வீரகேசரி நாளேடு - ஐ.தே.க. எச்சரிக்கை;
சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியவேண்டிவரும் என்கிறது 2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதலைப்பட்சமாக விலகுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவு புலிகளுக்கு தனி நாட்டை பெற்றுக்கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட அபாயகரமான முடிவாகும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக புலிகளை நாம் சர்வதேச வலைக்குள் சிக்கவைத்திருந்தோம். எனினும் அதனை அரசாங்கம் நாசமாக்கிவிட்டது. எதிர்காலத்தில் சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியவேண்டிய துர்ப்பாக்கிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிகொள்வதாக எடுத்துள்ள முடிவு தொடர்பாக கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதி விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக மக்களுக்கு உறுதியளித்து 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது யுத்தநிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுப்பதகாக எழுத்து மூலமாக உறுதியளித்திருந்தது.2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஐக்கிய தேசியக்கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்காகவும் அரசியல் தீர்விற்காகவும் பொறுப்புடன் செயற்படுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. உடன்படிக்கை சட்டரீதியானது யுத்த நிறுத்த உடன்படிக்கை சட்டரீதியிலானது என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருக்கின்றது.இவ்வாறான பின்னணியில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கு அரசாங்கம் அவசரமாக தீர்மானத்தை எடுத்து அத்தீர்மானத்தை ஜனவரி மாதம் 3 ஆம் திகதி உத்தியோக பூர்வமாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதற்காக 2005 ஆம் ஆண்டும் அரசியல் தீர்விற்காக உழைப்பதாக 2006 ஆம் ஆண்டும் மக்களுக்கு உறுதிமொழி வழங்கிய அரசாங்கம் 3 வருடங்களுக்கு பின்னர் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிகொள்வதற்கு முடிவெடுத்தது ஏன்? என்ற சந்தேகம் இன்று வலுப்பெற்றுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் கைசாத்திடப்படுகின்ற போது நாடு யுத்தத்திற்கு முகம் கொடுத்து கொண்டிருந்ததுடன் பொருளாதாரம் சீரழிந்திருந்தது.இலங்கை படையினரின் பிரதான முகாம்கள் பல புலிகள் வசமிருந்தன. கட்டுநாயக்க விமான நிலையம் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி இருந்தது. துறைமுகங்கள் போன்ற பொருளாதார மத்திய நிலையங்கள் பலவற்றின் செயற்பாடுகள் புலிகளின் தாக்குதல்களால் செயலிழந்திருந்தன நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து பொருளாதார வளர்ச்சி மறை() வரையிலும் குறைந்திருந்தன. சர்வதேசத்தால் ஏற்கப்பட்ட உடன்படிக்கை
இவ்வாறான பின்னணியில் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமாக இருந்தது வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் தேசிய இறைமையை பாதுகாப்பதற்காகவுமேயாகும். வெளிநாடுகள் மற்றும் 67 சர்வதேச அமைப்புகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக இறைமை ஒருமைப்பாட்டை பாதுகாக்க மற்றும் அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என்பதை ஏற்றுக்கொண்டிருந்தன.பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வாழ்க்கை சுமை அதிகரித்திருந்த நிலையில் டொலரின் பெறுமதி 93 ரூபா வரை சக்திபடைத்து நாட்டினது நிலைமையை முன்னகர்த்தி முதலீட்டார்கள் அதிகளவாக வருகைதந்ததன் மூலமாக புதிய தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டன. அமெரிக்க மிலேனியம் வெலஞ் நிதியம் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. டோக்கியோ உதவி மாநாட்டில் 45 ஆயிரம் கோடி டொலர் நிதியுதவியை நமக்கு வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா யுத்த கப்பலை இலவசமாக வழங்கியது வருடக்கணக்கில் இருந்த ஆயுத தடையை நீக்குவதற்கு அமெரிக்கா, இந்தியா,மற்றும் ஐக்கிய நாடுகள் இலங்கைக்கு இராணுவ பயிற்சி , ஆலோசனை மற்றும் ஆயுதங்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தன. பயங்கரவாத நடவடிக்கையை ஒழிப்பதற்காக சர்வதேச புலனாய்வு பிரிவினரிடமிருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இதன் பயனாக அமெரிக்காவின் யுத்தக்கப்பல் இலவசமாககிடைத்தது.
அவ்வாறு நாட்டை சக்திபடைத்து கொண்டு நாம் அரசியல் தீர்வொன்றிற்காக பேச்சுவார்த்தையை முன்னகர்த்திக்கொண்டு சென்றோம். ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது தனிஇராச்சியத்திற்கு பதிலான மாற்றுத்திட்டங்களை முன்வைப்பது தொடர்பாக பேசுவதற்கு புலிகளை இணங்க வைப்பதற்கு எங்களுக்கு முடிந்தது. இனங்கள் ஐக்கியப்படுத்த முடிந்தது
இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்பட்டது. சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் வடக்கு மற்றும் தெற்கிற்கு பயணிப்பதற்கு சர்ந்தர்ப்பம் கிடைத்ததுடன் சகலரும் இலங்கையர்கள் என்ற உணர்வும் ஏற்படுத்தப்பட்டது. புலிகள் அமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாத தீர்வை நோக்கி சென்றுகொண்டிருந்த பாதையை விட்டு விலகி 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிச்சென்றனர். பேச்சுவார்த்தை மேசையிலிருந்து புலிகள் விலகிநிற்பதற்கு புலிகள் தீர்மானித்திருந்த போதும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாக மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்தனர். 2003 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறியமை மிகவும் குறைவாகவே இருந்தது. எனினும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் கலைக்கப்பட்டதனால் அரசியல் தீர்விற்கான பாதை மூலமாக முன்னோக்கி செல்வதற்கு சந்தர்ப்பம் இல்லாதொழிந்தது.புலிகளை சர்வதேச வலைக்குள் சிக்கவைத்திருந்தோம் சர்வதேச சமூகத்தினரால் மதிக்கப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் வலைக்குள் தாம் சிக்கவைக்கப்பட்டதாக புலிகள் பலமுறை குற்றஞ்சாட்டினர். இதற்கு முன்னர் இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிசென்ற புலிகள் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி சென்றால் சர்வதே சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக அதிலிருந்து விலகிக்கொள்ள முடியாதிருந்தது.இன்று யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிகொண்டமைக்கான முழு பொறுப்பையும் இலங்கை அரசாங்கம் தனது தோளில் சுமந்து கொண்டது. இதன் மூலமாக இலங்கை சர்வதேசத்தின் விமர்சனங்களுக்கு உள்ளாகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேசம் கண்டித்துவருகின்றதுயுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட முடிவை சர்வதேச சமூகம் கண்டிக்கக்தொடங்கிவிட்டது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா போன்ற நட்புறவு நாடுகளும் சர்வதேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கண்டித்துள்ளன. நிதியுதவிகளை வழங்குகின்ற நாடுகளும் கண்டித்துள்ளன. அதிகாரத்தை பகிர்வதற்கான தீர்வு திட்டத்தை விரைவில் முன்வைப்பதாக இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு பல தடவைகள் முன்மொழிந்ததன் பின்னர் இவ்வாறானதொரு முடிவை எடுத்தமையினால் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது கடும் அதிருப்தியினை கொண்டிருக்கின்றது.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் இலங்கையின் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் இறுதி கோட்டை இலங்கை அரசாங்கத்தினாலேயே கீறப்பட்டுவிட்டது. இதன் பெறுபேறாக சர்வதேச சமூகத்தின் ஆதரவு நாட்டிற்கு கிடைக்காமல் போய்விடும் என்பதுடன் இலங்கைக்காக செயற்பட்ட நாடுகளின் அழுத்தங்கள் குறைந்து விடும். அச்சுறுத்தல் கொண்ட நாடாகும்
யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து அரசாங்கம் விலகியதிலிருந்து சிவில் யுத்தம் இடம்பெறுவதற்கான அச்சுறுத்தல் கொண்ட நாடாக சில நாடுகள் இலங்கையை மீண்டும் பெயர்குறிப்பிட்டுள்ளன.
எமக்கு கிடைக்கின்ற நிதியுதவி குறைந்து முதலீட்டாளர்களின் வருகை குறைந்து செல்லும். வந்திருக்கின்ற முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.யுத்த உதவிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவது நிறுத்தப்படும். இதன் பொதுவான பெறுபேறாக சர்வதேச மட்டத்தில் இலங்கை பலவீனம் புலிகள் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அதிகளவாக சக்தியடைவார்கள்.
அதுமட்டுமல்லாது யதார்த்தம் இன்னும் இன்னும் அபாயகரமானது யுத்த நிறுத்த ஒப்பந்தம் வேறு நாடுகளில் செய்துக்கொள்ளப்பட்டதை போலன்றி விசேடமானதாகவே கணிக்கப்பட்டது. வேறு நாடுகளில் சண்டையிட்டுக்கொள்ளகின்ற இரண்டு தரப்பின் படையினரையும் ஒரேமட்டத்தில் வைத்துகொண்டே இவ்வாறான ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகின்றது. எனினும் இந்த ஒப்பந்தத்தின் 1;3 பிரிவின் பிரகாரம் இலங்கையின் இறைமை ஒருமைப்பாடை தொடர்ந்து பாதுகாப்பதற்கான பொறுப்பு இலங்கை ஆயுத படையினருடைய பொறுப்பாகும். இந்த உரிமையை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல புலிகளும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
யுத்த நிறுத்தத்தை முன்னிலைப்படுத்தி சமாதானபேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படுகின்ற போது புலிகள் இலங்கை ஆயுத படைகளின் உரிமையை ஏற்றுக்கொண்டு அதற்கிணங்க செயற்படவேண்டிய நிலை ஏற்படும். மோசமான நிலைக்கே வழிவகுக்கும் வெளிவிவகார மற்றும் ஊடக அமைச்சர்கள் கூறுவதைப்போல யுத்த நிறுத்த ஒப்பந்தம் இன்றி மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என்றும் அவ்வாறான தொரு நிலை ஏற்பட இலங்கை முன்பிருந்த நிலையினை விடவும் மோசமான நிலைக்கே முகம் கொடுக்க வேண்டியநிலை ஏற்படும். பேச்சுவார்த்தை மேசையில் இலங்கை ஆயுதப் படையை உயர் மட்டத்தில் ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இந்த அரசாங்கத்தினால் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல எதிர்காலத்தில் சர்வதேச சமூகம் மற்றும் புலிகளுக்கு இலங்கை படையினரின் பரம உரிமையை ஏற்றுக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும். இன்று பழைய யூகோஸ்லாவிய யுகமே உருவாகியுள்ளது. இலங்கை அரசாங்கம் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைக்குச் சென்றால் இலங்கை படையினரும் புலிகளின் படையினரும் சமமானவர்கள் என்ற கணிப்பீட்டின் அடிப்படையிலேயே செல்லவேண்டியிருக்கும். இது அபாயகரமானது. இந்த அபாயகரத்தை இலங்கை அரசாங்கமே ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இராணுவத்திற்கே படையினருகோ நன்மையில்லை யுத்த நிறுத்தத்திலிருந்து விலகிகொண்டமையினால் தேசிய ரீதியில் எமக்கு எவ்விதமான நன்மையும் இல்லை. இலங்கை படையினரின் உரிமையை ஏற்றுக்கொள்வதை அரசாங்கத்தின் மூலமாகவே மீறப்பட்டு விட்டது. இதனால் இராணுவத்திற்கோ படையினருக்கோ எவ்விதமான நன்மையோ சக்தியோ இல்லை. அரசாங்கத்தின் இந்த முடிவினால் இலங்கையின் எதிர்காலம் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் மட்டுமல்லாது பேச்சுவார்த்தை மேசையில் நாம் பலமிழந்த நிலையிலேயே இருக்க வேண்டிய நிலைக்கு அரசாங்கத்தின் முடிவு அமைந்துள்ளது.புலிகளே பலம்பெற்றுள்ளனர்அரசாங்கத்தின் இந்த முடிவின் மூலமாக புலிகள் பலம்பெற்றுள்ளனரே தவிர அதன் மூலமாக நாட்டிற்கோ மக்களுக்கோ எவ்விதமான நன்மையும் இல்லை அரசாங்கதின் இந்த முடிவு புலிகளின் தனிநாட்டு கோரிக்øகக்கு சர்வதேச வாய்ப்பான சூழலை ஏற்படுத்தி கொடுத்தமைக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
யுத்த மற்றும் இரத்த வெள்ளத்தில் மிதந்த நிர்வாகிகளுக்கு யதார்த்தம் பற்றி தெரியாது என்பதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பலக்கமின்மையே எடுத்துக்காட்டுகின்றது.வைராக்கியத்துடன் வைராக்கியமாக செயற்படகூடாது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வின் மூலமாக இந்தநாட்டிற்கு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே ஐக்கிய தேசியக்கட்சியின் விசுவாசமாகும் ஜனநாயகவாதிகளாக நாம் செயற்பட்டால் மட்டுமே பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடிக்கமுடியும். வைராக்கியத்துடன் வைராக்கியமாகவோ, பயங்கரவாதத்துடன் பயங்கரவாதமாகவோ தோல்வியடையச்செய்ய முடியாது என்பதை இன்றைக்கு 2550 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் கற்றுக்கொண்டுள்ளோம். எனினும் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாட்டின் மூலமாகவே தீர்வு காணமுடியும். உலகத்திலுள்ள பல நாடுகளும் இவ்வாறான முறையின் மூலமாகவே பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கின்றது. அவ்வாறான தீர்விற்காக எமது ஆதரவை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் .எனினும் அதிகாரத்தை பாதுகாத்து கொள்வதற்காக நாட்டின் எதிர்காலத்தை அடகுவைக்கும் தீர்மானத்திற்காக நாம் மௌனமாக இருக்கமுடியாது. அரசாங்கத்தின் இந்த முடிவு புலிகளுக்கு வேறு இராஜ்ஜியத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முக்கியமான தீர்மானமாகும் .நாடு தேசியம் மற்றும் இனம் எதிர்காலம் யாவுமே அபாயகரமானது. அதிஷ்டமில்லாதது. இழுத்து வீசி யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் விலகிக்கொண்டமை ஏன்? இவ்வாறான அதிஷ்டமில்லாத போது அரசாங்கத்தினால் எவ்வாறு அரசியல் தீர்வை நோக்கி செல்ல முடியும். இந்த பயங்கரமான பிரச்சினைக்கு அரசாங்கத்திடமிருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய பதில் தேவை.
Monday, January 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment