Friday, August 17, 2007

சிறிலங்காவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் விமர்சனம் செய்துள்ளமைக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஜோன் ஹோல்ம்ஸ், உலகிலேயே மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்ற மிகவும் ஆபத்தான இடம் சிறிலங்கா என்று சாடியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, பயங்கரவாதிகளை ஆதரிக்கும் ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்றும் விடுதலைப் புலிகளிடம் கப்பம் பெற்றார் என்றும் கூறியிருந்தார்.

இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஐ.நா. பேச்சாளர் மைக்கேல் மோண்டஸ் கூறியதாவது:

ஜோன் ஹோல்ம்சை பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. விரும்பத்தகாதது. ஹோன் ஹோல்ம்சின் அவசரகால நிவாரண ஒருங்கிணைப்பு பணிகளுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் முழுமையாக ஆதரவளிக்கிறார் என்றார் அவர்.
நன்றி>புதினம்.

No comments: