Tuesday, August 14, 2007

யாழில் உண்டியல் திருடும் சிறிலங்கா இராணுவத்தினர்!!!

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் உண்டியல்களை உடைத்து திருடி வருகின்றனர்.

தென்மராட்சி வேம்பிராய், சரசாலை, கைதடி, நாவற்குழி ஆகிய இடங்களில் ஆலயங்களில் உண்டியல்களை சிறிலங்கா இராணுவத்தினர் உடைத்து திருடி வருகின்றனர். அண்மைக்காலமாக இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து காணப்படுகின்றன.

தேடுதல் நடவடிக்கை

வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சிறிலங்கா இராணுவத்தினர் சுற்றிவளைப்புத் தேடுதலை நடத்தினர்.

கண்களைக் கட்டிய நிலையில் இரண்டு இளைஞர்களை அழைத்து வந்த இராணுவத்தினர் இவர்கள் புலிகளா? என்று கேட்டுள்ளனர்.

இந்த இரு இளைஞர்களும் நேற்று அப்பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் பேர்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதனிடையே தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் புதிதாக காவலரண்களை அமைத்துள்ளனர்.

கொடிகாமம் சந்தைக்கு அண்மையாக இந்தக் காவலரண்கள் அமைக்கப்படுவதால் மக்கள் சந்தைக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

மேலும் யாழ். தீவகம், நெடுந்தீவுக்கு பயணம் செய்வோர் ஆக்கூடிய தொகையாக 10,000 ரூபாயை மட்டுமே எடுத்துச் செல்ல சிறிலங்கா இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர்.
நன்றி>புதினம்.

No comments: