Wednesday, January 23, 2008

தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,

தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.

இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.

4 comments:

Anonymous said...

தை மாதம் முதல் தேதியை தமி‌ழ் புத்தாண்டாக அறிவித்து நடைமுறைப்படுத்த த‌மிழக அரசு முடிவு செ‌ய்துள்ளதாக கவர்னர் உரை‌யி‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌மிழக‌ ச‌ட்ட‌சபை கூட்டத்தொடர் இன்று காலை துவங்கிய நிலையில், இது தொடர்பாக ஆளுந‌ர் சு‌ர்‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா ஆற்றிய உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

பெரும் புலவரும், தனித்தமி‌ழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான மறைமலை அடிகளார் தலைமையில், 500க்கும் அதிகமான புலவர்கள் 1921ல் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் ஒன்றுகூடினர். தமிழர்களுக்கென்று ஒரு ‘தனி ஆண்டு’ தேவை என்று முடிவு செய்து, அ‌ய்யன் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினை பின்பற்ற தீர்மானித்தனர்.

அதையே ‘தமி‌ழ் ஆண்டு’என கொள்வதென்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவெடுத்தனர். இதை கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பே முதல்வர் கருணாநிதி ஏற்றுக்கொண்டு, 1971ம் ஆண்டு முதல் தமி‌ழ்நாடு அரசு நாட்குறிப்பிலும், 1972ம் ஆண்டு முதல் தமி‌ழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்தார்.

திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாக எல்லா தமி‌ழ் அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ள உண்மை. இதனால், தை மாதம் முதல் நாளையே தமி‌ழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்த அரசு முடிவு செ‌ய்துள்ளது.

எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடிவரும் தமிழக மக்கள், இனி தமி‌ழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகி‌ழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்வர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Anonymous said...

தமிழர்களின் புத்தாண்டு தைப் பொங்கல் தினத்திலா? தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இனிமேல் தமிழர்கள் இல்லையா? அல்லது இஸ்லாமியர்களது புத்தாண்டும் நீக்கப்பட்டுவிட்டதா?

மகர ராசியில் சூரியன் உச்சம் கொடுப்பது தை முதலாம் திகதி என்றால் இதில் சோதிடம் கலக்கவில்லையா?


முட்டாள்கள் ஆட்சியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம்.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

>> இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.

சனவரி ஒன்றாம் தேதியே கொண்டாடினா மூன்றும் சேர்ந்து பெருமகிழ்ச்சியா கொண்டாடலாமில்ல? காசு மிச்சமாகும்!

Anonymous said...

//Anonymous said...
தமிழர்களின் புத்தாண்டு தைப் பொங்கல் தினத்திலா? தமிழ் பேசும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இனிமேல் தமிழர்கள் இல்லையா? அல்லது இஸ்லாமியர்களது புத்தாண்டும் நீக்கப்பட்டுவிட்டதா?

மகர ராசியில் சூரியன் உச்சம் கொடுப்பது தை முதலாம் திகதி என்றால் இதில் சோதிடம் கலக்கவில்லையா?


முட்டாள்கள் ஆட்சியில் இருப்பதால் எதுவும் நடக்கலாம்.

ஒரு ஈழத் தமிழன்
//

ஈழத் தமிழன் பெயரை பயன்படுத்தி கமெண்ட் போட்டு இருப்பவன் ஒரு ஈனத் தமிழன், இவன் இஸ்லாமியர் பெயரிலும் காண்டு கஜேந்திரன் பதிவில் எழுதுபவன்.