Friday, January 18, 2008

790 பள்ளிப் பிள்ளைகளைக் கொல்லும் சிறீலங்கா விமானப்படையின் திட்டம் முறியடிப்பு!!!



கிளிநொச்சி நகரின் மத்தியில் உள்ள பள்ளிகளை இலக்கு வைத்து குண்டு மழை பொழிய வந்த விமானங்களை விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு படைப்பிரிவினர் அவற்றின் இலக்கை அடையாது, விரட்டி அடித்துள்ளனர். இதன் மூலம் நூற்றுக்கணக்கான அப்பாவி பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் காக்கப்பட்டுள்ளன.



புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவின் தாக்குதலில் இருந்து தப்பிப் பறக்கும் விமானம்.

பல சுற்று விமானக் குண்டுகளை இலக்கு நோக்கி வீச முனைந்த சிறீலங்கா வான்படையின் அதி வேக விமானங்களை எதிர்த்து புலிகளின் விமான எதிர்ப்புப் பிரிவு நடத்திய தீவிர எதிர்த்தாக்குதலை அடுத்து அவை இலக்கை அடையா வண்ணம் தடுக்கப்பட்டுள்ளன.


இதன் காரணமாகவும் பதுங்குகுழிகளில் அடைக்கலம் பெற்றதன் காரணமாகவும் சுமார் 790 பள்ளிப் பிள்ளைகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

தமது நாசகார நோக்கத்துக்கான இலக்குகளை அடைய முடியாத விமானிகள்.. இலக்குகளைச் சுற்றிய பகுதிகளில் குண்டுகளைப் போட்டு விட்டு விமானங்கள் தப்பிப் பறந்துள்ளன. இதனால் ஒருவர் பலியாகி 7 பேர் காயமடைந்துள்ளனர்.




விமானத் தாக்குதல் வலிந்து ஓய்வுக்குக் கொண்டு வரப்பட்ட பின் மக்கள் பாதுகாப்பிடங்களை நோக்கி ஓடும் பதட்டமிகு காட்சி.



விமானப்படை வீசிய குண்டுகளில் ஒன்று நிலத்தை ஊடுருவி வெடித்ததில் ஏற்பட்ட 20 அடி ஆழமான குழி.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24320

No comments: