
அனுராதபுரம் வான் படைத்தாக்குதலை "தாம் வன்மையாக கண்டிப்பதாக" வீ.அனந்தசங்கரி கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுதாரபுரம் வான் படைத்தளத்தின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இத்தாக்குதல் தேவையற்றது- அர்த்தமற்றது- ஆத்திரமூட்டக் கூடியது. மகிழ்ச்சிக்குரியது அல்ல என்று கூறியுள்ளார்.
"பிஞ்சுக் குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை எவ்வித வயது வேறுபாடின்றி வகை தொகையின்றி தமிழ் மக்கள் மீது வானிலிருந்து நாசகார குண்டுகளை வீசி கொன்றொழிக்கப் பயன்படுத்தப்பட்ட வான் படைத்தளமும் வானூர்திகளுமே கரும்புலிகளின் தற்கொடையினால் தகர்க்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்களைக் கொல்லப் பயன்படுத்திய வான் தளத்தை தகர்த்து விட்டார்களே என்று சிங்களவர்கள் வருத்தம்தான் அடைந்தனர். அது போர் இலக்குகளில் ஒன்று. ஜே.வி.பி. உள்ளிட்ட எந்தப் பேரினவாதியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அறிவிக்கப்படாத யுத்தத்தில் ஒரு போர் இலக்கு அழிக்கப்பட்ட்டுள்ளமை குறித்து அனைத்துலகம் உட்பட எவரும் எதுவும் கண்டனம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழ் மக்களைக் கொன்றொழிக்கப் பயன்படுத்தப்பட்ட வான்படைத் தளத்தை அழித்தமைக்காக "தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி" என்ற பெயரில் "கண்டனம்" ஒன்று வெளியாகிறது எனில்... அதனை என்னவெனச் சொல்வது" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
நன்றி>புதினம்
4 comments:
இந்த ஆனந்தக் கொமடியனின் தொல்லை தாங்க முடியலப்பா
இறந்து போன உடல்களில் இனவாதம் பார்க்கிறார்கள்.இவர்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்?????????
இதிலும் மிகக் கொடுமை ஆனந்த சங்கரியார் விட்ட அறிக்கை தான்.துரோகி..ஆனந்த சங்கரியார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறாராம்...முழுத்தமிழினமும் பெருமை பட்டுக்கொண்டிருக்கிர்றோம்.எங்கள் வீரர்க்கு வீர வணக்கம்.
.நான் எல்லாம் இறைவனை வேண்டிக்கொள்வது இப்படியான துரோகிகளுக்கு அழுந்தி சாக வேண்டும்....
சாதரண பெண் எனக்கு இருக்கிற உணர்வு கூட இவர்களுக்கு இல்லயே
தமிழ் துரொகிகளிடம் நான் கேட்கும் கேள்வி... நல்லது செய்யாவிட்டாலும்...தயவு செய்து வாயை மூடிட்டு இருக்கவும்....
எங்கள் அண்ணன்மார் அக்காமார் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மாத்திரம் தான்....
திருகோணமலையிலிருந்து மதுமிதா
மதுமிதா!!
இந்தத் துரோகியைப் பெற்ற தாய் என்ன பாவம் செய்தாளோ?
குளக்கோட்டன்
ஐயோ, இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியலப்பா.
யாராவது இந்த அடிவருடி லூசுசங்கரியை எதுனாச்சும் பண்ணுங்க்கப்பா.
Post a Comment