Monday, February 04, 2008

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி!!! கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் !!!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் என்று கூறுவது வீண்பழி: முதல்வர் கருணாநிதி
தமிழக முதல்வர!!!

தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக காங்கிரசார் அவ்வப்போது புகார் கூறிவரும் நிலையில், முதல்வர் கருணாநிதி, அவையெல்லாம் வீண்பழியென்றும், இப்படியெல்லாம் ஒரு பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு தனது கட்சியினை ஆட்சியிலிருந்து அகற்ற முயன்றால் அதனைச் சந்திக்கத் தயார் என்று இப்போது கூறியிருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உட்பட பல காங்கிரஸ் தலைவர்கள் தமிழ்நாடு விடுதலைப்புலிகளின் வேட்டைக்காடாகிவிட்டது என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள் என்று சட்டப்பேரவையில் இப்பிரச்சினை குறித்து அரசு மீது அபாண்டமாக குற்றச்சாட்டுககள் வீசப்பட்டபோது, காங்கிரஸ் உறுப்பினர்கள் மௌனமாக இருந்திருககிறார்கள், இதெல்லாம் தனக்கு மிகுந்த மனவருத்தத்தினை அளிப்பதாகவும் கருணாநிதி கூறியிருககிறார்.

கடந்த வாரம் சட்டமன்றத்தில் சட்டஅமைச்சர் துரைமுருகன் தடைசெய்யப்பட்ட இயக்கங்கள் மீது உரிய நடவடிக்கை எடுககப்படும் என எச்சரித்திருந்தார். இருந்தும் தொடர்ந்து காங்கிரசார் இவ்வாறு குறைகூறுகின்றனர், இதற்குமேலும் இப்பிரச்சாரம் தொடர்ந்தால் பதவியிழக்கவும் தயார் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

காங்கிரஸ் தரப்பில் முதல்வரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கத் தயங்குகின்றனர். சிறிதுநேரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழநாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, முதல்வர் தெரிவிப்பது போன்று நாகர்கோவிலில் எதையும் அவர்கள் பேசவில்லையென்றும், தடைசெய்யப்பட்ட இயக்கங்களுககு ஆதரவாக எவரும் செயல்பட அனுமதிக்கப்படக்கூடாது என்பதுதான் தங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

தொடர்ந்து கருணாநிதி பேசியது குறித்து கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

நன்றி>BBC

4 comments:

இட்டாலி வடை said...

வணக்கம் ஈழபாரதி !
பார்ப்பனக்கட்சியாம் காங்கிரஸ் கட்சியின் ஒரு பயமுறுத்தலுக்கே பயந்து போய் அடிபணிந்து தன் இனத் தமிழனையே காட்டிக் கொDஉக்கத் துணிந்த தன் கூட்டுக் கட்சியாம் விடுதலைச் சிருத்தைகளையே உதறி எறிந்து விட்டு தன் ஆட்சியைக் கலைக்கக் கூடாது என்று அடிபணிந்து நடுங்கிக் கொண்டிருக்கும் கருணாநிதி விடும் உதாரை எல்லாம் ஏதோ அரசியல் சாணக்கியம் என்பதைப் போலவும் அஞ்சாத திராவிட ஆண்மை என்பது போல படம் காட்டுகின்றீர்களே...

உண்மை நட்புக்களையும் நல்ல அரசியல் வாதிகளையும் அடையாளங்காளப் பழகுங்கள்.

பார்ப்பனப் பாப்பாத்திக் கட்சி மட்டுமல்ல திராவிட தெருநாய்க்கட்சியும் ஆபத்தானவர்களே.. புரிந்து கொள்ளுங்கள்...

முதல்வருக்கு இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பதிலளித்தார். இதுகுறித்து சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாகர்கோயில் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பேசிய பேச்சு குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நாகர்கோயில் கூட்டத்தில் நானும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரமும், இளங்கோவனும், மற்றவர்களும் பேசியது எல்லா பத்திரிகைகளிலும் தெளிவாக வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் மீதும், செயல் படுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் பேசினோம். இது காங்கரஸ் கட்சியின் நிலைப்பாடு. இதில் எந்த மாற்றமும் இல்லை.

முதல்வர் அளித்த விளக்கத்தில் அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு தமிழகத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுக்கு துணைபோனவர்கள் என்று எத்தனை பேர் கைது செய்யப் பட்டார்கள் என்றும், எத்தனை வழக்குகள் அவர்கள் மீது போடப் பட்டுள்ளன என்பதை பற்றியும் விவரமான பட்டியலை தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில்நான் மன நிறைவோடு வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன். அண்மையில் நான் விடுதலைப் புலிகள் தொடர்பான முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன்.

அதில்கூட "தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் கூட்டங்கள் நடத்தியும், பேட்டிகள் அளித்தும், காங்கிரஸ் தலைவர்களை கேலி, கிண்டல் செய்தும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற அரசியல் மற்றும் அரசியல் சாரா இயக்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தான் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் நாகர்கோயில் கூட்டத்தில் "தமிழ்நாடு விடுதலைப் புலிகளின் வேட்டைக்காடாக மாறி விட்டது' என்றோ, "விடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி இங்கு இடம் கொடுத்து விட்டார் என்றோ' யாரும் பேச வில்லை. நாங்கள் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி முதலமைச்சர் விமர்சித்திருப்பது வருத்தத்திற்குரியது

ஈழபாரதி said...

ஈழத்தமிழருக்கு ஆட்சியில் இருக்கும் கலைஞர் தார்மீகஆதரவு தரவேண்டும் என்பதே எமது அவா, ஆட்சிக்காக அவரால் தரமுடியாவிட்டால் நாம் என்ன செய்யமுடியும், கலைஞர் தராத ஆதரவை ஜெயலலிதாவோ, கிருஸ்னசாமியோ ஆட்சிக்கு வந்தால் தரப்போவதில்லை, தார்மீக அதரவை மட்டுமே நாம் எதிர்பார்க்கிறோம், பொருளாதார உதவி ஈழத்தமிரை நம்பியே எமது போராட்டம் நகருகிறது. ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் செய்த உதவிகளை நாம் என்றும் மறந்து போவதும் இல்லை.

இட்டாலி வடை said...

தார்மீககாஅதரவு என்று எதைக்கூருகிரீர்கள். இந்திய கம்யூனிச்ட் கட்சிச் செயலாலர் திரு.நல்லகண்ணுவிர்கு இருக்கும் அடிப்படை தெளிபு கூடடைல்லாமல் அறிக்கை விடும் கருணாநிதியிடம் எதை எட்ஹிர்பார்க்கின்ரீர்கள் என்று தெளிபாகக் க்ஊரிவிடுங்கள். சப்பைக் கட்டு கட்டவேண்டாம்.

நல்ல கன்ணு சொல்லியிருக்கின்றார்:

தமிழகத்தில் விடுதலைப் புலிகள் ஊடுருவி வருவதாக சிலர் கூறுகின்றனர்.

இலங்கை உள்நாட்டுப் போரால் பாதித்த அகதிகள் இங்கு வருவதைக்கண்டு அவ்வாறு கூறக்கூடாது.

அவருக்கிருக்கும்......

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20080204122755&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0&dName=No+Title&Dist=0

ஈழபாரதி said...

ஈழத்தமிழருக்காக தனது சட்டமண்ற உறுப்பினர் பதவியை தூக்கி எறிந்தாரே அந்த பழைய கலைஞரைத்தான் நாம் எதிர்பார்க்கிறோம், ஈழத்தமிழரை கொண்று குவித்த இந்திய அமைதிகாக்கும் படையை வரவேற்க்க மறுத்தாரே அந்த கலைஞரைத்தான் நாம் எதிர் பார்க்கிறோம், அவர் உண்மையைதான் சொல்லி இருக்கிறார் எம்ஜிஆரை போல் யாரும் ஈழத்தமிழருக்கு உதவி செய்யவில்லை, செய்த உதவி பெரிது என்றபோதும் அவர் செய்தகாலத்தில் அது மிகமிகப்பெரிய உதவியாக எம்மால் நன்றியோடு நினைவு கூறப்படுகிறது, அதற்கு அடுத்தபடியாக இருப்பவர் கலைஞர்தான், அவரிடம் நாம் பொருளாதர உதவியைகூட எதிர்பார்க்கவில்லை. வைகோ,அய்யா பழநெடுமாறன், டாக்டர் ராமததாஸ், தொல்திருமாவளவன்,போன்றபலர் ஆதரவு தந்தபோதும், ஆட்சியில் இருக்கும் கலைஞர் தரும் ஆதரவு தமிழ்நாட்டில் பெரும் எழுச்சியையும்,மத்தியிலும்,இந்தியவெளியுறவுக்கொள்கையிலும், மாற்றதையும் ஏற்படுத்தும் என நம்புகின்றோம்,