சிறீலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டதாக அறிவித்துள்ளது. இவ் அறிவிப்பானது, சிறீலங்காவில் முதலீடு மேற்கொள்ளவிருந்த வர்த்தக சமூகங்களின் நம்பிக்கையை இழக்க வைத்திருப்பதாக ரொய்ட்டஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு தலைப்பட்சமாக சிறீலங்கா அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதால் அனைத்துலக சமூகத்திலிருந்தும் தனிமைப்படுத்தப்படும் அபாயத்தை கொண்டிருப்பதாக மேலும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோர்வே நாட்டின் அனுசரணையுடன் 2002ம் ஆண்டு சிறீலங்கா தரப்புக்கும், தமிழ்த்; தரப்புக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்த போதும், 2005ம் ஆண்டு ஆரம்பப் பகுதியிலிருந்து யுத்த மீறல் சம்பவங்கள், குறிப்பாக தமிழர் தாயகப் பிரதேசத்தில் பாரிய அளவில் ஏற்பட்டுள்ளன.
’போர்நிறுத்தம் ஏற்கனவே முறிவடைந்துவிட்டது என்பது நமக்குத் தெரியும். இருந்தும் போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து தாம் அதிகாரப்பூர்வமாக விலகப்போவதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. இவ் அறிவித்தலானது பெரியதொரு வேறுபாட்டை கொண்டுவரப்போவதில்லை’ என லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் தென் ஆசிய பிராந்தியத்திற்கான பாதுகாப்பு ஆலோசகர் ஜெனிபர் ஹார்பிசன் தெரிவித்துள்ளார்.
மேற்கு நாடுகள் சிறீலங்கா அரசைத் தனிமைப்படுத்த முயற்சிக்குமேயாயின், சிறீலங்கா அரசு ஈரான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுடன் நட்புறவைப் பலப்படுத்தும் எனவும் பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
Thursday, January 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment