Monday, January 07, 2008

விடுதலைப் புலிகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்!!!

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஸ்லோவேனியன் நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசு போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து தன்னிச்சையாக வெளியேறியது உக்கிர மோதல்களுக்கே வழிவகுக்கும். இந்த மோதல்களில் பெருமளவான மக்கள் கொல்லப்படலாம். விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்கா அரசு தனது அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.

பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டதும், சிறிலங்கா அரசு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் தீர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்க வேண்டும். இருதரப்பும் அரசியல் தீர்வை நோக்கி செயலாற்ற வேண்டும் அதுவே சிறிலங்காவில் நிரந்தர அமைதியைக் கொண்டு வரும்.

போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து சிறிலங்கா அரசின் தன்னிச்சையான வெளியேற்றம் மோதல்களை தீவிரமடைய செய்யும். இது எற்கனவே மோசமடைந்துள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை மீறல்களை மேலும் மோசமடைய செய்யும்.

போர் நிறுத்தம் முறிந்து போனது பேச்சுவார்த்தைக்கான வழிகளை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. போர் நிறுத்த கண்காணிப்புக்குழு வெளியேறுவதும் கவலை அளிக்கின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>புதினம்.

No comments: