Monday, November 05, 2007

தமிழ் மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன உறவு?--கனிமொழி!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி








ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:

ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழிக்கத் துடிக்கும் இலங்கை அரசைப் பற்றியும் தமிழ் மக்களின் துயரங்களைப் பற்றியும் அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பிறகு உலகுக்குத் தெரிவித்த போராளி தமிழ்ச்செல்வன், போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இருக்கும் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதைக்கு அதிமுக தலைவி ஜெயலலிதா அம்மையார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவரை தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன உறவு? இவரை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றார் கனிமொழி.
நன்றி>புதினம்.

5 comments:

jollupandi said...

Excellent Kanimozhi, you are the right choice to tackle that facist jayalalitha and drove her out of politics.. keep moving..

Anonymous said...

சுடுகாட்டு டென்டரிலேயே ஊழழ் செய்த இந்த ஜெ. அம்மையார் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் போன்ற ஒரு மறத்தமிழ் வீரனின் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட இல்லாதவர். சதையை காட்டி கதிரையை பிடித்து விட்டால் தமிழினத்தின் தலைவியாகி விட முடியுமா இந்த ஜெயலலிதா?

பிணத்தின் மீது அரசியல் நடத்தும் அருவருக்கத்தக்க இந்த பிறவிகள் எல்லாம் தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலை அலங்கரித்தது தமிழன் தனக்கு தானே செய்து கொண்ட அவமானம். இன்னும் ஒரு தரம் இந்த அவமானம் நேர்ந்து விடாமல் தமிழக மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்

ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ள ரோ(Research and Analysis Wing) வின் கையாளாக செயற்படும் இந்த ஜெ. அம்மையார், ரோ(RAW) வின் தூண்டதலின் பேரிலேயே இப்படியான அறிக்கைகளை விட்டு கொண்டிருக்கிறார் என்பது மக்கள் அறியாததா?

செல்வி. ஜெயலலிதா ரோவின் கையாளாக செயற்படுவதானால் தானே மிக உறுதியான ஆதாரங்களூடன் கூடிய டான்சி ஊழலிலும், அந்நிய செலாவணி ஊழலிலும் கூட டெல்லி இவர் மேல் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செல்வி ஜெயலலிதாவின் ஊழல் வழக்குகள் என்னும் துருப்பு சீட்டை வைத்துக்கொண்டு ரோ(RAW)வும் டெல்லியும் இந்த அம்மையாரை ஆட்டி வைப்பதை அரசியல் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள். இப்படி பேராசையால் உந்தப்பட்டு ஊழல் மேல் ஊழல் செய்து, குடுமியை ரோவின் கையில் கொடுத்து மாட்டி கொண்டு முழிக்கும் தலைமைகள் தமிழக மக்களுக்கு தேவை தானா?

Anonymous said...

Situation in TN reaches boiling point after Thamilselvan’s killing, Karunanidhi tells Indian PM, FM

The Indian Prime Minister Dr. Manmohan Singh discussed the Sri Lanka’s latest development following the assassination of ** leader Thamilselvan with his Foreign Minister Pranab Mukherjee on Saturday. New Delhi sources told Eelam Nation that Indian Prime Minister expressed his dissatisfaction over the way Thamilselvan was killed when India and other countries are encouraging parties in conflict to start a peace talks.

Meanwhile, the southern Indian state chief minister is learnt to have discussed matters with Indian Prime Minister and Foreign Minister relating to Sri Lanka after the killing of Thamilselvan.

State’s Chief Minister Karunanidhi told both Singh and Mukherjee that the sentiments of Tamil Nadu people are changing after the killing of Thamilselvan.

Before the death of Indian former Prime Minister Rajiv Gandhi in 1991, the situation in Tamil Nadu was boiling over when they heard the plights of Tamils in Sri Lanka. Same situation has been created in Tamil Nadu following the death of Thamilselvan, the CM said.

Sources said Indian foreign ministry will issue a statement this week regarding the killing of Thamilselvan.

http://www.sibernews.com/news/sri-lanka/-2007110510259/

Anonymous said...

அய்யய்யோ!
அவாளடோ உறவு வைதிருந்தவாள்ளாம்
வெளியே சொல்வாளா?
பொம்மனாட்டி லட்சணமா பெரிய ஆளாப் பாத்துப் புடிச்சுண்டா!
பதவிக்கும் வந்துண்டா!
இன்னும் பசைக்காக மாட்டிண்டு இருக்கவா மானங்கெட்டுப் போப்போறா!

Anonymous said...

ஈழத் தமிழ் உறவுகளே!!

கனிமொழியின் கருத்துகள் தமிழகத்தின் உணர்வுகளாகும். சில குள்ள நரிகள் ஊழையிட்டால் அதைப் பொருட்படுத்த வேண்டாம்.


புள்ளிராஜா