Sunday, September 24, 2006

கருனாநிதியின் கபடத்தனம்.

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை

இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுவதற்கான வாய்ப்புக்காக புதுடில்லியில் கடந்த சில தினங்களாகக் காத்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழு அவரிடம் கையளிப்பதற்கென்று வைத்திருந்த மகஜரை இந்திய அரசாங்கத்தின் உயரதிகாரிகளிடம் கையளித்து விட்டு நேற்று சனிக்கிழமை ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியிருக்கிறது.
அணிசேரா இயக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஹவானாவிலிருந்து நாடு திரும்பியதும் கலாநிதி சிங், இரா. சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட தூதுக்குழுவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று நம்பிக்கை கொடுக்கப்படாதிருந்திருந்தால், அவர்கள் புதுடில்லியில் இத்தனை நாட்கள் தங்கியிருந்திருக்க மாட்டார்கள்.

கலாநிதி சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கப்போவதில்லை என்று முன்கூட்டியே திட்டவட்டமான சமிக்ஞை எதுவும் காட்டப்பட்டதாகவும் இல்லை. இந்நிலையில், இறுதித் தருணத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அவர்களைச் சந்திக்க மறுத்ததன் மூலம் அல்லது சந்திப்பதைத் தவிர்த்ததன் மூலம் இந்தியப் பிரதமர் இலங்கையில் மீண்டும் போருக்குள் தள்ளப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு விடுத்திருக்கும் செய்தி என்ன? முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 மேயில் கொலை செய்யப்பட்ட மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் தரப்பிற்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவுகளில் ஏற்பட்டிருந்த கசப்பு நிலையை முடிவுக்குக் கொண்டு வந்து புதியதொரு அத்தியாயத்தைத் திறக்கும் நம்பிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தூதுக்குழுவினர் புதுடில்லியில் நாட்களைச் செலவிட்டனர் . இந்தியப் பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவு இணையமைச்சர் ஈ. அஹமட், புதிய வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்கவிருக்கும் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் இறுதியில் கலாநிதி சிங் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திப்பதற்கான சாத்தியமில்லை என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிய வருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இந்தியப் பிரதமர் சந்திக்காமல் விட்டதன் விளைவாக இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உடனடியாக ஏற்படக்கூடிய தாக்கங்கள் தொடர்பிலேயே நாம் கரிசனையுடன் நோக்க வேண்டியிருக்கிறது. உண்மையில், சம்பந்தன் குழுவினர் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியதால் இலங்கை அரசாங்கத் தரப்பினரும் பேரினவாதச் சக்திகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கின்றனர் என்பதில் சந்தேகமில்லை. அண்மைக் காலத்தில் தீவிரமடைந்த மோதல்களின் பின்னணியில் இலங்கை நெருக்கடி தொடர்பில் புதுடில்லியின் அணுகுமுறைகளில் காணப்படக் கூடியதாயிருக்கும் ஒப்பீட்டளவிலான சிறு மாற்றம் அரசாங்கத்துக்கோ அதன் நேச சக்திகளான பேரினவாதக் கட்சிகளுக்கோ மகிழ்ச்சியைத் தரவில்லை என்பது வெளிப்படையானது. இந்நிலையில், வடக்கு, கிழக்கில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் தூதுக்குழுவை சந்திக்காமல் விட்டதன் மூலம் கலாநிதி சிங் போரை முழுவீச்சில் முன்னெடுக்க வேண்டுமென்று குரலெழுப்பும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்கு மறைமுகமான உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறார் என்றே கூற வேண்டியிருக்கிறது. இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்தியப் பிரதமரின் செயற்பாடு பெரும் கவலையைக் கொடுத்திருக்கிறது.

புதுடில்லி நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கக்கூடிய இன்னொரு அம்சத்தையும் நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. பல வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் ஒருவித உறங்குநிலையிலிருந்த தமிழ்நாடு மாநிலம் அண்மைக்கால வன்முறைகள் காரணமாக விழித்தெழ ஆரம்பித்தது. தமிழக அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு புதுடில்லி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குரலெழுப்ப ஆரம்பித்தன. ஆனால், தமிழக திராவிட இயக்கக் கட்சிகளிடையேயான அரசியல் பகைமை இது விடயத்திலும் அதன் கைவரிசையைக் காண்பிக்கத் தவறவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதை இந்தியப் பிரதமர் தவிர்த்ததற்கு முன்னதாக அவர்களை தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி சந்திக்க மறுத்திருந்தார் என்பதை முதலில் நோக்க வேண்டும். கருணாநிதியின் அரசியல் எதிரியாக இருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோவின் மூலமாக இந்தியப் பிரதமரை சந்திப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சியெடுத்தனர். இது இயல்பாகவே கருணாநிதியை ஆத்திரப்படுத்தியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவரின் இந்த ஆத்திரமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் கலாநிதி சிங்கிற்கும் இடை யிலான சந்திப்பை அசாத்தியமாக்கிய காரணிகளில் முக்கிய மானது என்றும் நம்ப இடமிருக்கிறது.
தமிழகத்தில் உள்ள கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தங்களுக்கிடையிலான அரசியல் குரோதத்தைக் கைவிட்டு, ஒன்றுபட்டுக் குரலெழுப்பாத பட்சத்தில் மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடியில் உருப்படியான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை என்பதற்கு தற்போதைய நிகழ்வுகள் தெளிவான சான்றாகும் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழர்கள் இன்னலுக்குள்ளாவதை தமிழன் கண்டிப்பது தவறு என்றால், அத்தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்றும் இலங்கைத் தமிழர்களின் இன்னல் போக்குவதில் தமிழகக் கட்சிகளிடையே போட்டி வேண்டாம் என்றும் அண்மையில் சட்டசபையில் கருணாநிதி குறிப்பிட்டிருந்ததை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதே கருணாநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்க மறுத்ததற்கு என்ன காரணம் கூறப் போகிறார்?
உண்மையில், இந்திய மத்திய அரசாங்கம் இலங்கை நெருக்கடி தொடர்பிலான அதன் தற்போதைய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றத்தைச் செய்யாவிட்டால், இலங்கையில் அமைதியை தோற்றுவிப்பதற்கு எந்தவிதமான உருப்படியான பங்களிப்பையும் செய்வதற்கில்லை என்பதே எமது அபிப்பிராயம். இத்தகைய மாற்றத்தைச் செய்வதென்பது ஒன்றும் அசாத்தியமானதுமல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தூதுக் குழுவினர் தங்களது நிலைப்பாடுகளை விளக்கிக் கூறுவதற்கு இந்தியப் பிரதமர் சாத்தியமானளவு விரைவாக சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். இலங்கைத் தமிழ் மக்கள் இந்திய அரசாங்கத்தின் அணுகு முறையில் ஏற்படவேண்டுமென எதிர்பார்க்கும் மாற்றத்தின் ஆரம்பமாக இந்தச் சந்திப்பு அமையட்டும்!


நன்றி>தினக்குரல்

17 comments:

Anonymous said...

இக்கட்டுரையானது இந்தியரசின் அவமானங்களையும் அப்படி பட்டும் விக்கிரமாதித்தன் போல மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் இந்தியரசின் நடவடிக்கைகளை சரியாக வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது
இந்திய ஆக்கிரமிப்பு படை பற்றி எழுதும் போது எனக்கும் சபேசனுக்கும் எத்தனியோ முட்டுக்கட்டைகள் எத்தனையோ தனிமடல்கள்.எல்லாம் இதை நிறுத்தச்ச் சொல்லி நான் அப்போது எழுதுவதை நிறுத்தினேன் காரணம் பயமல்ல அது எம் உறவுகளின் இந்தியா நமக்கு சார்பாக வரும் என்ற நப்பாசையின் விளைவு என்றுதான் நினைத்து நிறுத்தினேன்.அதாவது ஆக்கிரமிப்பால் இறந்தவர்களையே மறக்கச்சொல்லி எத்தனியோ அன்புக்கட்டளைகள்.இது என்னத்தை காட்டுகின்றது எண்டால் ஒரு நாளில் தமிழீழம் கிடைத்து சிங்கள அரசாங்கத்துடன் ஒப்பந்தங்கள் செய்ய முற்படும் நேரம் வந்தால் எமக்காய் எம்முயிரை தந்த தியாகிகளையும் போரளிகளையும் மறக்கச்சொல்லுவது போன்றது.அது நடக்கக்கூடும் ஒரு நாள் அது இந்த யாழ்களத்தில் கூட எழுதப்படக்கூடும்.ஒருவர் கேட்டார் தம்பி 85 இப்போ 2006 இது இன்னும் 20 வருடங்களில் மாறிக்கேட்கப்படும் என்பதில் என்ன சந்தேகம்.??.ஜயா நம் தமிழன் தான் எபோதும் தமிழன்தான்.IPKF பற்றி எழுதும் போது 'எந்தப் புத்தில் எந்தப்பாம்மெண்டு" கேட்டவரும் இர்க்கிறார்கள்.அதாவது ஒரு அந்நிய காடைக்கும்பல் எம்மக்களை அழித்தது பற்றி எழுத முனைந்ததின் விழைவே. தெரிந்தொ தெரியாமலோ இப்போ புலிகள் தான் எம்விடுதலைக்காக உழைக்கும் வீரர்கள் மற்றைய இயக்கங்களின் தலைவர்களின் சுயநல நோக்கால் எத்தைனையோ விடுதலை வீரர்கள் இக் களத்தில் இருந்து அகற்றப்பட்டார்கள் அல்லது வெளியேறினார்கள் என்பது நிதர்சனம்.
எமது விடுதலை போராட்டம் எந்த ஒரு நாட்டினதுமோ அல்லது எந்தவொரு தனிமனிதரையுமோ நம்பி ஆரம்பிக்கப்படவில்லை.அதென்னய்யா எம்க்கு நடந்த கொடுமை பற்றி எழுதினால் சப்போட் போயிரும்மெண்டு கவலை.என்ன நான் பொய்யையா எழுதினேன் இல்லையே உண்மையைத்தானே.
இந்திய இந்திய என்கின்றீர்களே இந்தியா எமக்காக என்ன செய்தது அல்லது செய்யத்தான் போகுதா??
கருநாணநிதி என்ன செய்தார் என்றால் அதுக்கொரு வியக்கியாணம்.MGR செய்ததில் ஒரு தூசியாவது செய்திடுப்பாரா.வைகோ ஒழுங்குசெய்ததை குழப்பியதே கருணாநிதி என்பது இப்போது வெளிவரத்தொடங்கியுள்ளது (ஆதாரம்-தினமலர்http://www.yarl.com/forum3/viewtopic.php?p=223516#223516) அதாவது சாதாரன ஒரு அரசியல் போட்டியைவைத்து ஒரு இனத்தின் விடுதலையை நசுக்கப்பார்க்கும் கபடவாதி தான் தனக்குதானே உலகத்தமிழர் தலைவர் என போட்டுக்கொள்ளும் கலாநிதி.கலைஞர்.கருநாநிதி.இவரை பற்றி சபேசன் எழுதிய கட்டுரைகள் தான் தொடர்புகொள்ளும் போது எத்தனையோ தடைகலை போட்டதாக மெல்பேர்னில் இருக்கும் சபேசன் சொல்லி நான் என்காதால் கேட்டேன்.அதாவது தான் தான் அக்கட்டுரையை எழுதியதாக நினைத்தாராம் அவர்.அக்கட்டுரையை சபேசன் என்பவர் எழுதினாராம் ஆனால் அவ் சபேசன் யாழ் களத்தில் இருக்கும் சபேசனா என்பது எனக்கு சரியாக தெரியாது.ஆக இப்ப்டிப்பட்ட ஒரு கீழ்த்தரமான விமர்சனங்களை ஏர்றுக்கொள முடியாத ஒருவர்தான் தமிழர் தலைவராம் நகைப்புக்கிடமாக இல்லை.நான் வழமையாக லக்கியிடமுன் மற்றும் தமிழ்நாட்டு உறவுகளிடமும் ஏதும் இந்தியாவை பற்றி விமர்சித்தால் தனிமடலில் வருத்தம் தெரிவிப்பது உண்டு ஆனால் இப்போது அவ்வாறு செய்யப்போவதில்லை ஏனெனின் நான் ஒன்றும் பிழையாக எழுதவில்லை வருத்தம் தெரிவிக்க
கருநாநிதியை பற்றி மேலும் தெரியவேண்டுமெனின் அன்ரன் அண்ணவினதும் அடெல் பாலசிங்கத்தினதும் புத்தகங்களை வாசியுங்கள்.அதில் உள்ளவற்றை பிழை எண்டு யாரும் சொல்லப் போவது இல்லை ஏனேனின் தலவருடன் கூட இருந்து நடந்த நிகழ்வுகளை நேரடியாக பார்து எழுதியவர்கள் அவர்கள்
சுயநலத்தை நோக்கமாக கொண்ட ஒருவர் தமிழர் தலவன் என ஒருகாலமும் சொல்ல முடியாது.அவரை பற்றி இந்திய அரசியலில் அவர் போடும் கூத்துகளை விமர்சிக்க என்னால் முடியும் ஆனால் அதை பற்றி எழுத எனக்கு உரிமை இல்லை.
சூரியாவின் கலியாணத்துக்கு காலை 6.30 போனார்.தனக்கு பாராட்டு விழா எடுப்பதை பற்றி கதைக்கவந்த சிம்புவை சந்தித்தார்.இன்றுபாராட்டுவிழாவுக்கும் போகிறார் இதுக்கேல்லாம் நேரம் இருந்தவருக்கு ஒரு அரைமணி நேரம் கூட்டமிப்பினரை சந்திகமுடியவில்லை காரணம் அரசியல் சாக்கடை.ஆக ஒரு தமிழரின் பிரதிநிதிகள்(பாராளமன்ற உறுபினர்கள் )தமிழ்நாட்டின் முதலமச்சரை சந்தித்து தம் நியாயங்களை கேட்க்கக்கூட முடியாதவருக்கு என்னையா பட்டம் தமிழர் தலைவர் எண்டு.
இந்தியாவின் முக்குடைபுக்களை நான் சொல்லத்தேவையில்லை மேலே உள்ள கட்டுரை சரியாக விளக்கப்பட்டுள்ளது
இதனை வாசித்து பலர் சன்னதங்கள் ஆடக்கூடும் அல்லது தனிமடலில் வசைபாடக்கூடும்.எல்லாத்துக்கும் ரெடியாகத்தான் இதை எழுதுகின்றேன் ஏனேனின் தமிழர் தலைவர் கருநாநிதியை நான் பிஉன் பற்றவில்லை புலிகள் தலைவன் பிரபாகரனை நான் பின்பற்றுகின்றேன்.

Anonymous said...

உங்கள் ஆதங்கம் கோபம் எல்லாமே புரிகின்றது. தமிழனக அரசியல் பற்றி பெரிதாக நான் அறிந்ததில்லை. அதனால் தமிழ் நாட்டு, விடையங்களில் கருத:த வை்பபதை தவிர்பது வழமை ஆனால் இன்றைய இந்த சூழலானது. மிகவும் கீழ்த்தரமான, கேவலமான, வெட்க கேடான வேலை. ஒரு வயது முதிர்ந்த அரசியல் வாதி, பல பட்டங்கள் பெற்ற அறிவுஜீவி செய்யக்கூடிய காரிமல்ல இது. தமிழக சட்டமன்றத்தில், எங்கள் பிஞ்சுகள் கருகான போது கண்ட கூட்டம் போட்ட போது மிகவும் மகிழ்ந்தேன். தமிழக அரசியலில் மாற்றம் வந்து விட்டதாகவே உணர்ந்தேன். ஆனால் இன்று இன்றை இந்த நிமிடம். என்ன சொல்லி திட்டலாமம் என்று வார்த்தை தேடிநிற்க்கின்றேன். ஒரு தலைமை என்பது, அதுவும் அரசியல் தலைமை என்பது மகக்களுக்காக இருக்க வேண்டும். சொந்த நிறுவனங்களும், பெருக்கும் புகழுக்குமல்ல. கருணாநிதியின் இந்த கோர முகத்தை, இப்படியான அரசியல் முகம் ஒன்று இருக்கிறது என்பதை முதல் தடவையாக, எனக்கு நினைவு தெரிந்த பின் நேரடியாக அறிகின்றேன். மிகவும் வருத்தமாக இருக்கின்றது. ஒரு தமிழன் மற்றைய தமிழன் சாகும் போதும், தன் அரசியல் சுயநலங்களை பற்றிக்கவலை கொள்கிறான் என்ற போது. சாதரணமான மனிதக்குணமற்ற இவர்கள் எப்படி தலைவர்களாக முடியும்?

காட்டு மிராண்டிகளாக, கொலைகாரார்களாக சித்திரிக்கின்றார்களா? எம்மை? தமிழ் தமிழ் என்று மேடையில் பேசும் போதும் வாய்கிழிய கத்தும் போதும் தமிழன் இரத்தம் மண்ணில் பாயும் போது இந்த பரதேசிக்கூட்டங்கள் வாய் சற்றும் சலனப்பட்டிருக்காதா? நாங்கள் யார்? எங்களுக்கு ஒரு அடையாளம் இல்லையா? எங்களுக்கு ஒரு வரலாறு இல்லையா? சிறிலங்காவிலிருந்து இந்தியா சென்றவர்கள் வேலை இல்லாதவர்களா? இவர்களும் அரசியல் வாதிகள் தானே? இவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே? இவர்களும் மக்கள் பிரதிநிதிகள் தானே? ஒரு மக்களின் பிரதிநிதியை ஒரு நாடு ஏற்காவிட்டால் அதன் கருத்த என்ன? அந்த பிரதிநிதி பிரதிநிதிப்படும் அனைவரையும் அவர்கள் வெறுக்கின்றனாரா? ஒரு அற்ப அரசியல் எதிர்காலத்தக்காக, ஒரு இனத்தின் எதிர்காலத்தை குழி தோண்டிப் புதைக்க முனைவது நியாயமா?

எங்கள் பிரதிநிதிகளை தமிழ் நாடு தொடக்கம், டெல்லி வரை அலைக்கழித்து இவர்கள் செய்திருப்பது. அவர்களை அவமானப்படுத்தியிருக்கின்றனர். ஒரு நாட்டு மக்களை அவமானப்படுத்தியிருக்கின்றனர். ஒரு தேசத்தின் பிரதிநிதிகளை அவர்கள் அவமானப்படுத்தியிருக்கின்றனர். இதை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழ் நாட்டில் கோசம் போடும் கூட்டம். இதையே அரசியலுக்கா, மாற்றிவிட்டிருக்கின்றது. இது எல்லாம் ஒரு பிழைப்பென்று, அவர்களுக்கு யால்ரா போட ஒரு கூட்டம் இங்கும் கூடி வரும் வரட்டும்.

யாரின் உணர்வுகளைப்பற்றியும் இந்த தலைப்பில் கவலைப்பட தேவையில்லை. ஒட்டுமொத்த ஈழதமிழ் மக்களின் உணர்வுகளை இவர்களும் சீண்டிப்பார்க்கிறார்கள் போல, 6 கோடி தமிழ் மக்களால் செய்ய முடியாததை, இவர்கள் என்ற செய்வது என்று ஒரு பொறாமையோ?

என்னைப்பொறுத்தவரை மீண்டும் இந்தியாவிடமிருந்து, அழைப்பு வந்தால், நல்ல நிலையிலிருந்த அவர்களை புறக்கணத்து அவமானம் தந்தவர்களுக்கே, அவமானம் கொடுக்க வேண்டும். வேலைப்பழு அவர்களுக்கு மட்டுமா? இவர்களுக்கு இல்லையா? மக்களவையில். இருந்து கையேழுத்து போடுபவனுக்கே வேலைப்பழு என்றால், மக்கள் சேவை செய்யும் இவர்களுக்கு எவ்வளவு நேரமின்மை இருக்கும்?

Anonymous said...

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த எம்பிக்களை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்க மறுத்த நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வேரதன் பிரிவு) ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்களை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.



இலங்கை எம்பி சம்பந்தன் ராஜவர்தன் தலைமையிலான தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த 6 எம்பிக்கள் இந்தியா வந்தனர். இவர்கள் டெல்லியில் ததசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அகமது ஆகியோரை சந்தித்து பேசினர். ஆனால் அவர்களை பிரதமர் கடைசி நேரத்தில் சந்திக்க மறுத்துவிட்டார்.

இந் நிலையில் டெல்லி வருமாறு தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்), தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (பிளாட்), ஈழ மக்கள் புரச்சிகர விடுதலை முன்னணி (இபிஆர்எல்எப்வரதன் பிரிவு) ஆகிய கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.

இது குறித்து பிளாட் இயக்கத்தினர் கூறுகையில், நாங்கள் இந்த வாரம் டெல்லி செல்கிறோம். அங்கு நாங்கள் யாரை சந்திக்க போகிறோம் என்பது எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றனர்.

தமிழர் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி ஜனதா விமுக்தி பெரமுனா, ஜதிகா ஹெலா உருமையா ஆகிய சிங்கள கட்சி தலைவர்களுடனும் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிளாட் இயக்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

புலிகள் ஆதரவு எம்பிக்களை மட்டும் மத்திய இணையமைச்சரும் நாராயணனும் சந்தித்தது சரியில்லை என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பிற இயக்கத்தைச் சேர்ந்த எம்பிக்களையும் இவர்கள் சந்திக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.



http://thatstamil.oneindia.in/news/2006/09/25/lanka.html

ஜயராமன் said...

TNA என்பது புலிகளின் கையாட்கள் என்பதே இந்தியாவில் இப்போது பரவலான ஒரு கருத்து. TNA = TIGER NOMINATED AGENTS என்று சொல்லப்படுவதும் நீங்கள் அறியாதது அல்ல. இந்த சூழலில் புலிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஒரு அபாயகரமான நிலையை காங்கிரஸ் முதல்வர் எடுப்பார் என்று எதிர்பார்ப்பதோ, அந்த அரசுக்கு உறுதுணையாக இருக்கும் கருணாநிதி எடுப்பார் என்று எதிர்பார்ப்பதோ அறிவீனம். கருணாநிதி ஒரு சாதாரண அரசியல்வாதி. அவர் தன் லாபத்துக்கு ஏற்றவாறு கொள்கைகளை காற்றில் பறக்க விட என்றுமே வெட்கப்பட்டதில்லை.

நன்றி

Anonymous said...

அப்படி என்றால் எதற்கு அவர்களை சந்திப்பதற்க்கு பிரதமர் சம்மதம் தெரிவித்தார், வந்தபின் ஏன் மறுத்தார் இதில் கலைஞரின் கைதான் விளையாடி இருக்கிறது. கலைஞர் சொன்னால் பிரதமர் கேட்பார் கேட்டுத்தான் ஆகனும். அல்லாவிடில் மத்தியில் நிலைக்கமுடியாது.

G.Ragavan said...

பிரதமர் சந்திக்க மறுத்ததே ஒரு தவறான நடவடிக்கை. இந்தச் சந்திப்பு கொஞ்சமாவது நல்லது செய்யும் என்ற நம்பிக்கையைக் குலைத்து விட்டது பிரதமரின் நடவடிக்கை. அரசியல் காரணங்கள் இருக்க வாய்ப்புண்டு. அதிலும் ஏற்கனவே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வெளியேறிய நிலையில். ஒரு தமிழ் இந்தியன் என்ற வகையில் பிரதமரின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆனால் முரசொலி மாறன் ஸ்டாம்பு வெளியிட பிரதமரை வரவழைக்கின்றவர்களால்...இந்தச் சந்திப்பிற்கு நல்ல விதமாக ஒரு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை என்பதை நினைக்கும் பொழுது வயிறு பற்றிக் கொண்டு எரிகிறது. எந்த நினைப்பில் தமிழினத் தலைவர் என்று பட்டம் வைத்துக் கொள்கிறார்களோ!

Anonymous said...

Did TNA get APPINTMENT From PM before TNA MPs leave from Sri Lanka?

TNA did not write and get APPOINMENT from PM.

they went to delhi as Tourists.
This is very big Mistake of TNA .
This is a good lesson.

Even before you go to hair cutter's Shop, get an APPOINTMENT.

IF you want to visit to Tamil Nadu,
First try to meet CM, Opposion Leader, and others.
But TNA did not phone or send Letters to get APPOINMENT.

TNA MPS are not Children.
they must learn. This is a good lesson.
Next time, pls. advise them to get APPOINMENT before leave from SRILANKA.

Anonymous said...

Did TNA get APPINTMENT From PM before TNA MPs leave from Sri Lanka?

TNA did not write and get APPOINMENT from PM.

they went to delhi as Tourists.
This is very big Mistake of TNA .
This is a good lesson.

Even before you go to hair cutter's Shop, get an APPOINTMENT.

IF you want to visit to Tamil Nadu,
First try to meet CM, Opposion Leader, and others.
But TNA did not phone or send Letters to get APPOINMENT.

TNA MPS are not Children.
they must learn. This is a good lesson.
Next time, pls. advise them to get APPOINMENT before leave from SRILANKA.

Anonymous said...

அதைத்தான் நாமும் சொல்கிறோம். கலைஞரை சந்திக்காமல் எப்படி இவர்கள் வைகோவை சந்திக்கலாம்? இது கலைஞரின் செல்வாக்கை குறைக்காதா? வைகோ மூலம் பிரதமரை சந்தித்தால் எனது செல்வாக்கு என்னாவது, எவ்வளவு இலங்கைதமிழர் இறப்பதல்ல எனது பிரச்சினை, எனது செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பதுதான் எனது பிரச்சினை, அல்லாவிடில் எப்படி அடுத்தவன் எனது வேட்டியை கட்டிவிடும் நிலையிலும் நான் முதலமைச்சர் கதிரையில் உக்காந்திருக்கிறேன், எனக்கு பிறகு ஸ்டாலினை அல்லது எனது பேரான்டியை எப்படி முதலமைச்சர் ஆக்குவது. அரசியல் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்கள் வந்து தமிழ்நாட்டில் எங்களிடம் அரசியலை கற்றுக்கொள்ளட்டடும்.

திருவடியான் said...

அப்பாய்ண்ட்மெண்ட் வாங்காமால் வந்தார்கள் என்பது வேடிக்கையாக உள்ளது.

அப்பாய்ண்ட்மெண்ட் வாங்காமால் வந்தாலும் வருகிறவர்களைப் பொறுத்து பார்ப்பதும் பார்க்காததும் உள்ளது. தனித்தமிழ்நாடு என்ற கோஷத்தால் ஏற்பட்ட அனுபவம் கருணாநிதி அவர்களுக்கு மனதில் நிழலாடியிருக்கும். அதனால் தவிர்த்திருக்கக் கூடும்.

ஏன் பிரதமர் பார்க்கவில்லை என்பதை சௌத் பிளாக் அதிகாரிகளைத்தான் கேட்க வேண்டும். மற்றபடி வைகோ தமிழ் ஈழ எம்பிக்கள் பிரதமரைச் சந்திப்பதால் பேர் வாங்கிவிடுவார் என்று கலைஞர் நினைப்பாரானால் புலிகள் அமைப்பு கலைஞரை நாட வேண்டியது தானே.

இன்றிருக்கும் சூழலில் கலைஞரின் கையாளல் இந்த விஷயத்தில் இருக்கிறது என்பதை விட அதிகாரிகள்-புலிகள மட்டத்தில் சில விஷயங்கள் "தீரப்" பேசி இப்போதைக்கு முடிவுக்கு வரவில்லை என்றே கருத முடியும்.

Anonymous said...

யாழ்ப்பாணத்தில் முப்பதாயிரம் விருப்பு வாக்குப் பெற்றவர் பாராளுமன்றம் போகாதபோது வெறும் எண்ணாயிரத்து ஐநூறு விருப்பு வாக்கோடு யாழ்ப்பாணத்திலிருந்து பாராளுமன்றம் போய் இன்று அமைச்சராகவும் இருப்பவர் ஒருவர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்னும் புலிகளின் பிரதிநிதிகளாகப் பார்க்கப்பட்டதால் அவர்களைச் சந்திக்கவில்லையென்று சப்பைக்கட்டு கட்டப்படுகிறது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்படாத குழுக்களை டெல்லிக்கு அழைத்தது எதற்கு? இதற்கு இந்தியத் தரப்பிடமிருந்து என்ன பதில்?

அழைப்பின் பேரில் தமிழகம் சென்ற தமிழ்த்தேசியப் பாராளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தன் என்ற முதியவரை இந்திய விமானநிலையத்தில் வைத்து குண்டுக்கட்டாகத் தூக்கி விமானமேற்றித் திருப்பியனுப்ப முடிகிறது சட்டத்தின் பேரால். ஆனால் இந்தியச் சட்டத்தின்படி கொலைக்குற்றம் சாட்டப்பட்டுத் தேடப்பட்டு வரும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா எத்தனை முறை கெளரவப் பிரதிநிதியாக இந்தியா சென்றார்? எவ்வளவு காலம் நட்சத்திர விடுதிகளில் தங்கியிருந்தார்? எத்தனை அரசதலைவர்களைச் சந்தித்திருக்கிறார்? இந்த இடத்தில சட்டத்துக்கு அக்கெலைக்குற்றவாளி எப்படித் தெரியாமற்போனார்?

நல்ல கூத்தையா...

Anonymous said...

TNA MPs did not get a Fixed Day and Time to meet PM.

But CM Karunanithi's AGE AND EXPERINCE are enough to understand Srilanka's Tamil Conflict.
He failed to help TNA MPs to meet PM.
Future CM Stalin never open his Mouth to Talk about SRI Lanka or other Inernational Issue.

History of Tamils will blame CMs M.Karunanithi and JJ.

Anonymous said...

Dear Jeyaraman!!

WE know Pakistan Is working behind Bombs attack in India. but India send Bus and Flowers to Pakistan.

but, why our PM did not meet Tamil People elected Members of Sri Lanka? can you explain?

North Indians dont care about Tamils. They never give respect to South India. SL Tamils dont expect much from North Indian's Politicians.

Anonymous said...

South Block rule India. Our PM can not meet TNA. The Real PM Soniyaji
does not like.

Anonymous said...

As far as our knowledge concern, this TNP did not have an appointment to meet PM. As you ppl said there are MP of a nation who were elected by ppl of Srilanka. They should know that without appointment, no meet will take place.
If LTTE or TNP really want to meet PM or anyother high autherity ppl in India, they should go proper channal. they should ask TamilNadu CM first, meet first TN CM in proper way. Not other politicians..
they should meet first TN,

even if they donot know this small think, there is no point in being MP.

India has its own rules and regulation for meet higher authorities.

These TNP MP had come here to make a scene like, they met Indian PM and discussed about current situation.

If TNP really want to meet our PM why donot they come proper procedure. These TNPs are came here for a good cause, if they know what they are doing they should do properly.

If our PM meet these MPs, that very bad example, our PM should give due respect to our CMs. Not a meer politicians like vaigo or other politicians.

What our CM did is correct as well as our PM.
do not blame our CM and PMs, meeting your country men is just humane courtesy.

கசி said...

என் புருஷனுக்கும் கருணாநிதிய பிடிக்காது!

ஜயராமன் said...

மகாஜனங்களே,

நான் மன்மோகன் சிங் பண்ணியது சரி என்று எங்குமே சொல்லவில்லையே. அவர் தரப்பிலிருந்து பத்திரிக்கைகளுக்கு "லீக்" செய்யப்பட்ட காரணங்களை பதித்தேன்.

மன்மோகன் புலிகளின் பிரதிநிதிகளான தமிழ் எம்.பிக்களை பார்க்காததில் எந்த தப்பும் இல்லை. அதனால், குழப்பம்தான் ஏற்படும். அதே சமயம், மன்மோகன் பாகிஸ்தானுக்கு காவடி தூக்குவது, ஓட்டுக்காக காஷ்மீரில் மத வெறி தீவிரவாதிகளுடன் சமரசம் என்று முட்டி போடுவது, இவைகளையும் நான் எதிர்க்கிறேன்.

நன்றி