சர்வதேச பயங்கரவாதத்தை இலங்கையே ஆதரிக்கிறது என்கிறார்
அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பணியகம் (எவ்.பி.ஐ.) சமீபத்தில் விடுதலைப் புலிகள் குறித்து விடுத்த அறிக்கை பிழையாக வழிநடத்துவது, ஆதாரமற்றது என்று கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் முன்னாள் உதவிப் பிரதி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன், விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக செயற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் சுதந்திரக்கொள்கை பிரகடனத்தின்படியும், சர்வதேச சட்டங்களின் கீழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனிநாட்டை அமைப்பதற்கான உரிமையுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீதிக்கான தமிழர் அமைப்பின் சட்டத்தரணியாகவும் இருக்கும் புருஸ் பெய்ன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு:
எவ்.பி.ஐயின் அறிக்கையில் கடந்த இரு வருட காலப்பகுதியில் விடுதலைப் புலிகளால் நாலாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான ஆதாரங்கள் இல்லை. இந்த எண்ணிக்கை எவ்வாறு கணக்கிடப்பட்டதெனவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் தமிழர்கள். நம்பகத்தன்மை மிக்க வட்டாரங்களின் படி இவர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாகும்.
விடுதலைப் புலிகளே உலகில் மிகவும் ஆபத்தானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விடுதலைப் புலிகள் அமெரிக்கர் ஒருவரைக் கொலைசெய்துள்ளனரா அல்லது அச்சுறுத்தியுள்ளனரா என்று தெரிவிக்கப்படவில்லை.
அமெரிக்கர் ஒருவரை அச்சுறுத்தினாலோ, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்தாலோ மாத்திரமே வெளிநாட்டுப் பயங்கரவாத பட்டியலில் அமைப்பொன்றைச் சேர்க்கலாம் என சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக விளங்குகின்றனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. மாறாக இலங்கை அரசோ அமெரிக்காவின் எதிரிகளுடன் நட்புறவு வைத்துள்ளது. ஈரானின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு அது ஆதரவு வழங்குகின்றது. கியூபாவுடன் நட்புறவு பாராட்டுகிறது.
விடுதலைப் புலிகள் இரு உலகத் தலைவர்களைக் கொன்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிரூபிப்பதற்கான தடயங்கள் முன்வைக்கப்படவில்லை.
மேலும் இது பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளால் அமெரிக்காவிற்கு தற்போதுள்ள அபாயம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும் தமிழ் புலிகளின் தலைவரை சமாதான பேச்சுகளின் போது கடத்திக் கொல்வதற்கு ராஜீவ்காந்தி உத்தரவிட்டார் எனவும் சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
1977இல் தமிழ் தேசமொன்றை உருவாக்குவதற்கு தமிழர்கள் ஒருமித்த குரலில் ஆதரவளித்தனர். ஆனால் தமிழர்கள் ஒருபோதும் சிங்களவர்களின் இறைமையை நிராகரித்தவர்கள் அல்லர்.
இலங்கையில் தமிழர் ஒருவர் ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ பதவி வகித்ததில்லை. இராணுவத் தளபதியாக இருந்ததில்லை.
தமிழர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படவில்லை. புறக்கணிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இனப்படுகொலைக்காக சிங்களவர்கள் எவரும் தண்டிக்கப்படவேயில்லை.
மேலும் எவ்.பி.ஐ. தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.
இலங்கை அரசில் பணிபுரியும் நிரந்தர அமெரிக்கப் பிரஜையொருவர் அமெரிக்கக் குற்றவியல் சட்டத்திற்கு மாறாக சித்திரவதை , மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், சட்டவிரோத படுகொலைகள் என்பவற்றில் தொடர்புபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் அரச சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டமைக்கும் இலங்கை அரசே காரணம்.
ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவு வழங்கும் ஈரானிற்கு இலங்கை சார்பாக உள்ளது. அதனால் இலங்கை அரசை வெளிவிவகார அமைச்சின் சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கும் நாடுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும். என்று உள்ளது.(உ)
http://www.sudaroli.com/pages/news/today/02.htm
Thursday, January 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல ஆக்கம். யாருக்கு விளக்கப்போகுது,, பாப்பாம்.
மிக நல்ல ஆய்வு.
நன்றி
Post a Comment