Tuesday, January 15, 2008

தமிழர் புத்தாண்டு தினமான தைத்திருநாளில், தமிழர் தாயகத்தில் நடைமுறைக்கு வந்தது "நல்லளிப்பு"

தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஆரிய அடிப்படையிலான சித்திரைப் புத்தாண்டு தமிழரின் புத்தாண்டு என்று கருதப்பட்டு அதில் கைவிசேடம் வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது.

தமிழ் மக்களின் நடைமுறையில் உள்ள வழுக்களை களையும் வகையில் கைவிசேடம் எனப்படுவது தமிழரின் உண்மை புத்தாண்டான தைப்பொங்கல் நாளான புத்தாண்டு அன்று "நல்லளிப்பு" என்று வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கம் இன்று கிளிநொச்சியில் உள்ள தமிழீழ வைப்பகத்தில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலும் நல்லளிப்பு வழங்கப்பட்டது.
நன்றி>புதினம்.

1 comment:

Anonymous said...

kizhinsuthu poo