மட்டக்களப்பில் இயல்பு நிலையை தோற்றுவிப்பதானால் கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா இராணுவத்தின் மட்டக்களப்பு மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜென்ரல் தயா ரட்னாயக்கா வலியுறுத்தியுள்ளார்
அண்மையில் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினருடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியதாக யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
முதல் தடவையாக ஸ்ரீலங்காவின் படை அதிகாரி ஒருவர் கருணா குழுவிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கருணா குழுவினர் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது குறித்து தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஸ்ரினர் செவின்சன் தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல், கப்பம் அறிவிடல், மக்களை முகாம்களுக்கு அழைத்து அங்கு சித்தரவதை புரிதல் போன்ற நடவடிக்கைகளில் கருணா குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி>பதிவு.
Sunday, August 05, 2007
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இப்போ அந்த சிங்களவன் ஒரு கடவுள் மாதிரி இருக்குமே.....இப்படி தானே..பிரேமடாசவும் உங்களை ஒரு தடவை காப்பாற்றி விட்டான்...
இப்போ அந்த சிங்களவன் ஒரு கடவுள் மாதிரி இருக்குமே.....இப்படி தானே..பிரேமடாசவும் உங்களை ஒரு தடவை காப்பாற்றி விட்டான்...
எதியை மன்னிக்கலாம் ஆனால் துரோகிக்கு எக்காலத்திலும் மன்னிப்பு கிடையாது அவன் அழிக்கப்படவேண்டியவன்.
Post a Comment