Tuesday, August 28, 2007

அமிர்தலிங்கம் பாவம். அவரது குடும்பதிலிருந்தே அவரை மீட்டெடுக்க வேண்டிவருகிறது-- அமீர் குடும்பத்தை வசைபாடும் தேனீ!!!

அமிர்தலிங்கம் நினைவுச் சொற்பொழிவில் அமளி ஏற்படுத்திய ஆவரங்கால் சங்கக்கடை சின்னத்துரை !
-நமது லண்டன் விசேட செய்தியாளர்
லண்டனில் நேற்று நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களின் நினைவுச் சொற்பொழிவை அமளி ஏற்படுத்தி குழப்ப முயன்ற தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு ஆவரங்கால் சங்கக்கடை சின்னத்துரை அவர்கள் எச்சரித்து விடப்பட்டார்.

திருவாளர் அமிர்தலிங்கம் அவர்களின் 80வது நிiவு தினத்தையொட்டி ஏற்பாடாகியிருந்த இந்த நிகழ்வில் அடங்காத் தமிழர் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களும், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு ரட்ணஜீவன் கூல் அவர்களும் சொற்பொழிவாற்ற ஏற்பாடாகியிருந்தது. இந்த இரு சொற்பொழிவாளர்களும் சர்வதேச கீர்த்திமிக்கவர்கள் என்பதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளால் மரணதண்டனை விதிக்கப்பட்ட பெருமைக்குரியவர்களுமாவார்கள்.

இந்த விழாவிற்கு யாழ் ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியைச் சேர்ந்த, யாழ்.புத்தூர் கிழக்கு சங்கக்கடை முன்னாள் முகாமையாளர் திரு ஆவரங்கால் சின்னத்துரை அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். திரு ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள் சங்கக்கடை பதவி இழந்த பின்னர் ஏஜன்சி வேலைசெய்து வெளிநாட்டிற்குத் தமிழ் அகதிகளை அனுப்பிவந்ததில் மோசடி செய்த குற்றச்சாட்டில் யாழ்.சாவகச்சேரி இணக்கசபையினால் விசாரணைசெய்யப்பட்டவராக இருந்திருந்தும், திருவாளர் அமிர்தலிங்கம் அவர்களை அபகீர்த்தி செய்யும்பொருட்டு லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணியிலுள்ள புலிகள் ஆதரவுக் குழுவினரால் இக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்ற அனுமதிக்கப் பட்டிருந்தார். இவைகளைவிட, ஆவரங்கால் விவசாயிகளின் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் மிக மோசமான ஊழல்களில் ஈடுபட்டு தமிழரசுக்கட்சியிலிருந்த தனது செல்வாக்கால் தண்டணையிலிருந்து தப்பித்துக் கொண்ட திரு ஆவரங்கால் சின்னத்துரையை, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் திரு அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவைத் தொடர்ந்து காலியான மதியுரைஞர் பதவியை இலக்குவைத்து மிகக் கேவலமாக இவர் அண்மைக்காலங்களில் இயங்கிவருவது பரவலாகத் தெரிந்திருந்தும், மேற்படி கூட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது தமிழர் விடுதலைக் கூட்டணி லண்டன் ஆதரவாளர்கள் பலரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியிருந்தது. இவரையும், இவரைப் போலவே பலமான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள திரு சிவசுப்பிரமணியம் அவர்களையும் மேற்படி கூட்டத்திற்கு அழைத்து கௌரவப்படுத்தியிருந்தது லண்டன் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரவாளர்கள் பலரிற்கு கொதிப்பேற்படுத்தியிருந்ததை கூட்டத்தில் பங்குபற்றியிருந்த பலருடன் உரையாடும்போது அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

மேற்படி கூட்டத்தில் தமிழர் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்கள் உரைநிகழ்த்தியபோது, தவிர்க்க முடியாமல் தமிழீழ விடுதலைப் புலிகள் புரிந்த படுகொலைகளைப்பற்றிக் குறிப்பிடவேண்டி வந்த சந்தர்ப்பத்தில் திரு சின்னத்துரை அவர்கள் குறுக்கிட்டு அமளி ஏற்படுத்தி நினைவுதின நிகழ்வை குழப்ப முனைந்திருந்தார். அவலமாக இறந்த ஒரு அரசியல் தலைவரின் நினைவுதின நிகழ்வில், அதுவும் குத்துவிளக்கு ஏற்றி அந்நிகழ்வை ஆரம்பித்துவைத்தவரே எந்தவித அடிப்படை நாகரீகமுமின்றி அந் நிகழ்வை குழப்பமுயன்றபோது, கூட்டத்தில் பங்குபற்ற வந்திருந்த பலர் கொதித்தெழுந்து அவரை வெளியேற்ற முயன்றனர். எனினும் திருவாளர் அமிர்தலிங்கம் குடும்பத்தினரின் தலையீட்டால் அம்முயற்சி கைவிடப்பட்டது. பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் திரு.தீபன் அவர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டு, மன்னிப்புக் கேட்டுக் கொண்டதைத்தொடர்ந்து அவர் தொடர்ந்தும் கூட்டத்தில் பங்குபற்ற அனுமதிக்கப் பட்டிருந்தார்.

தலைவர் ஆனந்தசங்கரியைத் தொடர்ந்து நினைவுச் சொற்பொழிவாற்றிய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் அவர்களும் தனது பேச்சில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனர்த்தங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்திருப்பினும், அவர் தனது சொற்பொழிவை ஆங்கிலத்திலேயே நிகழ்த்தியிருந்த காரணத்தால் ஆவரங்கால் சங்கக்கடை சின்னத்துரை உட்பட மேற்படி கூட்டத்தில் பங்குபற்றியிருந்த புலிகளின் ஆதரவாளர்களால் அவரது பேச்சைக் குழப்ப முடியவில்லை.

மேற்படி கூட்டத்தில் பங்குபற்றியிருந்த தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் ஆழந்த அனுதாபி ஒருவர், “ஆவரங்கால் சின்னத்துரையைக்கூப்பிட்டு இந்த விழாவை குத்துவிளக்கேற்றி ஆரம்பிக்க வைத்தது, பிள்ளையாருக்கு இறைச்சியால் படையல் செய்தது மாதிரி. தலைவர் அமிர்தலிங்கம் பாவம். அவரது குடும்ப்திலிருந்தே அவரை மீட்டெடுக்க வேண்டிவருகிறது” என கோபத்துடன் கவலை தெரிவித்தார்.
http://www.theneeweb.de/html/2808071.html

No comments: