Sunday, January 27, 2008

பிரித்தானியாவில், கருணாமீது தாக்குதல் நடாத்தபட்டு,சுடுநீர் ஊற்றாப்பட்டது.

பிரித்தானிய சிறையில் கருணா மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான த நேசன் தெரிவித்துள்ளது.

போலியான கடவுச்சீட்டுடன் பிரித்தானியாவுக்கு தப்பி ஓடிய சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுக்களின் முன்னாள் தலைவரான கருணாவுக்கு 9 மாதங்கள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது சிறையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:9 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ள கருணா மீது சிறையில் சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகம் உள்ள சிறையிலேயே கருணா அடைக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அரசியல் கைதியாகவே வைக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறையில் இரு தமிழ்க் கைதிகளும் உள்ளனர். அவர்கள் வேறு குற்றங்களுக்காக அங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள தமிழ்க் கைதிகள் கருணா மீது வெந்நீரைக் கொட்டியதுடன், ஆயுதங்கள் கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கருணாவுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே கருணா தனது சிறைவாசத்தை நிறைவு செய்த பின்னர் அவர்மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது தொடர்பில் மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:

கருணா தனது சிறைவாசத்தை அங்கு கழித்த பின்னர் அவர் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும். ஆனால் அவர் மீதான போர்க்குற்றங்களை பிரித்தானியாவில் விசாரணை செய்யுமாறு அனைத்துலக மன்னிப்புசபை, மனித உரிமை கண்காணிப்பகம் ஆகியன பிரித்தானியா அரசுக்கு அழுத்தங்களை கொடுத்து வருகின்றன.

சித்திரவதைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல், படுகொலைகள் போன்ற அவர் மீதான போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கருணா மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி>லங்காசிறீ

1 comment:

Anonymous said...

எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படமுடியுமோ அவ்வளவுக்கு அவ்வளவு கறுணா கேவலப்பட்டு, அசிங்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாக கருணா இருந்தவேளை மட்டக்களப்பு சனம் தலைவருக்குப் பக்கத்திலை வைச்சுத்தான் கருணாவைப் பார்த்தது. அப்படி இருந்த கருணாவின் மதிப்பு இப்ப சூடுதண்ணியாலை ஊத்து வாங்கிற அளவிற்கு வந்திட்டுது.

கருணா தனது பழைய நிலையையும் நினைச்சு தற்போதைய நிலையையும் நினைச்சு அடிக்கடி இப்படிப் புலம்புறாராம்.

"எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டனே"