தமிழர்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து மாவீரர் தின உரையில் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தெளிவாக வெளிப்படுத்தவுள்ளதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு ப தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று பிரித்தானிய பிரதமரின் விசேட பிரதிநிதியான போல் மேபியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தகவலை தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் போர் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இனியும் பொறுமை காக்கபோவதில்லை என தமிழ்செல்வன் குறிப்பிட்டார். போல் மேபியுடனான சந்திப்பின்போது இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்கள் அதில் தமது விட்டுக்கொடுப்புகள் அனுபவங்கள் அதேபோல வயஅயர்லாந்தின் சமாதான முன்னெடுப்புகள் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
நன்றி>அதிர்வு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment