள் தொடங்கின.




ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இன்று சனிக்கிழமை தொடங்கியது.
ஜெனீவாவின் வரம்பே மாநாட்டு மண்டபத்தில் சுவிஸ் நேரம் காலை 8.45 மணிக்கு தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியான கொலின் அம்மையார் உரையாற்றினார்.

அவர் தனது உரையில், "சிறிலங்காவின் மனிதப் படுகொலைகள் என்பது ஒருபுறமிருக்க இராணுவ நடவடிக்கைகள் இன்னொரு புறமிருக்க ஒரு சமூகம் அல்லது இனம் ஒரு மூலையில் தன்னுடைய எதிர்பார்ப்புக்களை இழந்து அவலங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று தமிழர் தரப்பு விரும்புகிறது. அதே நேரத்தில் இராணுவ நடவடிக்கைகள் கைவிடப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தமிழர்களுக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று மற்றொரு சமூகம் கூறுகிறது" என்றார்.

அதன் பின்னர் நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹ்யெம் ஆற்றிய தொடக்க உரை:
இலங்கையில் இரண்டு தரப்பினாரலும் நடத்தப்படுகின்ற மனிதப் படுகொலைகள்- இராணுவ ரீதியான நடவடிக்கைகள் துர்ப்பாக்கியகரமானது. இதனை சர்வதேச சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது. அத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காது.

ஏற்கெனவே நடத்தப்பட்ட இத்தகைய பேச்சுக்களின் முடிவில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை இரண்டு தரப்பினரும் இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. நீங்கள் எதைப் பற்றிப் பேசப் போகிறீர்கள் என்பதற்கு அப்பால் தமிழ்-சிங்கள-முஸ்லிம்களின் வாழ்வாதார பிரச்சனையான மனித உரிமைகள் பற்றியும் ஒரு இனம் அல்லது சமூகம் அல்லது மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை எவ்வாறு அனுமதிக்க வேண்டும் விரும்புகிறார்களோ அதைப் பேசுவதுதான் சிறப்பாக இருக்கும்.

புனர்வாழ்வு, மேம்பாடு, மீள்நிர்மானத்துக்கான உதவிகளை இருதரப்புக்கும் வழங்க சர்வதேச சமூகம் தயாராக உள்ளது. இருதரப்பினரும் தங்கள் தரப்பின் அவலங்களைப் புரிந்துகொண்டு ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும்.

இந்தத் தீர்வுகளுக்கு இருதரப்பும் ஒத்துழைப்பை வழங்காதுபோனால் இத்தகைய பேச்சுக்கள் துர்ப்பாக்கியமானதாக அமையும்.

லெபனான் படுகொலைகள்- பாலஸ்தீன முரண்பாடுகள் தீர்க்கப்பட்டு தீர்வு காணும் சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயான பிரச்சனைக்குத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில்தான் சர்வதேச சமூகம் விருப்பமும் ஆர்வமும் கொண்டிருக்கிறது.

ஒரு சமூகம் எதை எதிர்பார்க்கிறது- மற்றொரு சமூகம் அந்த எதிர்பார்ப்புக்கேற்ப எதனை வழங்க உள்ளது என்கிற அடிப்படையில் இந்தப் பேச்சுவார்த்தை அமையுமேயானால் அடுத்தகட்ட பேச்சுக்கான சமிக்ஞையாக இருக்கும் என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றிய பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா பேச்சுக் குழுவினரை கைலாகு கொடுக்கச் செய்து ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதன் பின்னர் இருதரப்பினரும் பேச்சுக்களைத் தொடங்கினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், தமிழர் தாயக மனித அவலங்களை விளக்கி உரையாற்றினார்.
யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது தொடக்கம் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுக்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு இணக்கப்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவில்லை.

8 மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஜெனீவாப் பேச்சுக்களின் போதும் இணக்கம் காணப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டு பாரிய மனித அவலங்களை தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

ஏ-9 பாதையை மூடி யாழ். குடாநாட்டின் 5 இலட்சம் மக்களை பட்டினிச் சாவு நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தற்போது தள்ளியுள்ளது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் ஜெனீவாப் பேச்சுவார்த்தையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அளிக்கப்படுகிற இறுதிச் சந்தர்ப்பம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எற்கெனவே தெரிவித்திருந்தார்.
இருப்பினும் மனிதாபிமானப் பிரச்சனைகளை பேச மறுத்து அரசியல் விவகாரங்களையே முதன்மையாகப் பேச வேண்டும் என்று சிறிலங்கா அரச தரப்பு பிடிவாதம் பிடித்து வந்தது.
ஆனால் தமிழர்களின் மனிதாபிமான பிரச்சனைகளைப் பேச வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழு வலியுறுத்தியது.

இதனால் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரல் தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டது.
அதன்பின்னர் இதரப்பினரும் தங்களது அறிக்கைகளை சமர்பித்து முதலில் உரையாற்ற நேற்று பின்னிரவு இணக்கம் காணப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை இருதரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சோவியத் ரஸ்யாவின் பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ரஸ்யாவின் மிக்கேல் கொர்ப்பச்சேவ் மற்றும் அமெரிக்காவின் பில் கிளிண்டன் ஆகியோர் சந்தித்துப் பேசிய மாநாட்டு மண்டப இடத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்.

Friday, October 27, 2006

இன்று ஜெனீவாப் பேச்சுக்கள் ஆரம்பம்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான சிறிலங்கா அரசாங்கக்குழுவின் பேச்சுவார்த்தை இன்று ஜெனீவாவில் நடைபெற உள்ளது.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்டப்பட்டது தொடக்கம் நடத்தப்பட்ட பல சுற்றுப் பேச்சுக்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஒரு இணக்கப்பாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் செயற்படுத்தவில்லை. இதனால் தமிழர் தாயகத்தில் பாரிய மனித அவலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஏ-9 பாதையை மூடி யாழ். குடா நாட்டின் 5 இலட்சம் மக்களை பட்டினிச் சாவு நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தற்போது தள்ளியுள்ளது.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை நடைபெற உள்ள ஜெனீவாப் பேச்சுவார்த்தையானது சிறிலங்கா அரசாங்கத்துக்கு அளிக்கப்படுகிற இறுதிச் சந்தர்ப்பம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் எற்கெனவே தெரிவித்திருந்தார்.

இருப்பினும் மனிதாபிமானப் பிரச்சனைகளை பேச மறுத்து அரசியல் விவகாரங்களையே முதன்மையாகப் பேச வேண்டும் என்று சிறிலங்கா அரச தரப்புக்குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து இன்றைய பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா குழுவினருடன் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இலங்கைக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் மற்றும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் தனித்தனியே நேற்று ஆலோசனை நடத்தினர்.

இன்றைய பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் எரிக் சொல்ஹெய்ம் உரையாற்றுகிறார். அடுத்து சுவிஸ் பிரதிநிதி உரையாற்றுவார். இந்த இரு நிகழ்வுகளுக்கும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

நாளை ஜெனீவா நேரம் மாலை 4.30 மணியளவில் பேச்சுக்கள் தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு நடத்தப்பட உள்ளது.

அமெரிக்காவிலிருந்து ஜெனீவா சென்றுள்ள விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோகர் விஸ்வநாதன் உருத்திரகுமார் தலைமையில் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேன், இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், மகளிர் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தமிழ்விழி, சமாதான செயலகத்தைச் சேர்ந்த செல்வி ஆகியோர் விடுதலைப் புலிகளின் சார்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் அமைச்சர்களான ரோகித போகொல்லாகம, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பேரியல் அஸ்ரப், சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோகன்ன, முன்னாள் காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
நன்றி>புதினம்.

"சிறப்பு தன்னாட்சி": இந்தோனேசியா யோசனை.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண சிறப்புத் தன்னாட்சி முறையைக் கையாளலாம் என்று சிறிலங்கவுக்கு இந்தோனேசியா யோசனை தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க, இந்தோனேசிய அரச தலைவர் சுசிலோ பங்க யதோயொனோவை சந்தித்துப் பேசினார். ஜெனீவாப் பேச்சுக்களானது போரை முடிவுக்கு கொண்டு வந்து யுத்த நிறுத்தத்தைக் காப்பாற்றும் என்று நம்புவதாக இந்தோனேசிய அரச தலைவரிடம் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் குறித்து இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் ஹசன் விரயுத ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது:
இந்தோனேசியாவின் ஆர்ச்சே அமைதிப் பேச்சுக்களை முன்மாதிரியாக சிறிலங்கா எடுத்துக் கொள்ளலாம். கடந்த ஓகஸ்ட் மாதம் ஆர்ச்சே விடுதலை இயக்கப் போராளிகள் அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு 29 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்.
நிரந்தரமான அமைதி ஏற்பட சிறப்பு தன்னாட்சியை போராளிகளுக்கு அளிக்கலாம் என்று சிறிலங்கா பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். அதனை அதிகாரப் பகிர்வு என்றும் கூறலாம் என்றார் ஹசன் விரயுத.
நன்றி>புதினம்.

முதலில் மனிதாபிமான பிரச்சனைகளை தீர்க்கவேண்டும்.

ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டால்தான் பேச்சுக்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டால்தான் பேச்சுக்கள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு பேச்சுக் குழுக்களுடன் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
நாளை தொடங்க உள்ள பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.
ஜோன் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்கு முன்னதாக ஏ.எஃப்.பி. செய்தி ஊடக நிறுவனத்துக்குக் கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமானப் பிரச்சனைகளை விவாதிக்க விரும்புகிறோம். வார இறுதிக்குள் மனிதாபிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டால்தான் பேச்சுக்கள் வெற்றி பெற்றதாக நாம் கருத முடியும். படுகொலைகள் நிறுத்தப்பட்டு இயல்பு நிலைமை திரும்ப வேண்டும் என்றார் அவர்.
சிறிலங்கா அரசாங்கக் குழுவின் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நாங்கள் விவாதிக்க விரும்புகிறோம் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

வெலிக்கந்தையூடான படை நகர்வு முறியடிப்பு.

வெலிக்கந்தையூடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை 7.00மணியளவில்; எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர்.



இத் தாக்குதலின் போது சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் முன்னேறியவேளை திருகோணமடுவை நோக்கி படைநகர்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறிலங்காப் படையினரின் படை நகர்வை விடுதலைப்புலிகள் இவர்களை வழிமறித்து முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் இவ் முறியடிப்புத் தாக்குதலின் போது சிறிலங்காப் படையினர். 5 கொல்லப்பட்டதுடன், 15ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தநிலையில் பின் வாங்கியுள்ளதாக அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

-சங்கதி-

ஏ-9 பாதை திறக்கப்படாவிட்டால் பேச்சுக்கான வாய்பு இல்லை!!!

யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக அவர் தெரிவித்த கருத்து:
மனிதாபிமான பிரச்சனைகளின் கீழ் பிரதானமாக இருப்பது ஏ-9 பாதை திறப்பு.
யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.
நாங்கள் மனிதாபிமான பிரச்சனைகளை பேசுவோம் என்கிறோம். சிறிலங்கா அரசாங்கத் தரப்போ அரசியல் விவகாரங்களைப் பேசுவோம் என்கின்றனர். ஆகையால் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் இல்லை. காத்திருந்து பார்ப்போம் என்றார் தயா மாஸ்டர்.
ஜெனீவாவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த ஒருவரோ, எல்லாவற்றையும் இரண்டு நாட்களில் விவாதித்துவிட முடியாது. பேச்சுக்களுக்கான நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்படவில்லை என்று ரொய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Thursday, October 26, 2006

ஏ-9 பாதை திறப்புக்கு ஜெனீவாப் பேச்சில் முன்னுரிமை.

யாழ்ப்பாணத்தில் பாரிய மனித அவலத்துக்கு காரணமாக உள்ள ஏ-9 பாதை மூடப்பட்டதை திறக்க ஜெனீவாப் பேச்சுக்களில் வலியுறுத்த வேண்டும் என்று தமிழீழ பேச்சுக்குழுவினருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 22 சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

யாழ். குடாநாடு பாரிய மனித அவலத்தை எதிர்நோக்குகின்றது. ஏ-9 வீதி மூடப்பட்டது முதல் மனித அவலங்கள் பெருகி வருகின்றன. இந்த ஒரு வீதியே யாழ். குடாநாட்டை நாட்டின் ஏனைய பகுதிகளோடு இணைக்கின்றது.

ஒருபுறம் விற்பனைப் பொருட்களை கொண்டுவர முடியாமையால், வர்த்தகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். மறுபுறம் மீன்பிடித் தொழிலுக்கு முற்றாக விதிக்கப்பட்டுள்ள தடையால் மீனவர் சமூகம் நிராதரவான நிலையில் விடப்பட்டுள்ளது. வர்த்தகம் தேக்கநிலையை அடைந்துள்ளது.

இலங்கை அரசாங்க ஆயுதப்படைகளால் விதிக்கப்பட்டுள்ள இறுக்கமான கட்டுப்பாடுகளினாலும் விவசாய உற்பத்திகள் இல்லாமையினாலும் விவசாயமும் தடைப்பட்டுவிட்டது. இதனால் யாழ். மாவட்ட மக்களை ஒட்டுமொத்தமாக உதவிகளை எதிர்பார்த்து வாழவேண்டிய அவல நிலைக்கு தள்ளியுள்ளது.

இவ்வளவையும் செய்துள்ள சிறிலங்கா அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கான அவசிய உதவிகளையும் தடைசெய்துள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதே அரசசார்பற்ற நிறுவனங்கள் செயல்படுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மக்களின் ஜீவோனோபாயத்துக்கான அத்தியாவசிய பங்கீட்டுப் பொருட்களுக்கும் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. யாழ். குடாநாட்டிலுள்ள மொத்த மக்கள் தொகை 653,755 ஆகும். குடும்பங்களின் எண்ணிக்கை 188, 266 ஆகும். வறுமைக்கோட்டின் கீழ் உழலும் குடும்பங்களின் எண்ணிக்கை 125,465 ஆகும். இவற்றின் மக்கள் தொகை 431,516 ஆகும்.

இந்த வறிய குடும்பங்களின் எண்ணிக்கையில் 53,615 வறிய குடும்பங்கள் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து பங்கீட்டு அட்டைகள் மூலம் உலர் உணவுகளை பெறவேண்டிய நிலையில் உள்ளன. இக்குடும்பங்களை சார்ந்தோரின் எண்ணிக்கை 125,675 ஆகும்.
யாழ். குடாநாட்டில் 17,000 குடும்பங்கள் அன்றாட வாழ்க்கை ஓட்டத்திற்கு முற்று முழுதாக மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளன. இக்குடும்பங்கள் ஒரு லட்ம் பேரை உள்ளடக்கியுள்ளன. தற்பொழுது சிறிலங்கா அரசாங்கம் மீன் பிடித் தொழிலுக்கு முற்றாக தடை விதித்துள்ளது. இதுவரை இவற்றில் எந்தவொரு குடும்பத்திற்கும் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை.

42,000 குடும்பங்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளன. யாழ். குடாவுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மொத்த உணவுப் பொருட்கள் 11,000 மெற்றிக் தொன்கள் இவற்றில் 8,000 மெற்றிக் தொன்கள் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் அடங்கும். கடந்த மூன்று மாதங்களில் 14,000 மெற்றிக் தொன்கள் வகையிலான உணவுப் பண்டங்களே கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 19,000 தொன்கள்.
ஒரு மாதத்திற்கு தேவையான எரிபொருட்கள்
- மண்ணெண்ணெய் 1500,000 லீட்டர்
- பெற்றோல் 8000,000 லீட்டர்
- டீசல் 3,298,000 லீட்டர்

தற்போது எரிபொருட்கள் கிடைத்தாலும் மொத்த தேவையை நிறைவு செய்வதாக இல்லை. உத்தியோகபூர்வ எண்ணிக்கை சிறிலங்கா அரசாங்கத்திடம் உண்டு. யாழ். குடாநாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டால் மக்கள் மைல் கணக்கில் வரிசைக் கிரமமாக காத்துக்கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாலை நான்கு மணிக்கே மக்கள் வரிசை ஆரம்பமாகிவிடுகின்றது. சிறுவர்களும் வரிசைகளில் மாறி மாறி நிற்கவேண்டியுள்ளது. இதனால் அவர்களால் பாடசாலைக்கு செல்லமுடிவதில்லை. சமாளிக்க முடியாதவாறு பொருட்களின் விலைவாசிகள் அபரிதமாக ஏற்றம் கண்டுள்ளன

ஆகையால் வடக்கு-கிழக்கின் இந்த நிலைமைகள் தொடர்பில் பேச்சு மேசையில் முதன்மைப்படுத்துமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஏ-9 பாதை திறக்கப்பட வேண்டும். ஆகையால் ஜெனீவாப் பேச்சுக்களில் ஏ-9 பாதை திறப்பு உள்ளிட்ட மனிதாபிமான பிரச்சனைகளை முதன்மைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

ஹியூமன் றைட்ஸ் வோட்ச் வலியுறுத்தல்.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பாகிய ஹியூமன் றைட்ஸ் வோட்ச் வலியுறுத்தியுள்ளது.
அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் அண்மையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. சிறிலங்கா அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சர்வதேச சட்டங்களை மதித்து முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பாளர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்.
ஜெனீவாப் பேச்சுக்கள் இதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது. இருதரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும்.
பிரச்சனைக்குரிய பகுதிகளில் அகதிகளாக உள்ள மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் சென்றடைய இராணுவ மயமாக்கல் நிலை விலக்கப்பட வேண்டும்.
இராணுவ நடவடிக்கைகளுக்கு முன்னராக மக்களுக்கு அது தொடர்பில் ஏதேனும் ஒரு வகையில் அறிவித்தல் விடுக்க வேண்டும்.
இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழுவை அமைக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

காலித்துறைமுகத்தில் பாரிய வெடிச்சத்தம்.-மக்கள் ஓட்டம்.

காலித் துறை முகத்துள் நேற்றுப் பிற்பகல் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. மக்கள் கடைத் தெருக்கள் மற்றும் அலுவலகங்களைவிட்டு ஓடியுள்ளனர். கடும் பதற்றம் நிலவியது.
காலி துறைமுக கடற் பிரதேசத்தில் கடற் படையினர் மேற்கொண்ட ஒத்திகையொன்றை அறியாத பொது மக்கள் அச்சமடைந்து காலி நகரத்தைவிட்டு தப்பியோடிய அதே சமயம்இ கடைகள் இ வர்த்தக நிலையங்கள்இ அரச அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டு பிற்பகல் 4 மணி வரை நகரம் வெறிச்சோடியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வந்து தாக்குதல் மேற்கொள்வதாகவும் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு காயடைந்தவர்கள் கொண்டுவரப்படவுள்ளதாகவும் தொலை பேசி மூலமாகவும் வேறு விதத்திலும் தகவல் பரவியதால் வைத்தியர்கள் தயார் நிலையில் இருந்துள்ளனர். பொலிசார் வந்து மக்களை தடுத்து நிறுத்தியும் மக்கள் உயிர் தப்பினால் போதும் என்று வீடு வாசல்களைவிட்டு ஓட்டமெடுத்தனர். பிற்பகல் 4 மணியிற்க்குப் பின்னரே கடற்ப்படையினரின் ஒத்திகையே இதுவென அறிந்த மக்கள் தங்கள் சொந்த இடத்திற்க்குத் திரும்பினர்.
கடற் படையினர் பாரிய வெடிச் சத்தங்களுடன் கடற் படைப் படகுகள் கடலில் அங்குமிங்கும் விரைந்து சென்று கடும் மோதலில் ஈடுபடுவது போன்று பாரிய ஒத்திகையை மேற் கொண்டனர்.
நன்றி>புதினம்.

நாமே எமது தலைவிதியைத் தீர்மானிப்போம்: தமிழ்செல்வன்.

சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாம் வந்துள்ள நிலையில் எமது மக்களின் அவலங்களுக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் நாமே எமது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்கின்ற வாய்ப்பை உருவாக்கிக் கொள்வோம் என்று சுவிஸ் சென்றடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா நோக்கி புறப்பட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினர் இன்று வியாழக்கிழமை காலை அந்நாட்டு நேரப்படி 7.10 மணிக்கு ஜெனீவா சென்றடைந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினரை சுவிஸ் அரசாங்கத் தரப்பினர் வரவேற்றனர்.

சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் தமிழீழ தேசியக்கொடிகளுடன் விமான நிலையத்தில் அதிகாலை 6 மணியிலிருந்து காத்திருந்து வரவேற்பளித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் கைலாகு கொடுத்து வரவேற்றார். அங்கு திரண்டிருந்த மக்களும் மலர்செண்டு கொடுத்து ஆரத்தழுவி தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வரவேற்றனர்.

விமான நிலைய விசேட விருந்தினர்களுக்கான மண்டபத்தில் சுவிஸ் வாழ் ஈழத் தமிழர்களிடையே தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய உரை:

நம்பிக்கையற்ற சூழ்நிலையில் நாம் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தாலும் எங்களுடைய கதவுகளை மூடிவிட்டு தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை இல்லாது ஒழித்துவிட்டு சிறிலங்கா அரச பேரினவாதமும் சிறிலங்கா இராணுவ பயங்கரவாதமும் தமிழ் மக்களின் மீது மிலேச்சத்தனமான கொடுமைகளை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் சர்வதேச சமூகத்தினது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை இந்த சர்வதேச சமூகத்துக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுவதற்கான நிறைய விடயங்களோடு நாங்கள் வந்துள்ளோம்.
அப்படிப் பேசப்படுகின்ற நிறைய விடயங்களுக்கு சிறிலங்காத் தரப்பினர் என்ன விடைகளை அளிக்கப் போகின்றார்கள் என்பதனைப் பொறுத்துதான் எமது மக்களின் உரிமைப் போராட்டத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.

இங்கே கூடியிருக்கும் ஒவ்வொருவரது முகங்களும் சோகம் தழும்பியிருக்கிறது. தாயகத்திலிருந்து வந்திருக்கும் நாங்கள், எமது மக்களின் அவலங்களை அவலங்களுக்குள்ளும் தேசியத்துக்காக நிற்கும் அம்மக்களின் அபிலாசைகளை இந்த சர்வதேச சமூகத்திடம் சொல்ல உள்ளோம்.

நீங்கள் உறுதி தளராமல் தொடர்ச்சியாக எமது தலைமைக்கும் போராட்டத்துக்கும் வழங்க வேண்டிய உறுதியான பேராதரவின் மூலம்தான் எமது விடுதலைப் போராட்டத்தின் அடுத்த நகர்வு முன்னெடுக்கப்படும். ஆதலினால் பொறுத்துக் கொள்ளுங்கள். கவலையை மறந்து விடுங்கள்.

சர்வதேச சமூகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று நாம் வந்துள்ள நிலையில் எமது மக்களின் அவலங்களுக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் நாமே நமது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்கின்ற வாய்ப்பை உருவாக்கிக் கொள்வோம் என்றார் சு.ப.தமிழ்ச்செல்வன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன்:
தாயகத்திலிருந்து புறப்படுகின்ற போது எமது மக்களின் உணர்வுகளையும் அவலங்களையும் தாங்கிவந்து விமான நிலையத்தில் வந்திறங்கிய போது ஒரு புதுத்தென்போடும், புதிய மகிழ்வோடும் கூடியிருக்கின்ற உங்களைப் பார்க்கின்ற போது அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்கின்றேன்.

விடுதலைப் போராட்டத்துக்கு எப்போதும் பங்களிப்பை வழங்குகின்ற உணர்வுள்ள மக்கள் எம்மை வரவேற்பது என்பது பேச்சுவார்த்தையின் உச்சத்துக்குள் நாங்கள் நின்று கொண்டு உரிமைப் போராட்டத்தின் செய்திகளை சர்வதேச அரங்கின் முன்பாக சொல்வதற்கு நீங்கள் வழங்குகின்ற பேராதரவும் ஒரு காரணமாக இருக்கின்றது என்றார்.

இந்நிகழ்வுக்குப் பின்னர் வெளிநாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகளுக்கு வழங்கக்கூடிய பாதுகாப்பை வழங்கி சுவிஸ் அரச தரப்பினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவினரை அழைத்துச் சென்றனர்.

கிளிநொச்சியிலிருந்து சிறிலங்கா விமானப் படையின் உலங்குவானூர்தி மூலம் நேற்று முன்நாள் முற்பகல் 10 மணிக்கு விடுதலைப் புலிகளின் குழுவினர் புறப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், இராணுவப் பேச்சாளர் இ.இளந்திரையன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், மகளிர் அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தமிழ்விழி உள்ளிட்டோர் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸ்கருடன் கொழும்பு சென்றடைந்தனர்.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று புதன்கிழமை முற்பகல் 9.10 மணியளவில் புறப்பட்டு நேற்று பிற்பகல் அபுதாபியை சென்றடைந்தனர்.
அபுதாபியில் 6 மணித்தியாலங்களுக்கும் மேல் தங்கியிருந்த இவர்கள் நேற்று நள்ளிரவு அபுதாபியிலிருந்து புறப்பட்டனர்.
நன்றி>புதினம்.

Tuesday, October 17, 2006

"புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையம் மீது விமான தாக்குதல்."

தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகப்பூர்வ வானொலியான "புலிகளின் குரல்" ஒலிபரப்பு நிலையமானது சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுத்தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது.


புலிகளின் குரல் தமிழீழ வானொலி ஒலிபரப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த போது கொக்காவிலில் உள்ள அதன் மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபிர் விமானங்கள் இரண்டு குண்டுகளையும், றொக்கெற் குண்டுகளையும் ஏவின.

புலிகளின்குரலின் ஒலிபரப்பு நிலையம், ஒலிபரப்புக் கோபுரம், இரண்டு கலையகங்கள் ஆகியவற்றின் மீதும் அதன் சுற்றாடல் மீதும் 25 வரையான ரொக்கெட் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன.

இக்குண்டுத்தாக்குதலில் புலிகளின் குரலின் ஒலிபரப்புக் கோபுரம் முற்றாக அழிந்தது.

ஒலிபரப்பு நிலையம் மற்றும் அதிலிருந்த உயர்வலு ஒலிபரப்புச் சாதனம் மற்றுமொரு ஒலிபரப்புச் சாதனம், இலத்திரனியல் உபகரணங்கள் ஆகியன அழிக்கப்பட்டன.

அழிக்கப்பட்ட உபகரணங்களின் பெறுமதி மூன்று கோடி ரூபாவிற்கும் அதிகமாகும் என்று கூறப்படுகிறது.

சிங்கள அரசின் திட்டமிட்ட இத்தாக்குதலின் போது ஒலிபரப்பில் ஈடுபட்டிருந்தோர் உடனடியாக தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இச்சம்பவத்தில் இருவர் காயம் அடைந்தனர். உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டன. சுரேந்தர் (வயது 23) மற்றும் கரிதாஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இத்தாக்குதல் மூலம் புலிகளின் குரல் ஒலிபரப்பு மையத்திற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின்குரல் ஒலிபரப்பு மையம் மற்றும் அதன் ஒரு கிலோமீற்றர் சுற்றாடல் பிரதேசம் கிபிர்த் தாக்குதலில் முற்றாக அழிவுற்றுக் காணப்படுகின்றது.

தாக்குதலுக்குள்ளான புலிகளின் குரல் வானொலி நிலையப் பகுதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பார்வையிட்டார்.

அமைதிப் பேச்சுகள் நடைபெறும் நிலையில் தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதற்கான தாக்குதல் இது என்றும் இருப்பினும் புலிகளின் குரல் வானொலியின் சேவை தொடர்ந்து ஒலிபரப்பாகும் என்றும் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறினார்.

http://www.tamilwin.com/article.php?artiId=512&catId=&token=dispNews

தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட போர்ப் பிரகடனம்:

வடக்கு-கிழக்கு இணைப்பை எதிர்த்து சிறிலங்கா உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.
தமிழ் மக்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு போர்ப் பிரகடனமாக இதனை நாம் பார்க்கிறோம் என்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.
வடக்கு-கிழக்கு இணைப்பின் போது கிழக்கில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்களிடம் ஆலோசிக்கப்படவில்லை. இணைப்பு அல்லது பிரிப்பு தொடர்பில் முஸ்லிம்கள் எதுவித கருத்தையும் முன்வைக்கவில்லை என்றார் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம
19 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு பாரிய வரலாற்றுத் தவறை உச்சநீதிமன்றம் திருத்தியுள்ளது என்றார் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச.
சட்ட ரீதியாக இந்த தீர்ப்பு சரியானதாக இருந்தாலும் இனப்பிரச்சனை தொடர்பில் பாரதூரமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்றும் சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே எச்சரித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது உகந்த நேரமல்ல என்று அமைச்சர்கள் மங்கள சமரவீர, டி.ஈ.டபிள்யூ. குணசேகர, நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சரத் அமுனுகம ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புபட்ட செய்தி: வடக்கு-கிழக்கு இணைப்பு சட்டவிரோதம்: சிறிலங்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பு
நன்றி>புதினம்.

இந்தியப் பஞ்சாயத்து ராஜ்ஜும், சிறிலங்காவின் அறிவும்.

இலங்கைத் தீவில் தீவிரமாக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது "அதிகாரப் பரவலாக்கல்" என்ற சொற்றொடர்.
அதுவும் இந்த அதிகாரப் பரவலாக்கலில் "இறக்குமதி" முறை இருக்கிறதே- ஆம். இந்தியா போன்ற வெளிநாடுகளின் அதிகாரப் பரவலாக்கல் எனில் அதைப் பற்றி கதைப்பதானது சிங்களவர்களுக்கு ஒருவித "அறிவுஜீவி"தனம் போல்..

இந்த "அதிகாரப் பரவலாக்கல்" காய்ச்சலில் நகைச்சுவையான கூத்துக்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் (செப்ரெம்பர் 27) இந்திய மத்திய அரசாங்கத்தின் பஞ்சாயத் ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யர், சிறிலங்காவின் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மற்றும் நிபுணர் குழு அங்கத்தவர்களை சிறிலங்கா சமாதான செயலகத்தில் சந்தித்தார்.

இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளும் இச்சந்திப்பின் போது உடன் இருந்தனர்.

மகிந்தவின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நாடாளுமன்ற விவகார அமைச்சரும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அங்கத்தவருமான பேராசிரியர் விஸ்வா வர்ணபால இந்திய அமைச்சரை வரவேற்றார்.

பஞ்சாயத் ராஜ் அமைப்பு மற்றும் அது இந்தியாவில் செயற்படும் விதம் பற்றி இந்திய அமைச்சர் மணி சங்கர் தனது உரையில் விளக்கினார்.

இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு என்பது சிறிலங்காவின் உள்ளுராட்சி (இந்தியாவின் உள்ளாட்சி) ஒத்தது.

அதாவது தெரிவு செய்யப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களை கிராமங்களுக்கும் விரிவாக்கம் செய்வதானது என்பதனை இந்தியாவில் "பஞ்சாயத்து" தேர்தல் அல்லது "உள்ளாட்சித் தேர்தல்" அல்லது "பஞ்சாயத்து ராஜ்" என்று அழைக்கிறார்கள்.

இந்த உள்ளுராட்சி அல்லது உள்ளாட்சி அமைப்புக்களுக்கான உறுப்பினர்களையும் தலைவர்களையும் மக்கள் வழமையான தேர்தல் வாக்களிப்பின் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த "அதிகாரப் பரவலாக்கல்" என்பதும்

தென்னிலங்கையின் அனைத்துக் கட்சி நிபுணர் குழு- பிரதிநிதிகள் குழு விவாதிக்கும் "அதிகாரப் பரவலாக்கல்" என்பதும் அடிப்படையில் வெவ்வேறானது.

அனைத்துக் கட்சி நிபுணர் குழு- பிரதிநிதிகள் குழு விவாதிக்கின்ற "அதிகாரப் பரவலாக்கல்" என்பது இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு இனக்குழுமத்துக்கு ஏற்கெனவே உள்ள கட்டமைப்பிலிருந்து அதன் அரசியல் யாப்பை மாற்றி அதிகாரங்களை பரவலாக்கிக் கொடுப்பது. இது ஒரு தேசிய இனத்தின் வாழ்வுரிமை தொடர்பு கொண்டது. சுயநிர்ணய உரிமை தொடர்பிலானது.

இந்திய அமைச்சர் மணிசங்கர் வந்து வகுப்பெடுத்துவிட்டுச் சென்ற "அதிகாரப் பரவலாக்கல்" என்பது "நிறுவனமயமாக்கப்பட்டு விட்ட" அல்லது நிறுவப்பட்டுவிட்ட ஒரு கூட்டரசு அல்லது ஒற்றையாட்சியின் "நிர்வாக" மட்டத்திலேயான அதிகாரங்களை மட்டுமே பகிர்ந்தளிக்கின்ற "அதிகாரப் பரவலாக்கல்".

எதற்காக நாம் வகுப்பெடுக்கிறோம் இப்போது? ஏன் என்று கேட்கிறீர்களா?

கடந்த ஒக்ரோபர் 11 ஆம் நாளன்று

"இந்தியாவின் பஞ்சாயத்து முறை பற்றி சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு ஆய்வு!"

என்ற தலைப்பில் சிறிலங்கா அரசாங்கத் திணைக்களம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட விளக்கங்களை உள்வாங்கிக் கொண்டு. அந்தச் செய்தியை படிக்கவும்.

எதுவித திருத்தமும் செய்யாமல் உள்ளது உள்ளபடியே அதனை இணைக்கிறோம்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்தியாவின் அரசியலமைப்பில்; கிராமத்து பஞ்சாயத்து முறை தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு தீர்மானித்துள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைக்காக சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ வித்தாரன தெரிவித்தார்.

இதற்கான அழைப்பை இந்திய அமைச்சர் மணிசங்கர் விடுத்துள்ளார் என்றும் அவர் கூறினார். இதுபற்றி அமைச்சர் மேலும் கூறியதாவது,

அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இந்த ஆய்வு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படும். இந்தியாவில் கிராம மட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்கம் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

சர்வ கட்சி மாநாட்டுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வ கட்சி பிரதிநிதிகள் குழு பிரதி வாரமும் கூடி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொள்கிறது. அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இக்குழுவின் ஆலேசனைகள் சிறந்த பங்களிப்பினை வழங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

- என்று சிறிலங்கா அரசாங்கத் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி அறிக்கை வெளியாகி உள்ளது.

ஒரு அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரப் பரவலாக்கத்தையும்

ஒரு இனக்குழுமத்தின் வாழ்வுரிமை அதிகாரப் பரவால்லக்கத்தையும்

வேறுபடுத்திப் பார்க்காமல்

"இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வே தீர்வாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இந்தியாவின் அரசியலமைப்பில் கிராமத்து பஞ்சாயத்து முறை"யை ஆராயப் போவதாக சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரன கூறியிருப்பதைக் கண்டு நாம் என்ன சொல்வது?
பானைக்குள் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

சிங்களவர்களுக்கு என்றுதான் விடிவு பிறக்குமோ?
நன்றி>புதினம்.

Monday, October 16, 2006

போர்களங்களுக்கு அப்பால் இலக்குகள் விரிந்து செல்லும்.

இதுவரை 106 ராணுவம் பலி, 140ராணுவம் காயம்.

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை சிறிலங்கா இராணுவம் தொடர்ந்து நடத்துகின்ற போது போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் மீது இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
ஹபரணை தாக்குதல் தொடர்பாக இ.இளந்திரையனிடம் "புதினம்" செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:
சிறிலங்கா இராணுவமானது தனது இலக்குகளை பல கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தெரிவு செய்கின்ற போது அந்த இலக்குகளில் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
திருகோணமலை சம்பூர், மூதூரில் தாக்குதல்களை உதாரணமாகக் கொள்ளலாம்.
இன்று திங்கட்கிழமையும் கூட மாலை 5.30 தொடக்கம் 6.30 மணிவரை மாங்குளம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்கள் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றன. தற்போது அந்த இடங்களை பார்வையிடுவதற்கு இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழுவினர் சென்று கொண்டிருக்கின்றனர்.
இப்படியான நிலையில் மக்களைப் பாதுகாக்க வேண்டியதும் வலுச்சமநிலையை பேண வேண்டியதுமான நிலை எங்களுக்கு உள்ளது.
ஆகவே போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை.
இது தொடர்பிலான மேலதிக தகவல்களுக்காக திருகோணமலை மாவட்ட கட்டளைத் தளபதியை தொடர்பு கொண்டிருக்கிறோம் என்றார் இ.இளந்திரையன்.
நன்றி>புதினம்.

கடற்படை மீது தாக்குதல்: 92 பேர் பலி- 150 பேர் படுகாயம்.

ஹபரணை திகம்பத்தனையில் சிறிலங்கா கடற்படையினரின் வாகனத் தொடரணி மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 92 சிறிலங்கா கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொலநறுவ -மட்டக்களப்பு மாவட்ட எல்லையில் ஹபரணை திகம்பத்தனையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
திருகோணமலையிலிருந்து 80 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஹபரணை-திருகோணமலை வீதி 101-102ம் மைல் கற்களுக்கு இடையில் ஏ-6 வீதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது.

திருகோணமலை கடற்படைத்தளத்துக்கு செல்வதற்காக ஹபரணை திகம்பத்தனை வீதியில் நிறுத்தி வைக்கப்படடடிருந்த கடற்படையினரின் வாகனத் தொடரணி மீது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
சிறிலங்கா கடற்படையின் வாகனத் தொடரணியில் 24 பேரூந்துகளில் 340 கடற்படையினர் இருந்ததாகவும் அவற்றில் சுமார் 13 பேரூந்துகள் தாக்குதலில் சிதறின என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சி.என்.என். தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் 90 கடற்படையினர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா பாதுகாப்புப் பேச்சாளரான அமைச்சர் கேகலிய ரம்புக்வெல உறுதிப்படுத்தியுள்ளார்.
நன்றி>புதினம்.

Sunday, October 15, 2006

சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள்.

கடந்த மாதம் 18ம் திகதி ஜெனிவாவில்,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் இரண்டவாது கூட்டத் தொடர், மெக்சிக்கோ நாட்டின் ஐ. நா. விற்கான தூதுவர், திரு லூயிஸ் அல்போன்சோ டி அல்பா தலைமையில் ஆரம்பமாகியது. ஐ. நா. மனித உரிமை சபை, கடந்த மார்ச் மாதம் 15ம் திகதி, ஐ. நா. பொதுச் சபையின் தீர்மானம் 60Æ251க்கு அமைய, முன்னைய ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு பதிலாக நிறுவப்பட்டது.
ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு 1946ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ம் திகதி நிறுவப்பட்டது. இவ் ஆணைக்குழு 53 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியதாக இயங்கியது. அண்மை காலங்களில், இவ் ஆணைக்குழுவினால் உலகில் மனித உரிமைகளை கடுமையாக மீறும் நாடுகள் மீது கண்டன தீர்மானங்களை கொண்டுவர முடியாமல் இருந்த காரணத்தினாலும், செயலாளார் நாயகம் திரு கோபி அணானினால் நடைமுறைபடுத்தப்பட்ட, ஐ. நா. செயற்பாடுகளின் மறு சீராமைப்பும், மனித உரிமை சபையை தோற்றுவித்தது.
ஐ. நா மனித உரிமை ஆணைக் குழுவினால், மனித உரிமைகளை கடுமையாக மீறும் நாடுகள் மீது கண்டன தீர்மானங்களையும் கொண்டுவர முடியாமல் இருந்ததிற்கு காரணங்கள் பல மனித உரிமை ஆணைக் குழுவில் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடுகளின் அங்கத்துவம், இவர்களுக்கிடையேயான கூட்டணி, நாடுகளுக்கு இடையேயான பிராந்திய நட்புறவு, அத்துடன் சில நாடுகள் பயங்கரவாததிற்கு எதிரான போரென்று கூறி ஐ. நா. மனித உரிமை தீர்மானங்கைளயும், வழிமுறைகளையும் ஏற்க மறுப்பது போன்றவையே. இதேவேளை செல்வாக்குப் பெற்ற நாடுகள், தமது நாட்டையும், தம்முடன் சேர்ந்த நேச நாடுகளிலும், எவ்வித மனித உரிமை மீறல்களையும் ஐ. நா பரிசீலிக்க முடியாது தொடர்ந்து எதிர்த்து வந்தது.
இச் சாவால்களை முகம் கொடுக்கும் முகமாக தோற்றம் பெற்ற மனித உரிமை சபை, 47 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கியதுடன், முன்னைய மனித உரிமை ஆணைக்குழு போல் இங்கும் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கொண்ட நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளனர். இதில் சிறிலங்காவும் அடங்கும் என்பது கூறிப்பிடத்தக்கது.
ஐ. நா. மனித உரிமை சபையின் இரண்டவாது கூட்டத் தொடர் ஆரம்பமாகிய அன்றே, ஐ. நா மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபார் தனது ஆரம்ப உரையில், சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான முறையில் மீறப்படுவதாகவும், இன்றுவரை சிறிலங்காவில் நடைபெற்ற எந்த படுகொலைகளுக்கும், சிறிலங்கா அரசு எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கவுமில்லை, அங்கு யாரும் தண்டிக்கப்படவும் இல்லை என குற்றம் சாட்டினார். இதே வேளை, சிறிலங்காவில் ஓர் நிரந்தர 'சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழு" உருவாக்கப்பட வேண்டுமென வழிமொழிந்தார்.
திருமதி லூயிஸ் ஆபாரின் உரையை தொடர்ந்து, மனித உரிமை சபையில் முதல் வாரம் உரையாற்றிய கூடுதலான ஐ. நா வின் விசேட பிரதிநிதிகள், சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை மிகவும் கடுமையாக கண்டித்தனர். இதனால் இச்சiயில் அங்கத்துவம் வகிக்கும் சிறிலங்கா அரச பெரும் சங்கடத்தில் மாட்டிக்கொண்டது. அத்துடன் சில அரச சார்பற்ற நிறுவனங்களும் குற்றச்சாட்டுகளை சிறிலங்க மீது முன் வைத்தன. இவை யாவற்றையும் அரச பிரதிநிதிகள் வழமை போல் நியாயப்படுத்திக் கொண்டனர். மனித உரிமை சபையில் முதல் வாரம் நடத்தவற்றை மனதில் வைத்து, இம் முறை சிறிலங்கா மீது ஓர் தீர்மானம் நிட்சயம் நிறைவேறும் என்பது சகலரது மனதிலும் உறுதியாகிவிட்டது.
இதேவேளை, சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒரு போதும் இல்லாதவாறு புதுமையாக சிறிலங்காவில் சகல தரப்பினரும் மனித உரிமைகளை மீறுவதாகவும், சிறிலங்காவில் ஓர் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு குழு" உருவாக்கப்பட வேண்டுமென பிரச்சாரமும் செய்தார்கள். இது எம்மால் நம்ப முடியவில்லை, காரணம் வழமையாக இதே அமைப்புக்கள் ஒரு பக்கச் சார்பாகத் தான் சிறிலங்காவிடயத்தில் கண்டன அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். மனித உரிமை சபையில் நடப்பவையும், இச் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் சுய நலம் நிறைந்த போலி வேடங்கள் தான் என்பது கூட்டத் தொடரின் மூன்றவது வாரம் தான் தெளிவாகியது.
இராண்டவது வாரத்தில், ஐ. நா. செயலாளார் நாயகத்தின், சிறு பிள்ளைகள் விடயத்தின் விசேட பிரதிநிதி, திருமதி ராதிக்க குமாரசுவாமி உரையாற்றினார். இவர் தனது உரையில் தனது ஆலோசகர் திரு அலன் றொக் என்பவர் சிறிலங்கா செல்ல இருப்பதாகவும், இவர் சிறிலங்கா அரச பிரதிநிதிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக சபையில் கூறினார்.
மனித உரிமை சபையின் கூட்டத் தொடரின் இராண்டவது வாரத்தில், தமது அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படப் போகிறது என்பதை நன்கு அறிந்த சிறிலங்கா அரச பிரதிநிதிகள், பலவிதப்பட்ட ராஜதந்திரிகளையும், சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களையும் சந்திக்க அரம்பித்தனர். இதே வேளை சிறிலங்காவிலிருந்து விசேடமாக சில தமிழ் முஸ்லீம் அமைச்சர்களையும், அரசியல்வாதிகளையும் பிரச்சார வேலைக்கென ஜெனீவா அழைத்தனர்.

இவர்களின் சந்திப்புக்கள் யாவும் ஐ. நா. காட்டிடத்திற்கு வெளியிலேயே நடைபெற்றது. இந்த தமிழ் முஸ்லீம் அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் தாம் சந்தித்தவர்களிடம் வழமை போல் என்ன கூறியிருப்பார்களென்பதை சகலராலும் ஊகிக்க முடியும்.
இப்படியாக சிறிலங்கா பிரதிநிதிகள் சூறாவழிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், ஐரோப்பியா யூனியன் நாடுகளின் முன்னெடுப்பில் பின்லாந்து நாட்டினால் சிறிலங்கா மீதான ஓர் தீர்மானம் தாயாரிக்கப்பட்டு, இதை விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்குமாக மனித உரிமை சபையில் A/HRC/2/L.37 என்ற இலக்கத்தின் கீழ் தீர்மானத்தை பதிவு செய்து கொண்டனர். இதை கண்டு சிறிலங்கா பிரதிநிதிகள் திகில் அடைந்தனர்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா பிரதிநிதிகளை, மனித உரிமை சபையின் எந்தவித தீர்மானங்களையும் ஏற்கப்படாது என கொழும்பிலிருந்து கட்டளை பிறப்பிக்கப்பட்டது. ஏதோ ஒரு விதத்தில் ஐரோப்பியா யூனியனால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை பலம் இழக்கச் செய்ய திட்டமிட்ட சிறிலங்கா அரசு, உடன் சில ஆசிய அயல் நாடுகளுடன்,தமிழ் மக்கள் மீதான தமது மனித உரிமை மீறல்களை அச் சபையில் அலட்சியம் பண்ணும் நாடுகளுக்கு பண்ட மாற்றாக சில பொருளாதார சலுகைகளை சிறிலங்கா முன் வைத்தனர். இந்த அடிப்படையில் ஆயுத ஓப்பந்தம், கைமாற்றாக திருகோணமலையில் சமரும், மத்திய கிழக்கு நாடுகளில் சிறிலங்காவிலிருந்து சென்று வேலை செய்வோரின் சட்ட பிரச்சனைகள் யாவற்றையும் தாம் வாபஸ் பெறுவதாக சிறிலங்கா அரசு மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒப்புதல் கொடுத்தது. அத்துடன் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதீரான கண்டன தீர்மானங்களை, மனித உரிமை சபையில் வேறு நாடுகள் முன் வைக்கும் வேளையிலே தாம் அதை வலுவாக எதிர்பது போன்ற விடயங்களை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொண்டது. இவை யாவும் சிறிலங்கா மீது ஐ. நா. மனித உரிமை சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை வெற்றி கொள்வதற்காகவே பேரம் பேசப்பட்டது.
இதில் மிக வேடிக்கை என்னவெனில், 87, 88, 89ல் தெற்கில் சிங்கள இளைஞர்கள் காணமல் போயிருந்தமைக்கு, 91ல் ஐ. நா. விடம் நியாயம் கேட்டு எம்மை போன்று ஜெனிவாவில் பிரச்சாரம் செய்ய வந்த அதே ராஜபக்சா தான் இக் கட்டளையையும் பிறப்பித்தார். ஜனதிபதி ராஜபக்சாவை பொறுத்தவரையில் தெற்கில் காணமல் போன சிங்கள இளைஞர்கள் கண்டுபிடிப்பதற்கும், விசாரணை செய்வதற்கும் ஐ. நா. உதவி தேவை, ஆனால் தமிழ் மக்களது மனித உரிமைகளை தனது பாதுகாப்பு படையினரும், ஒட்டுப்படையினரும் மீறுவதை உள்நாட்டு பிரச்சனையாக கொள்கிறார்! இது தான் மகிந்த சிந்தனையா?
சிறிலங்காவின் கைப்பொம்மையாக மிக நீண்ட காலமாக திகழ்ந்த ஐரோப்பியா யூனியன், ஆசிய நாடுகளின் உதவியுடன் சிறிலங்காவின் எதிர்ப்பை கண்டு திகைத்தது. காரணம் ஐ. நா. மனித உரிமை சபையில் ஐரோப்பியா யூனியனுக்கு எந்தவித பெரும்பான்மையும் கிடையாது. இவர்களால் சிறிலங்கா மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மனித உரிமை சபையில், ஒரு போதும் வாக்கெடுப்பிலும் நிறைவேற்;ற முடியாது. அதிருப்தி அடைந்த சில ஐரோப்பிய ராஜதந்திரிகள், தம் மீது சிறிலங்கா சாவாரி செய்வதாக கூறினார்கள். தற்பொழுது இத் தீர்மானம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத் தொடருக்கு பின் தள்ளிப் போடப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கிடையில், சிறிலங்கா விடயத்தில் மிக அக்கறை காட்டியது போல் நடித்த சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களை, சிறிலங்கா பிரதிநிதிகள் கொழும்புக்கு வந்து தமது வெளிநாட்டு அமைச்சர், ஜனதிபதி போன்றோரை சந்திக்க அழைத்துள்ளனர். ஏதற்காக? வழமைபோல் தமிழ் மக்கள் மீதான தமது மனித உரிமை மீறல் விடயத்தில், இவர்களுடனும் பேரம் பேசுவதற்காகவா! சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் எதிர்பார்த்தது இதை தானே.
ஆகையால் எதிர்வரும் நவம்பர் மாத மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா பற்றி என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் ஆராய்வோமானால் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கொழும்பு சென்று வருவதானால், இவர்கள் சிறிலங்கா அரசின் புதிய திட்டங்களுடன் வருவார்கள், ஏற்கனவே ஐரோப்பியா êனியனால் தாயாரிக்கப்பட்ட தீர்மானம் A/HRC/2/L.37 வாபஸ் பெறப்பட்டு, இதற்கு பதிலாக வேறு மாற்றுத்திட்டங்கள் தயாhரகாலாம். அது வழமைபோல் ஒரு பக்கச் சார்பான குழுவாகவே இருக்கும் ஆனால் 'தனிப்பட்;ட சுதந்திரமான குழு" என்ற பெயரில்,சிறிலங்காவில் மனித உரிமை கண்கணிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இது வியாபர நோக்கம் கொண்ட பக்கச் சார்பன குழவாகவே அமையும். இப்படியாக ஒன்று உருவகும் பட்சத்தில் அதை எதிர்பதும், நடைமுறைப்படுத்த விடாது தடுப்பதும் புலம் பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது.
உண்மையில் ஐ. நா மனித உரிமை ஆணையாளர் திருமதி லூயிஸ் ஆபார் தனது ஆரம்ப உரையில் கூறியதும் நடைமுறைப்படுத்த எண்ணியதும் வேறு, எதிர்வரும் நவம்பர் மாத மனித உரிமை சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா விடயத்தில் நடக்க இருப்பது வேறு. சுருக்கமாக கூறுவதானால், தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் ஜெனிவாவில் ஏலத்தில் விற்பனையாகிறது.
நன்றி>பதிவு.

சிறீலங்கா இராணுவம் வெற்றி பெறவில்லை": மகிந்த ராஜபக்ச.

"சிறிலங்கா இராணுவம் வெற்றியும் பெறவில்லை- எதனையும் இழக்கவில்லை" என்று முகமாலை தோல்வி குறித்து மகிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:
கடந்த வாரம் நடந்த போர்க்களத்தில் விடுதலைப் புலிகளின் வெற்றியின் மூலம் ஜெனீவாப் பேச்சுக்களில் கடும்போக்கை புலிகள் கடை பிடிக்கக்கூடும்.
"அப்படி நடந்தால் அது இரட்டைப் பின்னடைவு" என்று நன்கறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
கடந்த புதன்கிழமை நடந்த அவமானகரமான தோல்வியைக் குறிப்பிட்டு கூறிய அந்த வட்டாரம், "முகமாலைக்கு முன்னர் நாம் உயர்நிலையில் இருந்தோம். யூலை மாதம் முதல் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் நன்கு தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். எதிர்பாரதவிதமாக நம்பிக்கை மற்றும் வலிமை குறித்து உணர்கின்றனர். இதனை பேரழிவாகக் கருதுகின்றனர்" என்றார்.
மாவிலாறு, மூதூர் மற்றும் யாழ். நடவடிக்கைகள் மோசமானது அல்ல. அரசாங்கத்தின் வலிமையை குறிப்பிட்ட அளவு அதிகரித்திருக்கிறது. இதன் பின்னணியில் வெளிநாட்டில் பேச்சு நடத்துவதற்கான நாள் குறிக்கப்பட்டது.
நோர்வே அனுசரணையில் ஒக்ரோபர் 28 ஆம் மற்றும் 29 ஆம் ஆகிய நாட்களில் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடைபெற உள்ளன.
அரசாங்கத்தின் உத்தியில் எதுவித மாற்றமும் இருக்காது என்று அமைதி முயற்சிகளுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "அவர்கள் வலுவான நிலையிலிருந்து பேசுவதற்கு முற்படுகின்றனர்" என்றார் அவர்.
இராணுவத்தினருக்கும் தலைமைக்கும் இடையே சரியான புரிந்துணர்வு இருந்திருந்தால் முகமாலை பின்னடைவைத் தவிர்த்திருக்கலாம் என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.
134 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையும் 230 பேர் படுகாயமடைந்ததையும் இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது. மேலும் 40 உடல்கள் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகள் கூறப்படுவதை இராணுவம் நிராகரித்துள்ளது.
முகமாலையில் 6 யுத்த கவச வாகனங்கள் இழந்ததையும் இராணுவம் விருப்பமின்றி ஒப்புக்கொண்டுள்ளது.
இந்தத் தோல்வியை தோல்வியாகக் கருதக்கூடாது என்று கடந்த வெள்ளிக்கிழமை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். "இராணுவம் வெற்றியும்பெறவில்லை- எதனையும் இழக்கவில்லை" என்று அமைதிப் பேச்சுக்கான குழுவினரிடம் மகிந்த கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு புதிய ஆயுதங்கள், தளபாடங்கள் கிடைத்துள்ளமை பற்றியும் மகிந்த கூறியுள்ளார். இருந்த போதும் எப்படி கிடைத்தது என்பதை குறிப்பிடாத மகிந்த ராஜபக்ச, அவர்கள் ஆயுதங்களைப் பெற்றிருப்பதான தோற்றம் உருவாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.
உடல்நலக் குறைவால் விடுதலைப் புலிகளின் அன்ரன் பாலசிங்கம் பேச்சுக்கு வராத நிலையில் முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதி, விடுதலைப் புலிகளின் குழுவுக்குத் தலைமை வகிக்கக்கூடும்.
"தங்களது நிலையை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்திக் காட்ட வேண்டிய தேவை" உள்ளது என்று ஒரு அதிகாரி கூறினார். "பசுபதி அதற்கு நல்ல தெரிவாக இருப்பார்" என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த சட்டத்தரணி வி.உருத்திரகுமாரனும் விடுதலைப் புலிகளின் குழுவுக்குத் தலைமை வகிக்கக் கூடிய நபராக இருப்பார் என்று கொழும்பு ஆங்கில ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

Saturday, October 14, 2006

பிஞ்சுக்குரல்கள் கேட்கின்றன.

பிஞ்சுக்குரல்கள் கேட்கின்றன, அண்ணாமாரே, மாமாமாரே இப்போரை நீடிக்கவிடப்போறீர்களா? எம் பிஞ்சுக்கரங்களில், ஆயுதங்களை திணிக்கப்போகிறீர்களா?
பிஞ்சுக்குரல்கள் கேட்பதை நீங்கள் கேட்க இங்கே சுட்டவும்.
http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai
நன்றி>பதிவு.