Thursday, July 05, 2007

இன்று கரும்புலிகள் நாள்!!!






இன்று கரும்புலிகள் நாள்: தாயக விடுதலைக்காய் உயிர்களை ஆயுதங்களாக்கிய கரும்புலி மாவீரர்கள் எண்ணிக்கை 322

தாயக விடுதலைப் போராட்டத்தில் தம் உயிர்களை ஆயுதங்களாக்கி போராட்டத்தின் தடைநீக்கிகளாக வெற்றிகளுக்காக தம்மை அர்ப்பணித்த கரும்புலி மாவீரர்கள் அனைவரையும் ஒன்றுசேர நினைவில் கொண்டு போற்றும் நாள் நாளை வியாழக்கிழமை (05/07/07) தமிழீழ மக்களால் கடைப்பிடிக்கப்படுகின்றது.


கரும்புலிகள் நாளை கடைப்பிடிக்கும் நாளில் தமிழீழ மக்கள் எழுச்சிக்கோலம் கொண்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளில் மஞ்சள் சிவப்பு தோரணங்களோடு எழுச்சிக்கோலம் காணப்படுகின்றது.

1987 ஜூலை 5 முதல் 2007 ஜூன் 27 வரை தாயக விடுதலைப் போராட்டத்தில் கரும்புலி மாவீரர்கள் 322 பேர் வீரகாவியமாகியுள்ளனர்.

இவர்களில்

81 பேர் தரைக்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

241 பேர் கடற்கரும்புலி மாவீரர்கள் ஆவர்.

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் நாளை காலை 9 மணிக்கு பொதுச்சுடரேற்றப்பட்டு தமிழீழ தேசியக் கொடியேற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தொடங்கப்படும்.

வடமராட்சி நெல்லியடியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா இராணுவ முகாம் மீது 1987 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் நாள் கப்டன் மில்லர் நடத்திய கரும்புலித் தாக்குதலே விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலித் தாக்குதலாகும். தாயக விடுதலைக்காக கரும்புலிகள் தங்களது பயணத்தின் 20 ஆம் ஆண்டை நிறைவு நிறைவு செய்திருக்கிறார்கள்.
நன்றி>பிதினம்.

2 comments:

Unknown said...

Dhanu who killed Rajiv Gandhi also a black tiger or what..?

Anonymous said...

ராஜீவ்காந்தி,பிரேமதாசா,ரட்ணசிறீவிக்கிரமசிங்கா, அத்துலத்த்முதலி,காமினிதிசநாயக்கா போன்றவர்களின் கொலைகள் உரிமைகோரப்படாதவை, உரிமை கோரப்ப்டால் இவர்கள் எதற்க்குள் வருகிறார்கள் என்று தெரியவில்லை.