

அநுராதபுரம் ஆயர் நோபர்ட் பீபீசீ சந்தேசயாவுக்கு வழங்கிய கருத்து:-
தாக்குதல்களை நடத்தியவர்களின் சடலங்கள் என்றாலும் அந்த சடலங்களுக்கு நாம் உரிய மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். சடலங்களை நிர்வாண கோலத்தில் எடுத்துச் செல்லாது மனித தன்மையுடன் எடுத்து சென்றிருக்கலாம் என்று அநுராதபுரம் கத்தொலிக்க திருச்சபையின் ஆயர் நோபர்ட் தெரிவித்தார்.
மேலும் கூறியதாவது;
தாகுதல்களில் பலியான கரும்புலிகளின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக அநுராதபுர நகரத்தின் வழியாக வைத்திய சாலைக்கு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் நிர்வாண கோலத்திலேயே கொண்டு செல்லப்பட்டுள்ளன. சடலங்கள் நிர்வாணக்கோலத்தில் டிராக்டரில் எடுத்துச்செல்லப்படுவதாகவும், இந்த நடவடிக்கை முறைக்கேடானது என்றும் அங்கு சென்று திரும்பியவர்கள் என்னிடம் தெரிவித்தனர்.நிர்வாண கோலத்தில் எடுத்து செல்கின்ற சடலங்களை பார்ப்பது சரியானது இல்லை என்பதனால் நான் நேரடியாக சென்று பார்க்கவில்லை.
சடலங்கள் யாருடையது என்பது இங்கு முக்கியமில்லை. சடலங்கள் விடுதலைப்புலிகளுடையது என்பதனால் அது தொடர்பாக நாம் பேசவில்லை. எனினும் யாருடைய சடலங்கள் என்பதை கருத்தில் கொள்ளாது சடலங்களுக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். அத்துடன் மனித தன்மையுடன் செயற்படவேண்டும்.
No comments:
Post a Comment