Saturday, December 08, 2007

பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான்: துக்ளக் "சோ"

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்ல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆலோசனை நடத்தியது உண்மைதான் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் வார இதழான துக்ளக்கின் ஆசிரியர் "சோ" தெரிவித்துள்ளார்.

துக்ளக் வார இதழ் 07.11.2007 அன்று வெளிவந்த கேள்வி-பதில் பகுதியில் துக்ளக் சோ தெரிவித்துள்ளதாவது:

கேள்வி: இந்திய அமைதிப்படை இலங்கை சென்றபோது பிரபாகரனை சுட்டுக்கொல்ல ராஜீவ் காந்தி உத்தரவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி பற்றி? (எம்.தூசிமுத்து, சென்னை-11)

பதில்: எனக்குத் தெரிந்த வரை அவ்வாறு செய்யலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்ட போது, அவர் சில பத்திரிகையாளர்களையும் வேறு சிலரையும் இது பற்றிக் கருத்துக் கூறுமாறு கேட்டார் (ஒரு தூதுவர் மூலம்). அநேகமாக எல்லோரும் ஓரிவருவரைத் தவிர இது தவிர்க்கப்பட வேண்டியது என்று கருத்துக்கூறியதால் ராஜீவ் அந்த யோசனையைக் கைவிட்டார். இதுதான் நடந்தது என்பது என் நினைவு என்று துக்ளக் சோ கூறியுள்ளார்.

கடந்த 1987 இல் இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படைக்கு தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங்.

ஓய்வு பெற்ற அவர், "இன்டர்வென்சன் இன் சிறிலங்கா'' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்.

அந்த புத்தகத்தில் அவர் கூறி இருப்பதாவது:

இலங்கையில் இருந்த அமைதிப்படைக்கு தலைமை வகித்த எனக்கு, கடந்த 1987 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாள் ஒரு தொலைபேசி வந்தது. அதில் இலங்கைக்கான அப்போதைய இந்திய தூதுவர் ஜே.என்.டிக்சிட் பேசினார்.

அவர் பேசுகையில், "நாளை இராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்துக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வரும்போது அவரை நீங்கள் சுட்டுக்கொல்ல வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

ஆனால், அதனை நிறைவேற்ற நான் மறுத்து விட்டேன்.

"நமது இராணுவம் கட்டுப்பாடானது. எனவே முதுகில் சுட்டுக்கொல்லும் வேலையை செய்ய முடியாது. அதனால் அந்த உத்தரவை நிறைவேற்ற மறுத்து விட்டேன் என்றும் அப்புத்தகத்தில் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்

4 comments:

Anonymous said...

பார்ப்பனின் அடிமுட்டாள் தனத்தை பார்த்தீர்களா? ஒரு அரசியல் கொலை செய்ய பத்திரிகையாளரிடம் கருத்து கேட்டார்களாம்,

ராணுவத்தளபதி அவர்களே பிராகரனை கொலைசெய்ய மறுத்த நீங்கள் பேச்சுக்காக வந்த ஜொனியை ஏன் மறைந்திருந்து சுட்டு கொன்றீகள்?

Anonymous said...

ராஜீவ் கொல்லப்பட்டதில் தவறில்லை என சோ ஒப்புக் கொள்கிறார். என்றே நினைக்கின்றேன்.


kuru.

Anonymous said...

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை தீர்த்துக் கட்டுமாறு, இலங்கைக்கான முன்னாள் இந்தியத் தூதர் ஜே.என். தீக்சித் உத்தரவிட்டதாக, இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தலைவர் ஹர்கிரத் சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் கீழ் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இப்படையின் தலைவராக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங். இவர் தற்போது பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

--paran--

Anonymous said...

அனானி,

இது மட்டுமா? இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலும் 'இந்து' ராமின் பங்கு பற்றி ஆராய்ந்தால் ரஜீவின் அரசியல் முதிர்ச்சி தெரியும்! இந்து ராம் புலிகளில் கொண்டுள்ள ஆத்திரத்துக்கு தனது பங்களிப்புக்கான விருதை தடுத்துவிட்டார்கள் என்பதுதான் காரணம்!