Sunday, August 12, 2007

மனித நேயப் பணிகளை முன்னெடுக்க முடியாத நாடாக மாறியுள்ளது - மீண்டும் ஜ.நா!!!

மனித நேய பணியாளர்கள் தமது கடமைகளை முன்னெடுப்பதற்கு பாதுகாப்பற்ற நாடாக இலங்கை மாறியுள்ளமையை ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தெளிவு படுத்தியுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநா சபையின் மனிதாபிமான பணிகளுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோல்ஸ் உலகில் மனிதாபிமான பணியாளர்களுக்கு அதிக அச்சுறுத்தல் இலங்கையிலேயே ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

ஹோல்சின் இந்த கருத்து குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கம் கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்ததோடு ஜோன் ஹோல்சை பிரதமர் ரட்னஸ்ரீ விக்கிரமநாயக்கா பகிரங்கமாகவே விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் ஜோன் ஹோல்ஸ் இலங்கையில் மனதாபிமான பணியாளர்கள் அச்சுறுத்தல்களின் மத்தியிலேயே பணியாற்ற வேண்டியுள்ளதாக தெரிவித்த கருத்தை தவறு என்று நிரூபிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் போதிய ஆதாரங்கள் இல்லை எனற்கு கொழும்பில் உள்ள ஐநாவின் வதிவிட பிரதிநிதி வலன்ரின் தெரிவித்துள்ளார்.

தமது பணிப்பாளர் தெரிவித்த கருத்து உண்மையற்றது என்றால் அதனை நிரூபிப்பதற்கும் மனித நேய பணியாளர்கள் அச்சுறுத்தல்கள் இன்றி பணி புரிகின்றார்கள் என்தை அனைத்துலகிற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி>பதிவு.

7 comments:

Anonymous said...

ஈழபாரதி அவர்களே வணக்கம்,

இம்மடல் நீங்கள் இங்கு இணைத்துள்ள கட்டுரை தொடர்பானதல்ல.

நீண்டகாலமாக தமிழ்மணத்தில் ஈழநிலவரத்தை பெரும்பாண்மையான தமிழ்நாட்டுத் தமிழர்கள் உட்பட உலகத்தமிழர்களுக்கு அறியத்தந்து கொண்டிருக்கிறீர்கள் என்ற வகையில்,

தமிழ்மணத்தில் அனைத்து குறிச்சொற்களின் மத்தியில் மிளிர்ந்துகொண்டிருந்த "ஈழம்" என்ற குறிச்சொல்லை இப்போது காணக்கிடைப்பதில்லை. ஏன்?

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு ஏதாவது புற நெருக்கடியா? அல்லது நிர்வாகத்திற்குள்ளேயே ஏதாவது கருத்து மாற்றமா?

ஈழபாரதி said...

சுட்டிக்காட்டிய அனானிக்கு, நீங்கள் சொன்னபின்னர்தான் குறிச்சொற்களை ஆரய்ந்து பார்த்ததில் ஈழம் என்ற குறிச்சொல் இருக்கிறது இந்த இனைப்பில்
http://www.thamizmanam.com/tag/ஈழம்
போதிய இடுகைகள் இல்லாத்தால் அது முன்னுக்கு வருவதில்லை என நினைக்கிறேன், நான் கூட அரசியல்/சமூகம் என்று வகைப்படுத்தி வந்திருக்கிறேன், இனி ஈழம் என்றே வகைப்படுத்துகிறேன், சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

ஈழபாரதி said...

ஆனால் வகைபடுத்தும்பெட்டியில் சில குறிப்பிட்ட சொற்களே இடப்படிருக்கிறது, அவற்றில் ஒன்றையே தெரிவு செய்யவேண்டிய சூழ்நிலை, வேறுவிதமாக வகைபடுத்த முடியுமாயின் அறிந்தவர்கள் அறியத்தரவும்.

தமிழினி said...

ஈழபாரதி அவர்களே!

நீங்கள் தந்த தொடுப்பின் உதவியுடன் "ஈழம்" குறிச்சொல்லின் கீழ் சென்று பார்த்த போது சசி அவர்களின் ஒரே ஒரு இணைப்பு மட்டும் காணப்பட்டது. எனினும் மிக அண்மையில்(12-8-2007) இணைக்கப்பட்டுள்து. எனவே கீழ் வரும் மடலை அவருக்கு வரைந்துள்ளேன்.

முன்னர் தங்களுக்கிட்ட மடல்களில் login பண்ணாததால் எனது அடையாளம் இடம்பெறவில்லை. மன்னிக்கவும்.

நன்றி.

"வணக்கம் சசி அவர்களே!

நீண்ட காலமாக ஈழத்தமிழர் நிலவரம் தொடர்பாக சிறந்த ஆய்வாக்கங்களை வழங்கி வருக்கிறீர்கள். நன்றி.

அண்மையில் எனக்கும் ஈழபாரதி அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற தொடர்பாடலை கீழே தருகிறேன். தங்களால் ஆண உதவியை தயவு செய்து நல்க முடியுமா?

ஏனெனில் ஈழம் என்ற குறிச்சொல்லின் கீழ் உங்களது இந்த ஒரே ஒரு இணைப்பு மட்டுமே காணப்படுகிறது.

நன்றி. "

தமிழ் சசி | Tamil SASI said...

தமிழ்மணம் இரு வகையில் இந்த வகைப்படுத்துதல்களை அணுகுகிறது

1. தமிழ்மணம் வகைப்படுத்துதல் - அரசியல்/சமூகம் போன்ற வகைப்படுத்துதல்களை தமிழ்மணம் அளிக்கிறது
2.மற்றொன்று குறிச்சொல் மூலமாக...

முன்பு தமிழ்மணத்திற்கு உங்கள் இடுகைகளை அளிக்கும் பொழுது குறிச்சொற்களையும் அளிக்கும் வசதி இருந்தது. ஆனால் அதனை இப்பொழுது நீக்கி விட்டார்கள்.

ஏனென்றால் நீங்கள் உங்கள் இடுகைகளிலேயே குறிச்சொற்களை சேர்க்கும் வசதியினை ப்ளாகர் தற்பொழுது அளிக்கிறது - அதாவது Blogger Labels. நீங்கள் செய்ய வேண்டியதெல்லம் உங்கள் இடுகைகக்கு பொருத்தமான குறிச்சொற்களை (Blogger Labels) உங்கள் இடுகைக்கு அளித்து விட்டால், தமிழ்மணம் தனது பூக்கூடை திரட்டி மூலமாக தானாகவே திரட்டி கொள்கிறது.

அவ்வாறு தான் தமிழ்மணம் முகப்பில் பல குறிச்சொற்கள் தெரிகின்றன. உதாரணமாக "பெரியார்" என்னும் குறிச்சொல் தமிழ்மணம் முகப்பில் தெரிவதற்கு காரணம், அந்த குறிச்சொல்லுடன் (Blogger Label) நிறைய பதிவுகள் எழுதப்படுகின்றன என்பதால் தான்

ஈழப்பதிவர்கள் நிறைய இடுகைகள் எழுதினாலும் எந்த குறிச்சொற்களையும் தங்களது பதிவுகளில் சேர்ப்பது இல்லை. ஈழம் என்பதை குறிச்சொல்லாக சேர்த்து எழுதினால் எளிதாக ஈழம் முகப்பில் தெரியும்.

எப்படி குறிச்சொற்களை சேர்ப்பது ?

புதிய இடுகைகளை ப்ளாகரில் நீங்கள் எழுதும் பொழுது Labels for this post: என்று ஒன்று இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான குறிச்சொற்களை சேருங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட குறிச்சொற்களை இவ்வாறு சேர்க்க முடியும்.

உதாரணமாக என்னுடைய பதிவில் கீழ்கண்ட குறிச்சொற்கள் உள்ளதை கவனியுங்கள்.
http://blog.tamilsasi.com/2007/08/human-rights-atrocities-by-sri-lanka.html

Labels: Human Rights, Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம், மனித உரிமை, மனித நேயம்

அதனாலேயே தமிழ்மணம் இதனை http://www.thamizmanam.com/tag/ஈழம் என்பதில் காட்டுகிறது

****

தமிழ்மணம் இது குறித்து ஒரு விரிவான அறிவிப்பு கொடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும்

ஈழபாரதி said...

மிக்க நன்றி சசி தங்களின் தகவலுக்கு, நான் இது வரை நினைத்துகொண்டு இருந்தது, லேபில் மூலம் வகப்படுத்துவது எமது பிளாக்கரில் எமது இடுகைகளை வகப்படுத்துவதற்கு என்று, இது புதிய தவல் நன்றி.

தமிழினி said...

மிக மிக நன்றி சசி அவர்களே, நிறைய நேரம் எடுத்து எங்கள் சந்தேகத்திற்கு மிகத் தெளிவானவெரு விளக்கத்தைத தந்துள்ளீர்கள்.

இணைந்து இவ்விடயத்தினில் தெளிவு பெற உதவிய ஈழபாரதி அவர்களிற்கும் நன்றிகள்.