Monday, August 27, 2007
லண்டனில் மூக்குடைந்த ஆனந்தசங்கரி - அமிர்தலிங்கத்தின் பிறந்தநாளில் குழப்பம்!!!
அமிர்தலிங்கத்தின் 80வது பிறந்தநாள் அவரது மனைவி மங்கயற்கரசி அமிர்தலிங்கம், மகன் பகீரதன் அமிர்தலிங்கம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
லண்டன் வொறன் ஸ்றீர் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்திற்கு அலுகிலுள்ள “இந்தியன் வை.எம்.சி.ஏ” கட்டிடத்திலுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்திலேயே குழப்பம் ஏற்பட்டிருந்தது.
அமிர்தலிங்கம் குடும்பத்தினால் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசாரத்திற்கு என அழைக்கப்பட்ட ஆனந்தசங்கரி, அமிர்தலிங்கத்தைப் பற்றிப் பேசாது, தன்னைப் பற்றிப் பேசியதே குழப்பம் ஏற்படுவதற்குரிய ஆரம்ப காரணமாக இருந்தது.
விடுதலைப் புலிகளைக் கடுமையாக வசைபாடிய ஆனந்தசங்கரி, தனக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்துப் பேசிக்கொண்டிருந்தபோது, கோபமடைந்த கூட்டத்தில் இருந்த வயோதிபர் ஒருவர் எழுந்து, ஆனந்தசங்கரியை நோக்கி கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதால், ஆனந்தசங்கரி நிலைதடுமாற வேண்டி ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வயோதிபரை வெளியேற்ற வேண்டும் எனவும், வேறு யாராவது தனக்கு எதிராகப் பேசினால் உடனடியாக மண்டபத்தைவிட்டு வெளியேற்றப்படுவர் எனவும் ஆனந்தசங்கரியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.
ஆயுதப் போராட்டம் மூலம் தமிழர்கள் விடுதலையைப் பெற முடியாது என ஆனந்தசங்கரி பேசி முடித்ததும், நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவால் பேச அனுமதிக்கப்பட்ட மற்றொரு வயோதிபர், நாங்கள் அனைவரும் இணைந்து சிங்களவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராட வேண்டுமெனப் பேசியதால், கோபமடைந்த ஆனந்தசங்கரி அவரை மேடையில் இருந்து இறக்குமாறு கேட்டதால், பேச அழைக்கப்பட்டவர் அவமரியாதை செய்யப்பட்டார்.
சிறீலங்கா அரசின் ஆதரவுடனும், நிதியுதவியுடனும் வெளிநாடுகளுக்கு இரகசிய பயணங்களை மேற்கொள்ளும் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதை தடுத்து நிறுத்துவதற்கு புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்வர வேண்டுமென கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் பேசிக்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
அமிர்தலிங்கத்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு அமிர்தலிங்கம் குடும்பத்தினரால் பலர் வருந்தி அழைக்கப்பட்ட போதிலும், குறைந்தளவான குறிப்பட்ட சிலரே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அவன் அவனுக்கு அவன் தேள்வைகள்.
Post a Comment