





அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து தமிழ்நாட்டின் கோவையில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயன்ற பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை செஞ்சிலுவைச் சங்க அலுவலகம் முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் மகிந்தவின் நிர்வாணக் கொடும்பாவியை எரிக்க முயற்சித்தனர்.
ஆனால் அங்கு பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் கொடும்பாவியை எரிக்க விடாமல் தடுத்து பறித்துச் சென்றனர். கொடும்பாவியை எரிக்க முயற்சித்ததாக பெரியார் திராவிடர் கழகத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிறிலங்காவின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டித்து அப்போது கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில்...
சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று மாலை 4:30 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் கேசவன், அன்பு தனசேகரன், தபசி குமரன் மற்றும் தமிழக மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பாலன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
நன்றி>புதினம்.
1 comment:
கோயம்புத்தூர் மக்கள் குசும்புக்குதான் பெயர் போனவர்கள் என நினைத்திருந்தேன், கோவத்துக்கும் பெயர் போனவர்களாய் இருப்பார்கள் போல் இருகிறதே இனமானரோசம் நிறைந்தே இருகிறது.
Post a Comment