Tuesday, November 07, 2006

மிகவிரைவில் தெற்கே பயங்கர தாக்குதல்?

இலங்கையில் வடக்கில் ராணுவத் தாக்குதலுக்குப் பதிலடியாக சிங்கள குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு மிரட்டல்
இலங்கையில் விடுதலைப் புலிகள் பகுதிகளில் ராணுவம் தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து அதற்குப் பதிலாக தென் இலங்கையில் மருத்துவ மனைகள், நீர்த்தேக்கங்கள் போன்ற குடிமை நிலைகளைத் தாக்கப் போவதாக தமிழ் அமைப்பு ஒன்று மிரட்டல் விடுத்துள்ளது.
அந்த அமைப்பு தமிழ்ப் புலிகள் முன்னணி அமைப்பாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வட இலங்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணுவத் துருப்புகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல்களுக்குத் தானே பொறுப்பு என்று அறிவித்த கடும் பாதுகாப்பு மண்டல மக்கள் விடுதலைப் படை என்ற அமைப்பு விடு தலைப் புலிகள் பகுதிகளில் தாக்குதல்களை உடனே நிறுத்தும்படி ராணுவத்துக்கு கடைசி எச்சரிக்கை விடுத் தள்ளது.
தமிழ் மக்களையும் தமிழர் பகுதிகளில் அடிப்படை வசதிகளையும் அழிக்கவேண் டும் என்ற நோக்கத்துடன் தாக்குதல் நடத்தினால் சிங்கள மக்களும் சிங்களப் பகுதி அடிப்படை வசதிகளும் அதேகதிக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியாது என்று அந்த அமைப்பு ராய்ட்டர் செய்தி நிறு வனத்துக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்துள்ளது.
தெற்கே இருக்கும் அணைக்கட்டுகளில் ஒன்று உடைந்தால் என்ன நடக்கும் என்பது, தாங்கள் என்ன பாடு படவேண்டி இருக்கும் என்பது தென் பகுதி சிங்கள மக்களுக்குத் தெரியும். எங்கள் பதிலடி எந்த நேரத்திலும் எங்கும் கிடைக்கும். இந்த எச்சரிக் கையைச் சிங்கள மக்களும் அனைத்துலகச் சமூகமும் கவனத்தில் கொள்ள வேண் டும் என்று வலியுறுத்து கிறோம்” என்று அறிக்கை குறிப்பிட்டது. இந்த நிலையில் இந்த எச்சரிக்கையை அலட்சியப்படுத்தி விட முடியாது என்று பகுப்பாய் வாளர்கள் சொல்கிறார்கள்.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஏதோ திட்டமிடுகிறது, அதை நிறை வேற்ற தன்னுடைய கிளை அமைப் பைக் களத்தில் இறக்க புலிகள் திட்டமிடுவதுபோல் தெரிகிறது என்று ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லி என்ற சஞ்சிகையின் பகுப்பாய் வாளர் இக்பால் அத்தாஸ் ராய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இதற்கிடையே இலங்கை அதிபர் ராஜபக்சே இந்த மாதம் 17ம் தேதி இந்தியாவுக்குச் செல்கிறார்.
அப்போது அந்தப் பயணத்தை எதிர்த்து கறுப்புக்கொடி போராட் டம் நடத்தப்போவதாக தமிழ் நாட்டின் பாட்டாளி மக்கள் கட்சி யும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் அறிவித்துள்ளன.
இவ்வேளையில் அடுத்த கட்ட அமைதிப் பேச்சு நடைபெற வேண்டுமெனில் ஏ-9 பாதை திறக்கப்படவேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் கொழும்பு ஆங்கிலச் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தி இருக்கிறார்.
ஏ-9 சாலை திறப்பது குறித்து விடுதலைப் புலிகளின் கோரிக்கை யில் நியாயம் இருப்பதனை நாங்கள் உணர்கின்றோம் என்று இலங்கை பேச்சுக்குழுவில் அங்கம் வகித்த வரும் அமைச்சருமான ரோகித போகொல்லாகம வீரகேசரி நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் அமெரிக்கா வின் வாஷிங்டன் நகரில் இம்மாதம் 20ஆம் தேதி இலங்கை நன் கொடை நாடுகள் கூட்டம் நடக்க இருக்கிறது. ஜனிவா பேச்சு தோல்வியடைந்த நிலையில் கூட்டப்படும் இணைத் தலைமை நாடுகள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜனிவாப் பேச்சுக்கள் முடிந்து இலங்கை திரும்பிய தமிழீழ விடு தலைப் புலிகளின் பேச்சுக்குழு வினரை நன்கொடை நாடுகளின் துìதர் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் இலங்கை அரசாங்கப் பேச்சுக் குழுவினரையும் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினர்.
இவ்வேளையில் ஏ9 பாதையை திறந்து விடுமாறு இலங்கை அரசை வற்புறுத்துங்கள் என்று கேட்டு மதிமுக தலைவர் வைகோ இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
தமிழர்களின் பட்டினிச் சாவை தடுக்க நடவடிக்கை எடுங்கள். செஞ்சிலுவை சங்கம் போன்ற தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு தாராளமாக நிவாரணப் பொருள் கொண்டு செல்ல இது உதவும். இந்த இக் கட்டான சூழ்நிலையில் இலங் கைக்கு எந்தவிதமான ராணுவ உதவிகளையும் அளிக்க வேண் டாம் என்று கேட்டுக்கொள் கிறேன். தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவிப்பதைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று கடிதத்தில் வைகோ கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

TAMILMURASU-SINGAPORE

2 comments:

Anonymous said...

அவலத்தை தந்தவருக்கே அவலத்தை திருப்பி கொடுக்கும் முறை இதுதானா?

Anonymous said...

OUR TAMIL NADU GOVT is sleeping.
OUR CM will not see Tamils of EELAM. OUR Young Genration pay their ATTENTION TO KODAMPAKKAM.

ONLY GOD CAN HELP CEYLON TAMILS.