Wednesday, August 15, 2007

சிறீலங்காவில் வெளிநாட்டுப் படைகளின் தலையீடு - அரசு அச்சம் கொள்வதாக கொழும்பு ஊடகம்!

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அனைத்துலக நாடுகள் கண்டித்துவரும் நிலையில், வெளிநாட்டுப் படைகளின் தலையீடு நிகழ வாய்ப்பு இருப்பதாக, அரசு அச்சப்படுவதாக கொழும்பின் ஆங்கில ஏடு ஒன்று தெரிவிக்கின்றது.

சிறீலங்காவில் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பணியாற்ற முடியாத நிலை காணப்படுவதாக ஐ-நா துணைப் பொதுச் செயலாளர் கலாநிதி ஜோன் ஹோம்ஸ் வெளியிட்ட கருத்து, மூதூரில் ஏ.சி.எஃப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை பற்றி அவுஸ்திரேலிய நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கை, மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகளால் இந்த நிலை தோன்றியுள்ளதாக அரசு கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள், மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி போன்றவற்றின் கைப்பாவையாக அனைத்துலகம் திகழ்வதாகவும், மகிந்த அரசு மீது குற்றச்சாட்டுக்களையும், கண்டனங்களையும், முன்வைத்து வருவதாகவும், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நன்றி>பதிவு.

No comments: