Sunday, December 16, 2007

இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்துவந்தோரை பொறுப்பேற்க வேண்டிய நிலை - மேத்தானந்த தேரோ.

நாட்டில் சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் போராட்டம் நிலவினால் எவ்வாறு தமிழ் எம்.பி.க்களினால் பாராளுமன்றம் வர முடியும் என்று ஜாதிக கெல உறுமைய கட்சியின் தலைவரான எல்லாவெல மேத்தானந்த தேரர் எம்.பி கேள்வியெழுப்பினார்.

பாரளுமன்றத்தில் வெள்ளியன்று நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது.:-

'பிரித்தானியர் இலங்கையை எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் செல்லும் போது மலையக தோட்டப் பகுதிகளை நாம் பொறுப்பேற்க வேண்டிய தேவையும் இல்லாத ஒரு கூட்டத்தினரை பொறுப்பேற்க வேண்டிய நிலையே எமக்கேற்பட்டது.

மலையத்தில் எமது வளங்களைக் கொள்ளையடித்து கொண்டிருந்த பிரித்தானியர் இந்தியாவிலிருந்து அடிமைகளாக அழைத்து வரப்பட்ட மக்களையும் எமக்கு பொறுப்பேற்க வேண்டியிருந்தது.

அவர்களுக்கு உணவு, வாழ்விடம் வழங்கி பாராமரிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டது. உலகத்தில் இவ்வாறு செயற்பட்ட ஒரே நாடு இலங்கையே ஆகும். ஆம், நாம் அடிமைகளுக்கு வாழ்வு கொடுத்தோம்.

சிங்களவர் தமிழர்களுக்கு எதிராக செயற்படுவதாக இச்சபையில் சிலர் கூறுகின்றனர். ஆனால், இது முற்றிலும் பொய்யானது. வெறுமனே இது ஜோடிக்கபட்டட கதையாகும். மாறி மாறி வந்த சிங்களத் தலைமைகளே தமிழர்களுக்கு உரிமை பெற்றுக் கொடுத்தார்கள்.

தமிழ் மக்கள் கூட்டாக கைது செய்யபடுவதாக இங்கு குற்றம் சாட்டப்பட்டது. இது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. தமிழர்களாக பயங்கரவாதிகளாக இருப்பதால் தான் இக் கைதுப் படலம் தொடர்கின்றது. அரசு பயங்கரவாதிகளுக்கு எதிராகவே செயற்படுகிறது.

இந் நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான போரட்டம் எதுவுமே கிடையாது. சிங்கள, தமிழ் மக்களுக்கிடையேயும் எப் போராட்டமும் இல்லை. போராட்டம் நிலவுவதாக கூறுவதும் கட்டுக்கதை.

இவ்வாறான ஒரு போராட்டம் இருக்குமானால் இப்பாராளுமன்றத்தினுள் தமிழ் உறுப்பினர்கள் வரமுடியுமா? அல்லது இப்பாராளுமன்றித்தினுள் தமிழ் உத்தியோகத்தர்கள் கடமையாற்ற முடியுமா?'

நன்றி>தினக்குரல்.

2 comments:

Anonymous said...

அட பாவிகளா ஆறுமுகம் தொண்டமான் ஆயிரக்கணக்கில் இந்தியத்தமிழர் கைது செய்யப்பட்டபோதும்,அரசுக்கு ஆதரவாக வாக்களித்தும் அவருக்கு நீங்கள் காட்டும் மரியாதை இவ்வளவுதானா?

Anonymous said...

முரளிதரனுக்காவது கொஞ்சம் மரியாதை கொடுத்து இருக்கலாம்.