Saturday, January 05, 2008

சிறீலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்த விலகலுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை!!!

ஏறக்குறைய 6 ஆண்டுகாலமாக சிறீலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சிறீலங்கா அரசு விலகியமைக்கும், மனித உரிமைகளைப் பேண சிறீலங்கா அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரான்ஸ் அரசு உத்தியோக பூர்வமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற் கூறப்பட்ட கருத்துக்களை, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டு உதவி அமைச்சர் ராம யாடே அவர்கள், இயற்கை அழிவுகள் மற்றும் மனித உரிமைகள் துறை சார் அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசு சனநாயக கோட்பாடுகளை கடைப்பிடிக்க முன் வரவேண்டும் என்பதோடு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயற்பாடுகளுக்கு சிறீலங்கா அதிகாரவர்க்கம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் ராம யாடே அம்மையார் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளர் படுகொலை செய்யப்பட்டமைக்கான முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: