தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உரிமைக்குரல் எழுப்பி வந்தரான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும், 91 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு கிளிநொச்சி பாரதிபுரத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மாணிக்கம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வின் பொதுச்சுடரினை போராளி காக்கா ஏற்றினார்.
ஈகச்சுடர்களை கிளிநொச்சி மாவட்ட எம்ஜிஆர் சங்கத் தலைவர் நா.வேலாயுதம், "புலிகளின் குரல்" செய்தியாளர் ந.கிருஸ்ணகுமார் ஆகியோர் ஏற்றினர்.
எம்ஜிஆர் அவர்களின் படத்திற்கு பாரதி வித்தியாலய முன்னாள் முதல்வர் கனகரத்தினம் சுடரேற்றினார்.
மலர்மாலையினை "இசைவிழி" வாணிபப் பொறுப்பாளர் கானொளியன் சூட்டினார்.
நினைவுரைகளை எம்ஜிஆர் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் இ.செல்வக்குமார், நா.வேலாயுதம் ஆகியோர் நிகழ்த்தினர்
நிகழ்வில் தமிழ் அரங்கக் கல்லூரியின் இசை நிகழ்ச்சியுடன் புதுவை அன்பனின் "ஒரு தாயின் கதை" ஆற்றுகையும், எம்ஜிஆர் நடித்த இரு படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நன்றி>புதினம்.
Friday, January 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment