சிறீலங்கா அரசிற்கான ஆயுத ஏற்றுமதி அனுமதிப் பத்திரத்திற்கான தடை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
ஆனால் படைத்துறை தொழில்நுட்ப தகவல்கள், கடல், மற்றும் ஆகாய பாதுகாப்பு தொடர்பான தகவல் தொழில்நுட்ப பரிமாற்றம் என்பவற்றுக்கான அனுமதிப்பத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில், தேவையின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் ஆயுத ஏற்றுமதிக்கான இணையத்தளத்தில் சிறீலங்கா அரசுக்கான இந்த அனுமதிப்பத்திரத்தடை தொடர்பான அறிவித்தல் 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் முதல் அமுலுக்கு வரும்வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்க செனட்டர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு, அமெரிக்க அதிபர் ஜேர்ர்ஜ் புஷ்ஷிளால் கையெழுத்திடப்பட்டுள்ள கொங்கிரஸின் 110வது அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள சிறீலங்கா அரசிற்கான ஆயுதத்தடையின் ஒரு அங்கமாக இந்த அனுமதிப்பத்திர தடை பற்றிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி<பதிவு.
Thursday, January 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment