Friday, November 30, 2007

மலேஷியத் தமிழரின் ஆன்ம வழிகாட்டியாக காந்திக்குப் பதிலாக மேதகு பிரபாகரன் வரலாம். - மலேசிய தமிழ் பேராசிரியர்

மலேசியாவில் தாங்கள் இனரீதியாகப் பாகுபாடு காட்டபட்டு ஒதுக்ப்படுகின்றார்கள் எனத் தெரிவித்து, அதற்கு ஆட்சேபனைகளை வெளிப்படுத்தும் வகையில், அஹிம்சைப் போரின் பிதாமகரான மஹாத்மா காந்தியின் உருவப்படங்களைத் தாங்கியபடி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த ஞாயிறன்று அங்குள்ள இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.

'இந்த மக்களின் நியாயமான ஆதங்கங்கள் தொடர்ந்தும் கவனிக்கப்படாமல் அவர்கள் புறக்கணிக்கபடுவார்களாயின் அந்த மக்களின் ஆதர்ச வழிகாட்டியாக மஹாத்மா காந்திக்குப் பதிலாக மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவார்." இப்படி மலேசியாவின் கெபன்காஸன் பல்கலைக்கழகத்தின் சரித்திரத்துறையின் முன்னாள் பேராசிரியர் பி. இராமசாமி எச்சரித்திருக்கின்றார்.

சிங்கப்பூரின் டி.என்.ஏ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.

2003 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் அவர்களது அரசமைப்பு விவகாரம் ஆலோசனைக் குழுவுக்கு நியமிக்கப்பட்டவர்களில் மலேசிய நாட்டவரான பேராசிரியர் இராமசாமியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய அரசின் கொள்களைக் கடுமையாக விமர்சித்து வந்ததால் அவரது பல்கலைக்கழக சேவை துண்டிக்கபட்பட்டுவிட்டதாகக
கூறப்படுகின்றது.

"மலேசிய அரசு தனது இன ஒதுக்கல் கொள்கையைத் தீவிரமாகத் தொடருமானால் இங்குள்ள தமிழரின் பிரச்சினைகளைக் கையாளும் விடயத்தைத் தீவிரப்போக்கு அணிகள் கையேற்கும் உண்மையான ஆபத்து நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

'இன்று (இங்கு) இந்திய வம்சாவளியினரின் கட்டமைப்பு நலிவுற்று, இறுக்கமற்றதாகவும், அவர்களது எண்ணங்கள், திட்டங்கள் வலிமையாக வரையறுக்கப்படாமலும் இருக்கலாம். ஆனால் பொலிஸ் மூலம் அதனைக் கட்டுப்படுத்த முற்பட்டடால் பதிலடி நடவடிக்கை மோசமாகும்." என்றகிறார் அவர்.

'ஆர்ப்பாட்க்காரர்களுக்கு எதிராக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவி விடப் போவதாக அரசு கூறுகிறது. அப்படி நேருமானார் அது மேற்கண்ட மோதல் நிலைமையையே ஏற்படுத்தும்." என்றும் அவர் கூறினார்.

அடக்குமுறை தீவிரமானல் வன்முறைக் கிளர்ச்சிப் பாதையே கடைசி மார்க்கமாக நாடப்படும் ஆபத்து இருப்பதைத் தாம் உணர்கிறார் என்று இவ்விடயங்களில் நீண்ட கால அவதானியான மலேசியப் பத்திரிகையாளர் பிரண்டன் குப்புசாமி கூறுகிறார்.

'அவர்கள் தலையைத் தொடர்ந்து சுவரோடு மோதிக் கொண்டிருக்கிறர்கள். ஏதோ ஒரு வடிவிலான புரட்சி ஏற்கனவே பீறிடத் தொடங்கிவிட்டது. வன்முறைப்பாதை பொதுவாகப் பகிரங்கமாகப் பிரஸ்தாபிக்கப்படவில்லை. ஆனால் தனிப்பட்ட சந்திப்புகளால் அது குறித்துக் குரல் எழுப்பப்படுகின்றது." என்றார் குப்புசாமி.

இந்தப் பின்னணியிலே புலம் பெயர் நாட்டுத் தமிழர்களின் புலிகள் ஆதரவுப் போக்கு முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகின்றது.

மலேசியத் தமிழர்கள், தமிழீழப் போராட்டத்துக்கு செயலூக்கம் மிக்க பங்காளர்கள் என்கிறார் பேராசிரியர் இராமசாமி.

"மலேசிய வாழ் இந்தியர்கள் பிரபாகரன் பால் பற்றுள்ளவர்கள். இங்குள்ள தமிழ் பத்திரிகைகள் பிரபாவைத் துதிக்கினறன". என்றார் குப்புசாமி.

'அப்படியானால் தமிழீழ விடுதலப் புலிகள் போன்ற இயக்கம் ஒன்று மலேசியாவில் தோன்றும் ஆபத்து உண்டா?" என்று அவரிடம் கேட்ட போது -

'இந்திய வம்சாவளியினரின் போரட்டம் பற்றிய எனது ஆய்வறிவின்படி தற்போதைய தலைமை - தீப்பொறி போன்ற சட்தரணி உதயகுமாரின் தலைமை - மிகத் தீவரப் போக்குடையது. பெரிய ஆபத்துகளை எதிர் கொள்ளத் தயாரானது. நீதிமன்றக் கைது உட்பட, ஆனால் அந்த நிலைப்பாட்டில் இருந்து ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் வரை செல்வதற்கு நீண்ட தூரம் கடக்க வேண்டும்." என்று கூறும் குப்புசாமி, இத்தகைய பாய்ச்சலுக்கு இந்தத் தலைமையால் முடியாது எனத் தாம் நம்புகின்றார்' எனவும் குறிப்பிட்டார்.

'எனினும் வரும் வருடங்களில் குழுக்கள் பிரிந்து சென்று இன்னும் தீவிரம் போக்கை வெளிப்படுத்தலாம். ஆகவே அதற்கான (புலிகள் போன்ற ஆயுத இயக்கம் தோன்றுவதற்கான) வாய்ப்பு நிலவத்தான் செய்கிறது.' என்றார் அவர்.

ஆனால், மலேசியாவில் இந்திய வம்சவாளித் தமிழருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியாவுக்கும் தான் தலையிடியை ஏற்படுத்தியிருப்பாதகக் கூறப்படுகின்றது.

1980 களில் இலங்கையில் தமிழர் விவகாரம் ஏற்படுத்திய கட்டாயங்கள் போன்ற சூழலை மலேசியாவில் இப்போது இந்தியத் தமிழ் வம்சாவளியினருக்கு நேர்ந்துள்ள நிலைமை அச்சொட்டாக இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி> சுடர் ஒளி

Monday, November 26, 2007

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே!!!



மேஜர்.ஜீவகன்(கடற்புலி)
(பாலசுந்தரம் ரவிசுந்தரம், வல்வெட்டிதுறை)
முளையாக:- 20.04.1971, விதையாக:-09.11.2001

எம் உயிரோடு கரைந்து விட்ட உறவே, இப்புனிதநாளில் கண்ணீர் மலர்தூவி, உமக்கு எமது வீர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம். உமது லட்சியம் தமிழர் தம் விடுதலையாம், அந்த நெருப்பினை நெஞ்சினில் சுமந்து, நீ நடந்த பாதையிலே நடந்து, எம் தேசியத்தலைவரின் கரங்களை இறுகப்பற்றி கொள்கிறோம்.

இவர்கள்,

அம்மா, அண்ணா, அக்கா,தங்கை,அத்தான்மார்,அண்ணி,மருமக்கள்.

பிரபாகரன் எங்கள் தலைவன்.

நாங்கள் பயந்து நின்றோம் ஒருவன் துணிந்து நின்றான், அவன்தான் எங்கள் தலைவன்.






Sunday, November 25, 2007

தேசியத்தலைவரின் 53வது அகவையை வாழ்த்துவோம்.


பிரபாகரன் நினைத்தது நடக்கும் - அவன் புலிப்படை நெருப்பாற்றை நீந்திக் கடக்கும்.
பலர் உலகிலே பிறந்து தமக்கென வரலாறு இல்லாமலே மறைந்து போகின்றனர். அவர்களிலும் குறைந்த தொகையினர் வரலாற்றிலே தங்கள் சுவடுகளைப் பதித்து செல்கின்றனர். வரலாற்றை தாமே படைத்து அதன் நாயகராகவும் விளங்குவோர் மிகச் சிலரே அந்தச் சிலருள் ஒருவரே இந்த நூற்றாண்டின் இணையற்ற தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆவார்.

வந்தேறிகளிடம் ஆயிரம் ஆண்டுகளாய் அடிமைப்பட்டு மண்ணிழந்து மதியிழந்து, மொழிகெட்டு, விழி கெட்டு, கடலிழந்து, கொடியிழந்து, கொற்றமிழந்து, பன்னூறு ஆண்டுகளாய் நோற்றதவமே தமிழீழ விடுதலைக்காய் களமாடுகின்ற எங்கள் தானைத் தலைவரைத் தோற்றுவித்தது போலும்.

அவர் என்ன தாய் நாட்டின் சொந்த வரலாறு அறியாது ஐரோப்பிய வரலாறுகளையும் மார்க்கிசத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு ரஷ்சியாவைப்பார்! சீனாவைப் பார்! என வாய்ப்பந்தலிட்டவரா? இல்லவே இல்லை. அப்படியானால் அவர் என்ன கற்றார்? எங்கு படித்தார்? யாரிடம் பயின்றார்?

இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது மெய்யியல் ஆசான், வரலாறு எனது வழிகாட்டி, எனக் கூறி ஒரு கைத்துப்பாக்கியுடன் 14 வயதிலேயே விடுதலைக்கு அகரம் எழுதினார். இன்று உலகின் தலைசிறந்த கெரில்லாத் தலைவர்களில் ஒருவரான சேகுராவுடன் ஒப்பிட்டு பேசப்படும் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இதற்கெல்லாம் காரணம் களத்திலே அவர் பெற்ற வெற்றிகளே. ஒப்ரேசன் லிபரேசன, பலவேகய, ஜெகசிக்குறு, சக்ஜெய, ஓயாத அலைகள, ஆணையிறவுப் பெருஞ்சமர் என நீண்டு கொண்டே போகும் வெற்றியின் பட்டியல்கள். இந்த வெற்றிகளைக் குவித்திட அவர் நவீன உலகில் தமிழருக்கென நவீன போர்படையணிகள் தேவை என உணர்ந்தார்.

திருக்குறளில் குறிப்பிட்டது போல "கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே படை" அதாவது, வியுகம் அமைத்து எமனே சினம் கொண்டு வந்தாலும் எதிர் நின்று வெல்லக்கூடிய ஆற்றல் உள்ள படையணியை உருவாக்கினார். வெறுமனே ஒரு கைத்துப்பாக்கியுடன் போராடப்புறப்பட்ட தேசியத்தலைவர் படிப்படியாக தீர்க்கமான அணுகுமுறையுடன் தரைப்படையை, கவச எதிர்ப்புப்படை, என தரைப்போர் ஆற்றல்களை விரிவுபடுத்தியதுடன் கடற்புலிகள், கரும்புலிகள், வான்புலிகள், என அறிமுகம் செய்ததுமட்டுமல்லாமல் விடுதலை சார்ந்த கலை இலக்கியப்படைப்புக்களையும் உருவாக்கி வந்தார்.

தமிழீழ வளர்ச்சியின் பொருட்டு அவர் தொடாததுறைகளே இல்லை எனலாம். இன்று ஆர்ப்பரித்து எழுந்து நிற்கின்றது எமது தேசம். ஆண்கள், பெண்கள,முதியோர் என ஆயுதம் தரித்து சிங்கள இராணுவத்தை எதிர்கொள்ளுகின்றது. எமது தேசத்தின் சுதந்திரப்போர் பல்லாயிரம் சிங்கள இராணுவத்துப்பாக்கிகளாலும் நவீன கடற்படை, விமானப்படைத் தளங்களாலும், தாக்கப்படும் போதெல்லாம் எமது சின்னஞ் சிறு தேசம் தனித்து நின்று போராடி வெற்றிகளைக் குவிக்கின்றது. இதற்கு குறைந்த ஆட்தொகையும் குறைந்த ஆயுதவளங்களையும் வைத்திருந்தபடி அவற்றின் உச்சப் பயனை பெறும் வகையில் தலைவர் பிரபாகரன் செயற்படுத்தும் போர்த்திட்டங்களே இத்தகைய வெற்றிகளுக்குக் காரணமாக அமைகின்றன்.

இதற்கு எடுத்துக் காட்டாக மிகக் குறைந்த போராளிகளோடு உலகின் நாலாவது பலம் பொருந்திய வல்லரசு ஒன்றின் நோக்கத்தை முடியடித்து உலகின் இணையற்ற தலைவர்களில் ஒருவரானார்.

இதனாலேயே விடுதலைப் புலிகளின் பரமவைரியும் தமிழீழத்தில் அமைதிப்படை என்ற பெயரில் நடத்திய கொடுரங்களுக்கு தலைமை வகித்த ஜே.என்.டிக்சித் பின்வருமாறு கூறுகின்றார். “பல குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் அந்த மனிதரிடம் ஒரு உள்ளீடான இலட்சிய நெருப்பு கொள்கை உறுதியும் உண்டு என்பதை, அறிமுகம் செய்வதிலும் அவரிடம் இயற்கையாகவே இராணுவத்திறனாய்வு, அதற்கேற்ப காய்நகர்த்தும் மதிநுட்பமும் உடையவர்” என்றார். எனவேதான் அவரின் மதிநுட்பமான போர்த்திறனையும் இராஜதந்திரங்களையும் கவனித்தே தமிழீழ விடுதலைப்போரை ஆதரிப்போரும் சரி எதிர்போரும் சரி இன்று உலகில் உள்ள கெரில்லாத் தலைவர்களுள் எமது தேசியத்தலைவர் பிரபாகரன் ஆற்றலும் செயற்பாடும் மிக்க தலைவர் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பசி, தாகம், நீண்ட பயணம், மரணம் என்பவற்றையே தன்னால் வழங்க முடியும் என்றும் சுகமான நல்வாழ்வுக்கு உறுதியில்லை என்றும், தாய்நாட்டின் மீது உண்மையான பற்றுடையோர் தன்னோடு சேரலாம் எனக் கூறி அவ்வாறு தன்னுடன் இணைந்த போராளிகளைக் கொண்டு போர் நிகழ்த்தி இத்தாலியை ஒற்றுமை பூணவைத்தார் கரிபால்டி.

இன்று கழுத்தில் சயனற்றைக் கட்டிக்கொண்டு தம் தலைவர் ஆணையிட்டால் அதனை விழுங்கி மரணத்தை தழுவிக்கொள்ளவும் ஆயிரமாயிரம் மாவீரர்கள் அவர் பின் அணிவகுத்து நிற்பதும் அவர்களை மதிநுட்பமாக நடத்தி இன்று மாபெரும் வெற்றிகளைச் சுமந்து நிற்கும் எம் தலைவர் கரிபால்டியை விட அதிர்ஸ்ட சாலி என்றே கூறவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சமாதானம், பேச்சுவார்த்தை என்ற பெரும் அரசியல் இராஜதந்திர முறையை ஏற்படுத்தி இன்று சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரச்சனைக்குள் உள்வாங்கச் செய்து உலக சமூகத்தின் மத்தியில் பிரச்சனையை கையளித்துள்ளார். இந்த பெரும் நுற்பமான அணுகுமுறையை கண்ட மேற்குலக இராஜதந்திர அதிகாரிகள் வன்னியை வட்டமிட்டபடியே உள்ளனர். இதுவரை காலமும் உள்நாட்டுப்போர் என்று கூறிவந்த சிங்கள அரசின் கூக்குரல் இன்று நசுக்கப்பட்ட இரு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என அங்கீகாரிக்கப்பட்டுள்ளது.

இது எமது தலைவரின் மிக நுட்பமான இராஜதந்திர அணுகுமுறை. இன்றைய உலகின் போக்கிற்கு தம்மை மாற்றிக் கொண்ட ஓர் நிகழ்வு. அல்லது காய்நகர்த்தல் எனக் கூறிக் கொள்ளலாம். எனவே இன்று சர்வதேச மத்தியஸ்தம் என்ற பெயரில் எமது தேசத்தின் விடுதலை இயக்கத்தின் கோரிக்கை உலக சமூகத்திடம் ஆதரவு பெறத் தொடங்கியுள்ளது.

இந்த வெற்றிகளின் பின்னால் எம் தேசத்து மாவீரர்களின் கடும் உழைப்பும் தியாகமும் தலைவர் பிரபாகரனின் மதிநுற்ப வழிநடத்தலும் உள்ளது என்பது வெள்ளிடை மலை.

அதுவே அவரை இந்நூற்றாண்டின் இணையற்ற தலைவர்களில் ஒருவராக்கியது.
-யாரோ-

இரங்கல் பதாகைகளை அகற்றக் கூறிய இந்திய அமைச்சரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!!!




பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தமிழகத்தில் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த இந்திய மத்திய அமைச்சர் இளங்கோவனைக் கண்டித்து கோபியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோபி பேரூந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளர் கந்தசாமி, பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம இளங்கோவன், கொங்கு இளைஞர் பேரவையின் ஆறுமுகம் உள்ளிட்ட 30 பேர் கலந்து கொண்டனர்.

இளங்கோவனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதன் பின்னர் இளங்கோவன் கொடும்பாரியை தமிழின உணர்வாளர்கள் எரிக்க முயற்சித்தனர். அதனைக் காவல்துறையினர் தடுத்தனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கொடும்பாவி கொளுத்தியதாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
நன்றி>பதிவு.

Friday, November 23, 2007

தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது!!!

தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை:

"சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்தன. இதன் வழியே தமிழகமானது மக்கள் திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட களமாகியது.

அப்படி மக்கள் திரளாக்கப்பட்ட தமிழக அரசியலின் பலம் தான் தமிழீழ மக்களின் பலமும் கூட. இதனை உலகலாவிய அரசியல் யதார்த்தத்தில் வைத்துப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தமிழக மக்களை ஜனநாயக அலைக்குள் இழுத்து விட்டதில் அண்ணாவிற்கு மிகப்பெரும் பங்கு உண்டு. அந்நியர்களிடமும், மன்னர்களிடமும், பிரபுக்களிடமும் சிக்குண்டு இருந்த அரசியல் அதிகாரத்தை மக்களின் கைகளுக்கு மாற்றுவதற்கான பெயர் தான் தேசியம்.

மன்னர்களிடமோ, வம்சங்களிடமோ, எதேச்சதிகாரிகளிடமோ, இனவாதிகளிடமோ அரசியல் அதிகாரம் சிறைப்பட்டிருக்காது. அதை மக்களின் கைகளுக்கு உரியதாவதைத்தான் ஜனநாயகம் என்கின்றோம். அத்தகைய ஜனநாயகத்தை வாழ வைப்பதற்கான ஒரு வடிவமே தேசியம் என்பதாகும். ஆதலால் தேசியம் என்பது ஜனநாயகம் ஆகும்.

எங்கு ஜனநாயகம் இல்லையோ அங்கு தேசியம் இல்லை. அரசியல் அதிகாரம் சாமானியர்களுக்கு உரியது. மக்களே நாயகர்கள். இது தான் தேசியத்தின் அறைகூவல். இத்தகைய அறைகூவல் 1960களில் தமிழகத்தில் துடிப்புடன் எழுந்தது.

திராவிட இயக்கத்தின் எழுச்சி என்பதும் இத்தகைய தேவையின் வெளிப்பாடுதான் "சாமானியர்களின் தசாப்தம்" என்ற இந்த ஜனநாயக உள்ளடக்கத்தைத்தான் "திராவிட இயக்கம்" என்றதன் பெயரில் மக்கள் ஆதரித்தார்கள்.

இலங்கைத்தீவின் அரசியலும் அரசியல் தீர்மானங்களிலும்

தமிழ் பேசும் மக்களுக்கு பங்கில்லை என்ற போது,

தமது வாழ்நிலையை அவர்கள் தீர்மானிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது

சிங்கள இனவாதம் தனது இரும்புக்கரங்களை விரித்தபோது

ஜனநாயகத்தின் தேவையாய் தமிழ்பேசும் மக்கள் தேசிய வழியில் போராடப் புறப்பட்டது தவிர்க்கமுடியாத ஒரு வரலாற்று நிர்ப்பந்தமாகும்.

அதுவே ஜனநாயகத்திற்கான ஒரே ஒரு மூலமும் ஆகும்.

அரசு இனவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட போது உலகிலுள்ள அரசுகள் அரசு என்ற ரீதியில் சிங்கள இனவான அரசுடன் சமரசம் செய்யும் ஒரு நடைமுறையே உலக அரசியலின் பொதுப் போக்காய் அமைந்தது.

பனிப்போரின் பின் பின்னான உலக யதார்த்தம் மேலும் இந்நிலையைப் பலப்படுத்தி உள்ளன. உலகலாவிய பொருளாதார நலன்களுக்காக உலகிலுள்ள அரசுகள் எல்லாம் தம்மிடையே சமரசம் செய்து இலங்கை அரசுடனும் சமரசப்போக்கை நடைமுறையிற் பின்பற்றுகின்றன.

இந்நிலையில் தமிழீழ மக்களுக்கான பலம் உலக அரசுகள் என்ற கட்டமைப்புக்குள் இருக்க முடியாது. அரசுகளிடம் நீதி, நியாயம் என்பது இல்லை. மாறாக பொருளாதார, இராணுவ, அரசியல் நலன்களே உள்ளன. இத்தகைய நலன்களுக்காக எத்தகைய அநீதியுடனும் அரசுகள் ஒத்துழைக்கும்.

இந்த அடிப்டையில் இலங்கை அரசுடன் உலகிலுள்ள அரசுகள் ஒத்துழைக்கும் நிலையில் உள்ளன. மனித உரிமை என்ற ஒரு கவசத்தை போர்த்துக்கொண்டு உலகிலுள்ள அரசுகள் ராஜபக்ச அரசாங்கத்தை குறை கூறினாலும் பொருளாதார, இராணுவப் பரிமாணங்களில் உலகில் உள்ள அரசுகள் ராஜபக்சவுக்கு செயல்பூர்வ அர்த்தத்தில் துணை நிற்பதன் அடிப்படையும் இதுவே ஆகும்.

இதில் "அரசு", "அரசாங்கம்" என்ற பதங்களை அரசியல் விஞ்ஞான அர்த்தத்தில் பொருள் பிரித்து எடை போட வேண்டும்.

அதாவது உலகில் உள்ள அரசுகளுக்கு இலங்கை அரசு அவசியமானது. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பற்றி சில வசதியீனங்கள் உலகில் உள்ள சில அரசுகளுக்கு இருந்தாலும் அவைக்கு இலங்கை அரசு அவசியம் என்றதன் அடிப்படையில் தான் அத்தகைய அரசுகளும் ராஜபக்ச அரசாங்கத்திற்கு உதவும் நிலையில் உள்ளன.

இத்தகைய உலகலாவிய அரசுகளின் வியூகத்தை உடைப்பத்கான ஒரே ஒரு மூலோபாயம் தமிழகம் மட்டும் தான்.

முழு இந்தியாவிலுமே அதிகமாக ஜனத்திரள் அரசியலுக்கு பெரிதும் பழக்கப்பட்டிருக்கும் மக்களாய் தமிழக மக்கள் உள்ளனர்.

இது அரசியலில் சிறப்பானதும் முற்போக்கானதுமான அம்சமாகும்.

இத்தமிழக மக்களிடம் தமிழீழ மக்கள் பற்றிய நீதியின் பாலான இனமான உணர்வு பெரிதும் உண்டு.

சிங்கள உயர் குழாத்தின் இன ஒடுக்கு முறைக்கும் இனப் படுகொலைக்கும் எதிரான நீதியின் பாலான ஒரே ஒரு செயல்பூர்வக் குரலாய் அவர்கள் உள்ளனர்.

அத்தகைய ஜனத்திரளின் ஒருமித்த ஆதரவுதான் சர்வதேச அரங்கில் தமிழீழ மக்கள் பிரவேசிப்பதற்கான ஒரே ஒரு பாதையாகும்.

சென்னை திரண்டெழும் போது புதுடில்லி சென்னைக்குப் பணியும்.

புதுடில்லி பணியும் போது உலகம் புதுடில்லிக்கு தலைசாயும்.

இது தான் எளிமையான சூத்திரம்..

முதலில் இதனை முற்றிலும் விஞ்ஞான பூர்வமாக ஒரு கணம் விளக்குவோம்.

இராணுவ அர்த்தத்தில் இலங்கைத்தீவு ஓர் அரசாக இருப்பது இலாபம் என புதுடில்லி நினைக்கின்றது. ஆனால் அது ஒரு தவறான நினைப்பு என்பதை சிங்கள உயர் குழாத்தின் அரசியலை விளங்கிக் கொண்டோருக்குத் தெரியும்.

அது ஒரு புறமாக இருக்கட்டும்.

புதுடில்லி மேற்படி தவறாக புரிந்து கொண்டு இலங்கையின் "ஒருமைப்பாட்டை" ஆதரித்து உதவுகின்ற போதிலும் புதுடில்லியின் 40 நாடாளுமன்ற ஆசனங்களைக் கொண்ட சென்னை கிளர்ந்து எழும் போது அரசியல் நலனுக்காக புதுடில்லி சென்னைக்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

முதலாவதாக ஆறரைக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழகம் எழுச்சி பெறும் போது, அதுவும் ஜனத்திரள் அரசியலுக்கு பழக்கப்பட்ட தமிழகம் எழும்போது புதுடில்லியால் பணிவதை தவிர வேறு வழி இருக்க முடியாது.

இத்தகைய ஜனத்திரள் என்னும் பலத்தை தமிழகத்திற்கு திரட்டிக்கொடுத்தது தமிழகத்திற்கான அறிஞர் அண்ணாவின் பெருங்கொடையாகும்.

இரண்டாவது அம்சம் மத்தியில் 40 நாடாளுமன்ற ஆசனங்கள் இந்தியாவில் தனிக்கட்சி ஆட்சியின் காலம் ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. மாநிலக் கட்சிகளை அரவணைக்கின்ற கூட்டரசாங்கங்களே இனிமேல் பதவிக்கு வரலாம்.

இந்த வகையில் கூட்டரசாங்கத்தை அமைக்கக்கூடிய எந்த ஒரு முக்கிய கட்சியும் தமிழகத்தை பகைக்க மாட்டாது.

ஆதலால் தமிழக மக்கள் தான் தமிழீழ மக்களுக்கான இருதய சக்தி அதேவேளை தமிழக மக்களுக்கும் தமிழீழப் பிரதேசமே முதற்தர பாதுகாப்பு அரணாகும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் சிங்கள உயர்குழாத்து இலங்கை அரசு இந்திய அரசுக்கு எதிரான அரசுகளுடன் சோரம் போகும் இயல்பைக் கொண்டுள்ளது.

இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா காலத்தில் இருந்து இற்றை வரை இதனைத்தெளிவாகக் காணலாம்.

இலங்கையின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு என்ற தமிழீழப் பிரதேசம் தமிழ் மக்களின் கையில் இல்லை என்றாலும் சிங்கள உயர்குழாத்து இலகுவாகவே அந்நிய சக்திகளுக்கு அடிபணிந்து இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தெளிவாக கூட்டுச் சேரும்.

இதன் படி தமிழீழ மக்களின் பலம் குன்றினால் தமிழக மக்களின் பாதுகாப்பு முதலில் கெடுவதுடன் அதன் வழி முழு இந்திய தேசத்தின் பாதுகாப்பும் கெட்டுவிடும் ஆதலால் தமிழீழ மக்களின் இப் பிராந்தியத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு முக்கியமான கேந்திர மக்கள் என்பதை தமிழகமும் இந்திய தேசமும் கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம்.

பரந்த இந்தியாவோடு உலகிலுள்ள ஏனைய அரசுகளுக்கு பாரிய நலன்கள் உண்டு. ஆதலால் இந்திய அரசிற்குள்ளாகத்தான் அவை இலங்கைத் தீவை பார்க்க வேண்டிய நிர்ப்பந்தமும் உண்டு.

தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள எந்த ஒரு அரசும் தமிழீழ மக்களுற்கு ஆதரவு இல்லை என்பது வெளிப்படையானது.

ஆனால் தமிழகத்தின் ஆறரைக்கோடி மக்களைக் கொண்ட ஜனத்திரளின் முன் புதுடில்லி பணியும் போது முதலில் புதுடில்லியின் கூட்டணி அரசுடனும் தலைசாய்க்க தொடங்கும். அதனைத் தொடர்ந்து உலகில் ஏனைய அரசுகளும் தலைசாய்க்க முற்படும் இறுதியில் எஞ்சியிருக்கும் சில அரசுகளும் காலகதியில் தலைசாய்க்கும். இதுதான் யதார்த்தம்.

ஆதலால் தமிழீழ மக்களின் அனைத்து நலன்களுக்குமான திறவுகோல் சென்னையில்தான் உள்ளது.

அந்த தமிழக ஜனத்திரளின் ஆதரவே

உலகளாவிய அர்த்தத்தில் தமிழீழ ஜனநாயக நலனுக்கான திறவுகோலும் கூட..

தமிழீழ ஜனநாயக மீட்பிலிருந்தே சிங்கள மக்களுக்கான ஜனநாயக மீட்பும் உருவாகும்.

சிங்கள உயர்குழாத்தின் இனவாத அரசியலுக்கு முடிவு கட்டுவதன் மூலம்தான் பரந்துபட்ட சிங்கள மக்களின் ஜனநாயகமும் உருப்பெற முடியும்.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் கட்சி அரசியலுக்குள் தமிழீழ மக்கள் விழத்தேவையில்லை.

அவர்கள் தங்களின் கட்சி அரசியலை தாங்களே பார்த்துக் கொள்வார்கள். தமிழக மக்கள் எந்தக் கட்சியை பதவிக்கு கொண்டு வர விரும்புகிறார்களோ அது அவர்களின் தெரிவு. பதவிக்கு வருவோரை எம்மை ஆதரிக்குமாறு கோருவதும் அதற்காக அனைத்துக் கட்சிகளையும் கோரி நிற்பதையுமே தமிழீழ மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறையாகும்.

மக்கள் அலை எழும் போது கட்சிகள் மக்கள் அலைக்கு செவிசாய்க்கும்.

ஆதலால் தமிழீழ தேசியப் பிரச்சினையில் தமிழகக் கட்சி நிலைப்பாடுகளுக்கு அகப்படாது தமிழீழ கொள்கை நிலைப்பாட்டின் பேரில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவை கோரி நிற்பதே அவசியமான மூலோபாயமாகும்.

தமிழகத்தில் இப்போது ஓர் அலை எழத்தொடங்கியுள்ளது. அதனைப்பற்றிப் பிடிக்க வேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

முதலமைச்சர் தொடக்கம் இடதுசாரியக் கட்சிகள் உள்ளடக்கலாக சிறிய கட்சிகள் வரை இந்த ஆதரவு அலை எழுந்திருக்கின்றது. இது முழுத்தமிழக மக்கள் தழுவியதாக கட்சி பேதங்களுக்கும் அப்பால் பற்றிப் பரவக்கூடிய தொடக்கத்தை கொண்டுள்ளது.

இதனைத் தக்க வகையில் பயன்படுத்தவேண்டியது தமிழீழ மக்களின் பொறுப்பாகும்.

உலக அரசியல் ஒரே ஒரு அரசியல் பொருளாதார ஒழுங்குதான் இருக்கின்றது. அது உலகலாவிய ஏகாதிபத்தியத்தின் மையப்பொருளாதார ஒழுங்கு தான்.

உலகிலுள்ள அனைத்துப் பலம் வாய்ந்த பெரிய அரசுகளும் தமக்கிடையே இந்த முழு உலகத்தையும் வர்த்தக ஆதிக்க போட்டியின் நிமிர்த்தம் சந்தைகளாக பங்கு போட்டுள்ளன.

இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன்பு ஏகாதிபத்திய நாடுகளுக்கிடைய உலகம் நாடுகளாகப் பங்கு போடப்பட்டது போல தற்போது ஏகாதிபத்திய அரசுகளுக்கடையே உலகம் நாடுகளாக அன்றி சந்தைகளாக பங்கு போடப்பட்டுள்ளது.

ஆதலால் இன்று உலகளாவிய ரீதியில் வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் எந்த ஒரு நாடும் ஏகாதிபத்திய நாடுதான்.

உலகளாவிய ரீதியில் ஒரு நாடு தனது பண்டங்களை சந்தையிற் போட்டு வர்த்தக ஆதிக்கப் போட்டியில் ஈடுபடுமானால் அந்த நாடு எந்த நிறக்கொடியை கட்டியிருந்தாலும் அது செயல்பூர்வ அர்த்தத்தில் ஏகாதிபத்திய கொடி தான்.

இந்த வகையில் விதிவிலக்கின்றி வர்த்தக ஆதிக்கத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் ஓர் ஏகாதிபத்திய சந்தை மையக் கூட்டைக் கொண்டுள்ளன. ஆதலால் இத்தகைய அனைத்துப் பெரிய அரசுகளும் இலங்கை அரசுடன் அரசென்ற வகையில் சமரசத்தைக் கொண்டுள்ளன.

இந்தச் சமரசக்கூட்டில் சோசலிச நாடுகள் என்றும் முதலாளித்துவ நாடுகள் என்றும் வேறுபாடு இல்லை.

கொடியின் நிறம்தான் வேறு கொடித்துணிகளின் பண்பு ஒன்றுதான். ஆதலால் கற்பனாவாத அரசியலுக்கு வெளியே இரத்தமும் சதையுமாக அரசியலை யதார்த்த நிலையில் வைத்து மதிப்பிட்டு தமிழீழ மக்களின் தேவைக்குப் பொருத்தமான ஒரு யதார்த்த பூர்வ அணுகுமுறை அவசியம்.

மேற்படி பெரிய அரசுகளின் உலகலாவிய கூட்டுச் சமரசங்களுக்கு வெளியே தமிழக மக்களின் ஜனத்திரள் என்ற ஜனநாயகப் பலம் தான் அரசுகளின் சமரச ஒழுங்கிற்கு வெளியே தமிழீழ மக்களின் நலன்களை உலகப்பரப்பில் ஸ்தாபிக்க உதவும்.

உண்மையில் தமிழீழ மக்களின் போராட்டமானது தேசிய வடிவிலான ஜனநாயக மீட்புப் போராட்டமாகும்.

தமிழீழ மக்களின் நலன்கள் சென்னை - புதுடில்லி - உலகம் என்ற ஒரே ஒரு பாதையை மட்டுமே கொண்டிருக்கின்றது.

இலங்கை அரசு தமிழரை சர்வதேச அரசுகளால் சுற்றிவளைத்தே ஒடுக்குகின்றது.

அது இராணுவ பொருளாதார உதவிகளை ஒருபுறம் அமெரிக்காவிடம் இருந்தும் மறுபுறம் சீனாவிடம் இருந்தும் பெறுகின்றது. அப்படியே ஒருபுறம் இந்தியாவிடம் இருந்தும் மறுபுறம் பாகிஸ்தானிடம் இருந்தும் பெறுகிறது.

இப்படி கொள்கை, கொடி, குடை வேறுபாடின்றி தமிழருக்கு எதிராக அனைத்து நாடுகளின் உதவிகளையும் இலங்கை அரசு பெறுகிறது.

தேசிய இனப்பிரச்சனை என்பது ஓர் உள்நாட்டுப் பிரச்சனை அல்ல. அது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும்.

ஆகையால் தமிழீழப் பிரச்சனையை சர்வதேசப் பரிமானத்தால் மட்டுமே தீர்க்க முடியும். தமிழீழ பிரச்சனையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை சென்னை - புதுடில்லி- உலகம் என மட்டுமே அமைய முடியும் என்று மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
நன்றி>புதினம்.

Thursday, November 22, 2007

அனுராதபுர தாக்குதல் ஒளிப்படம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொடைப் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்ட அநுராதபுரம் எல்லாளன் படை நடவடிக்கை ஒளிப்பதிவு.






தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது சிறிலங்கா!!! We Wish You a Merry Christmas - U.S Gift to Ealam Tamils.



தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை காலை ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச எழுப்பியெ கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

நிமல் சிறிபால டி சில்வா கூறியதாவது:

அமெரிக்காவில் கடந்த 15 ஆம் நாள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கமும் அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. அரசாங்கத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறுகளை அந்நிறுவனங்கள் ஏற்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
நன்றி>புதினம்,யாழ்.காம்.

Wednesday, November 21, 2007

துக்ளக் வாரப் பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு!!!


ஈழத் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழுதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்திரிகைகள் அனைத்தையும் வீதியில் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர்.

அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர்.
நன்றி>பதிவு.

சுடரேற்றி அஞ்சலி செய்வோம் வாருங்கள்!!

நிலத்துக்குள் எங்கள் நிலவுகளைப் பாருங்கள்! சொந்தமென... நாங்கள் சுடரேற்றி அஞ்சலி செய்வோம் வாருங்கள்!!

சுடரேற்ற இங்கே அழுத்தவும்.
http://karthikai27.com/

கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்!!!

கொழும்பில் பாகிஸ்தானின் இரு யுத்தக் கப்பல்கள்: கடற்பாதுகாப்பு குறித்து இரு தரப்பும் ஆராய்வு!!!

பாகிஸ்தானிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்கள், கொழும்பு துறைமுக கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளன.

சாஜஹான், நாசார் ஆகிய இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும், எரிபொருள் நிரப்புவதற்காகவே கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதாக, சிறீலங்கா அரசாங்கம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து கருத்துரைத்திருக்கும் சிறீலங்கா கடற்படை தளபதி,

இரு நாட்டுக் கடற்படையினருக்கும் மத்தியில் நல்லெண்ணத்தையும், உறவையும் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கொழும்பு துறைமுகத்திற்கு இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களும் வருகை தந்ததாகவும்,

பாகிஸ்தானுடைய கடற் படையினருடன் போர் ஒத்திகைகளில் ஈடுபடும் எண்ணம், தமது கடற்படையினருக்கு கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இற்றைவரைக்கும் இந்திய - அமெரிகக் கடறப் டைகளுடன் மட்டும் தமது கடற்படையினர் போர் ஒத்திகைகளை மேற்கொண்டிருந்ததாகவும், இந்த நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும், சிறீலங்கா கடற்படை தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, இரு பாகிஸ்தானிய யுத்தக் கப்பல்களில் பயணிதத் கடற்படை அதிகாரிகள், இன்று சிறீலங்கா கடற்படை தளபதிகளை சந்தித்து, கடற் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

பாகிஸ்தானுக்குச் சொந்தமான இரண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்ததைத் தொடர்ந்து. பலவேறு சந்தேகங்கள் படைத்துறை வல்லுனர்களால் வெளியிடப்பட்டு வருகின்றன.

எரிபொருள் நிரப்புவதற்காகவே பாகிஸ்தானின் இரண்டு கப்பல்கள் தமது துறைமுகத்தில் தரித்ததாக சிறீலங்கா கடற்படைத் தளபதி கொழும்பில் கூறியுள்ள போதிலும், அதனை நம்ப முடியாது இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களைப் பகிரங்கமாகப் பெற்றுக்கொண்டால் இந்தியாவுடன் முரண்பட வேண்டியநிலை ஏற்படும் என்பதால், சிறீலங்கா அரசு இரகசிய ஆயுதக் கொள்வனவை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
நன்றி>பதிவு.

Sunday, November 18, 2007

புலிகளின் தமிழீழ பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவு?


தமிழீழ விடுதலைப் புலிகளின் "தமிழீழ" சுதந்திரப் பிரகடனத்துக்கு எரித்திரியா ஆதரவளிக்கக் கூடும் என்று சிறிலங்கா அச்சமடைந்துள்ளதாக தெரிகிறது.

எரித்திரியா ஆதரவளித்துவிடக் கூடாது என்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக திடீரென கடந்த புதன்கிழமை எரித்திரியாவுக்கான சிறிலங்கா தூதரகம் அமைக்க சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எரித்திரியாவுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக சிறிலங்கா கருதி வருகிறது.

எத்தியோப்பியாவிலிருந்து 1990-களின் மத்தியில் எரித்திரியா சுதந்திரப் பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி>புதினம்
தமிழீழம் பற்றி அறிய,
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D


Friday, November 16, 2007

குண்டுமணி

குண்டுமணி

தமிழர் புணர்வாழ்வு கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது!!!

த.பு.கழகத்தின் பண முடக்கம் தமிழர்களுக்கு எதிரானது அல்லவாம் - பிளேக் கூறுகிறார்
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிதி முடக்கம் தமிழ் மக்களிற்கு எதிரான செயலல்ல என, சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் புதிய விளக்கமளித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சென்றடைவதைத் தடுப்பதற்கே தமது அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும், இதனை தமிழ் மக்களிற்கு எதிரான நடவடிக்கையாகக் கொள்ள வேண்டாம் எனவும், நிதி முடக்கம் தொடர்பாக இன்று கேட்டபோது அவர் கூறினார்.

அமெரிக்கத் தூதுவரின் இந்தக்கூற்று தொடர்பாக கருத்துரைத்த கொழும்பின் பிரபல ஆய்வாளர் ஒருவர், தமிழ் மக்களிற்கான பிரதான மனிதநேய அமைப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இயங்கிவரும் நிலையில், பிளேக்கின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனச்சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு, உள்நாட்டு மனிதநேய அமைப்புகள் பணியாற்ற முடியாத பல இடங்களில் தமிழ் மக்களிற்கான பணியை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் ஆற்றி வருகின்றது.

இதேவேளை, இனப்பிரச்சினைக்கான தீர்வை சமாதானப் பேச்சுவார்த்தையின் மூலமே காண முடியுமெனவும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் இன்று மீண்டும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண முடியுமெனக்கூறும் அமெரிக்கத் தூதுவர், விடுதலைப் புலிகளின் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்டபோது எந்தவித கண்டனத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி>பதிவு.

Wednesday, November 14, 2007

இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும்: -குமுதம்-

இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.
குமுதம் வார இதழின் ஆசிரியர் தலையங்கம்:

போர் என்ற அறிவிப்பு மட்டும்தான் வெளிப்படையாக இல்லை. ஆனால் புகை மண்டலம் எழுந்து அடங்குகிறது. உயிர்கள் பொசுங்கும் நெடியடிக்கிறது.

அனுராதபுரத்தில் ஒக்ரோபர் மாதத்தில் நடந்த தாக்குதலின் போது உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் சடலங்களைக்கூட அகௌரவப்படுத்தி அவர்களுடைய ஆடைகளை அப்புறப்படுத்தி, நிர்வாணமாக்கிய கொடூரத்தை இலங்கை இராணுவம் செய்ததைக் கண்ட தமிழ் நெஞ்சங்கள் பதறின.

சில நாட்களுக்குள் அதிகாலை வேளையில் வான் வழித்தாக்குதல் நடத்தி, தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளரான தமிழ்ச்செல்வனையும், உடனிருந்த தளபதிகள் ஐந்து பேரையும் "சமாதானப் பகுதி"யில் படுகொலை செய்திருக்கிறது இலங்கை இராணுவம்.

தமிழ்ச்செல்வனின் உயிரிழப்பை அமைதியின் மீது விழுந்த இடியாக அறிவித்திருக்கிறது புலிகள் இயக்கம். இதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் போர் வலுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன.

சமரச முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து போர் நீடித்தால், அதிகம் பாதிக்கப்படப்போவது, ஏற்கெனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைத் தமிழர்கள்தான். சிக்கல் முற்றினால் அவர்கள் அகதிகளாக புகலிடம் தேடி வரப்போவதும் நம்மிடம்தான்.

இந்திய அரசு இக்கட்டான இந்த நிலையிலாவது அங்கே சமாதானம் உருவாகச் சில நிர்ப்பந்தங்களை உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்ததைக் கூட, உள்ளூர் அரசியலாக்கும் குறுகிய வட்டத்திலிருந்து இங்குள்ள கட்சிகள் வெளிவர வேண்டும்.

ஒன்றே ஒன்றை மட்டும் அனைவரும் உணர்ந்து ஒன்று சேர வேண்டும் அங்கே துடிப்பது நமது உயிர். தமிழ் உயிர். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்தின் புன்னகை

- இன்குலாப்

மறுகரையில்
தேற்றுதலின் தணியாத விசும்பல்
கேட்கும்
மரத்துப் போகாத செவிகளில்.
மாவீரர் விரும்பாத ஒப்பாரி
காலம் காலமாய்
மக்களின் மனசிலிருக்கிறது.
இன்றென் சொல்லும்
கண்ணீரில் நனையட்டும்!
பகைநடந்ததற்குச் சாட்சியங்களான
கருகிய பனை தென்னை ஊடாக
நாங்களும் நடந்திருந்தோம்.
சிதைந்து கிடந்த டாங்கியும்
சிதறிக் கிடந்த ராக்கெட் கூடுளும்
பிணமாய் மிதக்கும் எதிரியின் கப்பலும்
முடிந்த யுத்தத்தின் மிச்சங்களாகுமோ?
கண்ணி வெடிகளுக்குப் பக்கத்திலேயே
புதைந்து கிடக்கும் விதைகள்
பசுமையாய் முளைவிடும்
என்ற
எல்லோருக்குமான எனது நம்பிக்கையும்
துளிர்க்குமோ?
கருகுமோ?
உப்பு மிளகாய் அரிசி மருந்துகூட
ஆயுதமாய்த் தடைப்பட்ட சாலைகளில்
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும்
அமைதிக்கான கோரிக்கை
எழுந்து நிற்குமோ?
வீழாது நடக்குமோ?
அசோகச் சக்கரம்
இம்முறை தடம்புரளாது
என்று
இக்கரையும் உலகமும் எதிர்பார்த்திருந்த
காலத்தின் நடுநாட்களில்
நாங்களும் சென்றுவந்தோம்.
தோழமையில் தொடர்ந்த தம்பிகளின் நிழலில்
எங்கள்
கவிதையும் உரையும், கனவும், பாட்டும்
ஒருகண் தொலைய
எஞ்சிய மறுகண்
உலகுக்கே சுடர்வதுபோல் ஒளிர்ந்ததையும்
முடமான கையும் காலும்
விடுதலைக்குத் தோள்தர உயர்ந்ததையும்
இத்தனை இழப்புகளுக்குப் பிறகும்
இவ் வீராங்கனைகளும் வீரர்களும்
மக்களும்
தளை உடைத்த வாழ்வுக்கு
வேட்கைகொண்டு நோக்கியதையும்
ஆயுதம் ஏந்திய கைகளில்
அன்பின் மகரந்தம் மணந்ததையும்
நெஞ்சில் சுமந்து
இன்றுவரை காக்கிறோம்.
மரணத்தைக் கழுத்தில் தரித்த
ஒவ்வொருவர் முகத்திலும்
வாழ்வுக்கான நேசம் இருந்தது!
எங்களுக்குக் காவலாய் இருந்த
வீமனும்
தம்பிகளும்
பேசியதைவிடச் சிரித்தது அதிகம்.
வரவேற்றுச்
சிரித்தபடியே விடைகொடுத்தனுப்பிய
தமிழ்ச்செல்வனின்
நீட்டிய கைகளில்
நிறைய இருந்தது அவரின் நீங்காத புன்னகை.
காயம்பட்ட ஈழத்தைப்
பார்த்துத் திரும்பிய
கண்ணிலும் மனசிலும்
காயம் படாதிருந்தன
அந்தப் புன்னகைகள்!
தேசத்தின் குரல் என்றார்
ஆண்டன் பாலசிங்கத்தை
தேசத்தின் புன்னகை
சுப. தமிழ்ச்செல்வன்!
பேறுகால உதிரப் பெருக்கின்
சூட்டுடன்
நனைகிறது தமிழ்ஈழம்
பொறுத்தாட்டும் தம்பியின் கைகளில்
தேசத்தின் குரல் மீண்டும் கேட்கும்...
திரும்ப மலரும்
தேசத்தின் புன்னகை!

-தென் செய்தி

Tuesday, November 13, 2007

போரை நிறுத்த கைகள் இணையட்டும்!

-ஜூனியர் விகடன்-

ஜென்ராம்

"அவர் மிகச் சிறந்த தேசபக்தர்; அற்புதமான மனித நேயம் மிக்கவர்; எங்களுடைய கெழுதகை நண்பர். இதெல்லாம் அவர் உண்மையில் இறந்து விட்டார் என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு மட்டுமே பொருந்துபவை" என்கிறார் அறிஞர் வால்டேர். அவர் வாழும் காலத்தில் வெளியான பல இரங்கல் செய்திகளைப் பகடி செய்யும் விதத்தில் வால் டேர் இப்படிக் கூறியிருக்கக்கூடும். அது வெறும் கிண்டல் மட்டும்தானா? அந்தக் கூற்றில் உண்மை இல்லையா? ஒரு சமூகமும் அரசாங்கமும் ஒரு மனிதனை எப்போது அங்கீகரித்து கௌரவம் அளிக்கும்?

"வாழ்ந்து பிணமானால் உன் போன்றோரை

பிணமாக வாழ்ந்தால் என் போன்றோரை’’ "

என்று மகாகவி பாரதியை நோக்கி கவிஞர் இன்குலாப் சொல்வதை நாம் இந்தக் கேள்விக்குப் பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.

சிறப்பான பணிகள் பலவற்றைச் செய்த சிலருக்கு அவர்கள் வாழும் காலத்தில் உரிய அங்கீகாரம் கிடைத் திருக்காது. அதிகாரத்தால் அவர்கள் தொடர்ந்து விரட்டப்பட்டிருப்பார்கள்; சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டிருப்பார்கள். வேறு சிலருடைய வாழ்க்கை பல சர்ச்சைகளுக்குரியதாக இருந்திருக்கலாம். அவர்களுடைய செயல்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால், மரணத்துக்குப் பிறகு எல்லோருமே திருவுருவாக்கப்படுகிறார்கள��
. ஒருவேளை அவர்கள் அவ்வாறு போற்றப்படவில்லை என்றாலும்கூட, அவர்களில் பெரும்பாலானவர்கள் மீது கடுமையான நேரடி விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை. இந்த நடைமுறை ஒரு ‘நாகரிகமாக’ நம் சமூகத்தில் பின்பற்றப்படுகிறது. அது சரியா தவறா என்பது விவாதத்துக்குரிய வேறு விஷயம்!

ஒரு மனிதன் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் அவனுக்கு இரங்கல் தெரிவிப்பதுகூட ஒரு அரசியல் சர்ச்சை யாக தமிழகத்தில் உருவெடுத்திருப்பது வருத்தமளிக்கிறது. விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டதற்கு இரங்கல் தெரிவித்து தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு கவிதை எழுதினார். இந்தக் கவிதையே சர்ச்சையின் மையமாக இருக்கிறது. இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவருடைய மறைவுக்கு ஒரு மாநில முதல்வர் அஞ்சலி செலுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும், அதனால் தமிழக அரசு கலைக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரினார்.

கருணாநிதியின் கவிதையில் ஆட்சேபகரமான வார்த்தைகளோ இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான சொற்களோ எதுவும் இல்லை. உண்மையில் அவருடைய கவிதை தமிழ்ச்செல்வன் மீது கொடூரமான தாக்குதலை நடத்திய இலங்கை ராணுவத்தைக்கூட கண்டிக்கவில்லை. ஒரு நாட்டின் மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு அண்டை நாட்டு ராணுவத்தை அவர் பகிரங்கமாக கண்டனம் செய்தால், அவரை எதிர்த்து அரசியல் நடத்துகிறவர்களின் கையில் அந்தக் கண்டனமே ஓர் ஆயுதமாக சிக்கிவிடக்கூடும். இந்த எச்சரிக்கை உணர்வை அந்தக் கவிதை வரிகளில் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

தமிழக அரசியலில் மிகவும் மூத்த தலைவரான கருணாநிதியிடம் இருந்து இன்னும் வேகமான எதிர்வினையைத் தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்த்திருக்கக்

கூடும். இந்தக் கவிதை அவர்களுக்கு சிறிது ஏமாற்றம் அளித்திருக்கலாம். சாதாரண மக்களின் பார்வையில் இந்தக் கவிதை இயற்கை மரணம் அடைந்த ஒருவருக்கு இரங்கல் தெரிவித்து எழுதப்பட்டதைப் போலவே தோற்ற மளிக்கும். இருந்தபோதிலும் இதை எழுதியதற்காக ஜெயலலிதா, கருணா நிதியைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஆனால், தமிழக அரசைக் கலைக்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஓர் அரசை ஆட்சியில் அமர்த்துவதோ, பதவியில் இருந்து இறக்குவதோ மக்களின் உரிமை. இதுபோன்ற வலுவில்லாத காரணங்களுக்காக அடிக்கடி மாநில ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் தி.மு.க. ஆட்சி வலுப்பெறுவதற்கே ஜெயலலிதா உதவுகிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஜெயலலிதாவுக்கு கருணாநிதி அளித்த பதிலும் ஏமாற்றம் அளிக்கிறது. ‘இலங்கையில் கொல்லப்பட்டது தமிழன். என் உடலிலும் தமிழ் ரத்தம் ஓடுகிறது. எனவே, நான் இரங்கல் தெரிவித்தேன்’ என்று அவர் கூறியிருக்கும் பதில் உள்ளூர் அரசியலை மனதில்கொண்டு சொல்லப்பட்டதாகவே இருக்கிறது.

தமிழ்ச்செல்வனின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிப்பதற்கு ஒருவருடைய உடலில் தமிழ் ரத்தம் ஓடவேண்டும் என்பதில்லை. நார்வே உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உலக மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்து கிறார்கள். இலங்கையில் சிங்களர், தமிழர் என்று இரு தேசிய இனங்கள் இருக்கின்றன. இவர்களில் பெரும்பான்மையாக இருக்கக் கூடிய சிங்களர் தலைமை, சிறுபான்மை இனத்தை ஒடுக்குகிறது. இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து சர்வதேச அரங்கில் கருத்துத் தெரிவிப்பதற்கு ஒருவர் அந்த ஒடுக்கப்படும் இனத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அந்த அடிப்படையில் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் அனைவரும் தமிழர்களாகவோ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. விடுதலைப்புலிகளின் கடந்தகால தவறுகளை விமர்சிப்பவர்கள்கூட சிங்களப் பேரினவாத எதிர்ப்பின் அடையாளமாக தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவிக்கலாம். அது வேறு; இந்திய அரசியல் வேறு.

ஆனால், கருணாநிதியின் இரங்கல் செய்தியைக் காங்கிரஸ் கட்சி, ‘அது கருணாநிதியின் சொந்தக் கருத்து’ என்கிறது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ‘‘ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த விடுதலைப்புலிகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம்’’ என்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இலங்கை அரசுக்கு ரேடார்களையும் ஆயுதங்களையும் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இலங்கையின் தமிழர்கள் வாழும் பகுதியில் நாள்தோறும் செத்து மடிகின்ற மனித உயிர்களைக் காப்பதற்காக உணவுப் பொருட்களையும் மருந்து மாத்திரைகளையும் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்பும் நெடுமாறனின் முயற்சிகளுக்கு மத்திய அரசு அனுமதி மறுக்கிறது. விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசிய வைகோவைக் கைதுசெய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள்.

இலங்கை அரசுக்கு அல்லது விடுதலைப்புலிகளுக்கு அளிக்கும் ஆதரவு என்ற ஒற்றைச் சிக்கலுடன் இந்திய அல்லது தமிழக அரசியல் முடிந்து விடுவதில்லை. இதை நன்றாக உணர்ந்திருப்பதால்தான் தி.மு.க&வும், பா.ம.க&வும் இலங்கை அரசுக்கு உதவும் காங்கிரஸ§டன் கூட்டணியில் இருக்கின்றன. அதைப்போலவே வைகோவும் விடுதலைப்புலிகளை எதிர்க்கும் ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருக்கிறார். காங்கிரஸ§டன் கருணாநிதி எப்படி இருக்கிறார் என்றோ ஜெயலலிதாவுடன் வைகோ எப்படி கூட்டணியில் இருக்கிறார் என்றோ பிற அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்ப இயலாது. யாரும் யாருக்கு எதிராகவும் சந்தர்ப்பவாதி என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாது. அப்படிப்பட்ட முயற்சிகளில் யாரேனும் இறங்கினால், அது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவதைப் போன்றது.

ஒவ்வொரு கட்சியும் தம்முடைய திட்டத்தை நிறைவேற்று வதற்கு இந்தியாவில் நிலவும் அரசியல் சூழலின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஆரோக்கியமான அரசியல். மாறாக இலங்கையில் நடைபெறும் போரையும் இழப்புகளையும் வைத்து இங்கே அரசியல் செய்வது முறையல்ல. மாறாக, அங்கு நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நிர்ப்பந்தங்களை இங்குள்ள அரசியல் கட்சிகளும் இந்திய அரசும் உருவாக்கலாம். ஏனென்றால், போர்க்களம் மரணங்கள் நிரம்பியது. அது கோழையின் இறப்பா வீரனின் சாவா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும், மரணம் துயரமானது!

-ஜூனியர் விகடன்

அவசிய அறிக்கை!

11.11.2007 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை.

இவ்வார அவசிய அறிக்கையில்இராணுவவியல், அரசியல், இராஜதந்திரவியல் என முப்பரிமாண ஆற்றல் மிக்கவனாய் தலைவாரால் செதுக்கப்பட்ட பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றிய பதிவு.






Monday, November 12, 2007

சென்னையில் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 பேர் கைது!!!

படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.











பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மன்றோ சிலை அருகே இன்று திங்கட்கிழமை மாலை 4:30 மணிக்கு பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்டோர் தலைமையில் ம.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனையடுத்து

ஆதரிப்போம் ஆதரிப்போம்
தமிழீழ விடுதலைப் புலிகளை
ஆதரிப்போம் ஆதரிப்போம்

வீரவணக்கம் வீரவணக்கம்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம் வீரவணக்கம்

என்பது உள்ளிட்ட முழக்கங்களை வைகோ எழுப்ப தொண்டர்களும் முழக்கமிட்டு ஊர்வலமாக நகர முயற்சித்தனர்.

அப்போது ம.தி.மு.க. நிர்வாகி வேளச்சேரி மணிமாறனை காவல்துறை தாக்கியதாக வைகோ குற்றம்சாட்டி முழக்கமிட்டார்.

இதனைத் தொடர்ந்து வைகோவிடமிருந்த ஒலிபெருக்கியை காவல்துறை பறித்தனர். அதனால் ஆவேசமடைந்த வைகோ, ஒலிபெருக்கியை பிடுங்கிய உங்களால் என் தொண்டையை பிடுங்க முடியுமா? என்று காவல்துறையினரிடம் கூறி ஒலிபெருக்கி இல்லாமல் முழக்கமிட்டார்.

அதன் பின்னர் வைகோ, பழ.நெடுமாறன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் மணியரசன், ஓவியர் வீரசந்தானம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் மற்றும் அங்கு திரண்டிருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் மாலை 5:20 மணியளவில் கைது செய்தனர்.

அப்போது, இந்திய மத்திய அரசைக் கண்டித்தும் தமிழக காவல்துறையைக் கண்டித்தும் வைகோ முழக்கங்களை எழுப்ப திரண்டிருந்தோரும் உரத்த குரலில் அந்த முழக்கங்களை எழுப்பினர்.

மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் செயலாளர் வே.ஆனைமுத்து, கவிஞர் இன்குலாப் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

14 பெண்கள் உள்ளிட்ட கைது செய்யப்பட்ட 346 பேரும் இன்று இரவு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நன்றி>புதினம்

Sunday, November 11, 2007

"உன் கனவு நனவாகும்... அதுவரை தூங்காமல் இரு!"

-ஆனந்த விகடன்-

"உங்களால் இப்போது ஆயுதம் ஏந்திப் போராட முடியுமா?"

"போராடாமல் புலியாக இருக்க முடியாது. மரணம் வராது என்கிற உத்திரவாதத்தோடு எந்த ஈழத் தமிழனும் போராட வருவதில்லை; வரவும் மாட்டார்கள்!"

இதயத்துக்கு நெருக்கமான தனது இரண்டு கரங்களையும் அடுத்தடுத்து இழந்த துயரத்தில் தவிக்கிறது இயக்கம். அண்ணன் ஆன்டனும் இல்லை; தம்பி தமிழும் இப்போது இல்லை!

இருபது ஆண்டுகளாக ஈழத் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட, 'டி.எஸ்.அண்ணா' என ஈழ மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்ச்செல்வன், இலங்கை ராணுவத்-தின் குண்டுவீச்சில் மரணமடைந்திருக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவரான சுப.தமிழ்ச்செல்வன், 80&களில் களம் இறங்கிய புலி. யாழ்ப்பாணத்தில் உள்ள சாவகச்சேரி மட்டுவில் பிறந்தவர்.

அணி அணியாக ஈழப் போராளிகளைத் தேர்ந்தெடுத்து, இந்திய அரசு ஆயுதப் பயிற்சி கொடுத்தபோது இணைந்தவர் தமிழ்ச் செல்வன். புலிகளின் நான்காவது படையணியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் பயிற்சி எடுத்துக்கொண்டு, பிரபாகரனின் தனி இணைப்பாளராக, தகவல் இணைப்பாளராகப் பணியாற்றி யவர்.

1987&ல் ஈழத்துக்குத் திரும்பிய தமிழ்ச்செல்வன், உண்ணா விரதம் இருந்து உயிர் நீத்த திலீபனுக்-குப் பிறகு யாழ் மாவட்டச் சிறப்புத் -தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவம் இலங்கையில் தங்கியிருந்த காலத்-தில், அப்போதைய அதிபரான பிரேமதாசாவுடன் புலிகளின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய பரமு மூர்த்தி, தமிழ்ச்செல்வனின் அண்ணன். தம்பி தமிழ்ச் செல்வன் அரசியல் துறைப் பொறுப்பாளராக உயர்ந்த பிறகும் பரமு மூர்த்தி இன்றும் ஒரு போராளி-யாக இருப்பது, விசித்திர-மான தியாகம்தான்.

பொதுவாகச் சிரித்த முகமாக வளைய வரும் தமிழ்ச்செல்வன், யுத்த களத்தில் முழு பலத்தோடு போராடும் புலி. 'ஓயாத அலைகள் - மூன்று' என்ற பெயருடன் வன்னிப் பெரு நில மீட்புப் போர் ஓர் உதாரணம்! புலிகளின் போரியல் வரலாற்றிலேயே மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த யுத்தம் அது. சில நூறு போராளிகள் சேர்ந்து, இலங்கை அரசின் 20,000 ராணுவத்தினரைச் சுற்றி வளைத்துத் தாக்கி துவம்சம் செய்த போரில் கட்டளைத் தளபதி-யாகச் செயல்பட்டவர் சுப.தமிழ்ச்-செல்வன். அந்தப் போரில் ஒரு பெண் போராளியாக இருந்து களம் கண்டவர் அவரின் காதல் மனைவி.

நடனம், புகைப்படம், ஓவியம் எனக் கலைகளின் மீதான காதல்-தான் தமிழ்ச்செல்வனையும் அந்தப் பெண் போராளியையும் இணைத்தது. ஒன்பது வருட காதல் வாழ்க்கைக்குச் சான்றாக எட்டு வயதில் ஒரு மகளும், மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். குடும்ப வாழ்க்கை யில் இணைந்தாலும், குழந்தை-களைப் பெற்றுக்கொண்டாலும், அவரின் மனைவி இப்போதும் போராளியாகக் களத்தில் நின்று போராடுகிறார். புலிகளின் தொலைக்-காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருக்கிறார்.

பூநகரியில் உள்ள இலங்கைப் படைத்தளத்தை 'தவளைப் பாய்ச் சல்' என்ற பெயரில் புலிகள் தாக்கிய-போது, அதில் தளபதியாக நின்று போராடிய தமிழ்ச்செல்வனின் கால்கள் சிதைந்தன. உயிருக்குப் போராடிய அவரைக் காப்பாற்றியது புலிகளின் மருத்துவப் பிரிவு. "ஆரம்ப காலத்தில் சின்ன காயங்களுக்குக் கட்டுப் போடக் கூட நாங்கள் தமிழ்நாட்டுக்-குப் போக வேண்டியிருந்தது. போகிற வழி-யிலேயே எத்தனையோ பேர் கடலில் வீர-மரணம் அடைந்திருக்கிறார்கள்" என்ற தமிழ்ச்செல்வன், புலிகளின் மருத்துவத் துறையை நவீனமய-மாக்கிக் காட்டினார்.

தமிழ்ச்செல்வன் கொல்லப் பட்ட வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் இரவு, கிளிநொச்சியில் உள்ள அவரது இயக்க வசிப்பிட மான கனகாம்பிகைக் குளத்துக்கு அருகில் உள்ள வீட்டில்தான் தங்கி யிருந்தார். புலிகளின் அரசியல் துறை நடுவப் பணியகம் அது. எப்போதும் தாக்குதல் ஆபத்து உள்ள இடமாகக் கருதப்படுவதால், அவசர அவசியமில்லாமல் புலி களின் தளபதிகள் யாரும் அங்கு செல்வதில்லை.

வெள்ளிக்கிழமை குழந்தை களையும் மனைவியையும் பார்த்து-விட்டுத் தனது மெய்க் காப்பாளர்-களுடன் சென்ற தமிழ்ச்செல்வன், வழக்கமாகத் தவிர்க்கும் அந்தக் குடியிருப்பிலேயே ஏனோ அன்று தங்கினார். வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்தரை மணிக்கு அந்த இடத்தின் மீது சில வேவு விமானங்கள் பறக்க, சந்தேக மடைந்த மெய்க்காப்பாளர்கள் சுதாரிப்பதற்குள் பொழிந்தது குண்டு மழை. அவசர அவசரமாகப் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல முயன்ற-போது, இருபது நிமிட இடைவெளியில், காலை ஆறு மணிக்கு அவர் பதுங்கியிருந்த பதுங்குகுழி மீதே குண்டுகள் வீசப்பட, ஐந்து மெய்க்காப்பாளர்களுடன் இறந்து போனார் தமிழ்ச்செல்வன்.

புலிகளின் தத்துவப் பேராசான் ஆன்டன் பாலசிங்கம் உடல்நலம் குன்றிய பிறகு, அந்த இடத்தை இட்டு நிரப்பக் கிடைத்த ஆலோசக-ராக இருந்தவரின் இழப்பு, இட்டு நிரப்ப முடியாதது.

இப்போது புலிகளின் முன்னால் உள்ள முக்கியமான கேள்வி... ‘தமிழ்ச்செல்வனைக் குறிவைத்துச் சுட்ட இலங்கை அரசுக்கு, உள்ளுக்-குள்ளிருந்தே துப்புக் கொடுத்தது யார்?’

தமிழ்ச்செல்வனைப் பற்றிய யாழ் அகத்தியனின் கவிதை ஒன்று அவரது மரணத்தைப் பாடுகிறது இப்படி...

'உன் கல்லறையில் நீ
தூங்கு முன் நீ கண்ட
தமிழீழக் கனவு நனவாகும்
அதுவரை நீ தூங்காமல் இரு!'

டி.அருள்எழிலன்

-ஆனந்த விகடன்,

Saturday, November 10, 2007

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்?

லண்டன் தடுப்பு முகாமில் வைத்து கருணா நையப்புடைக்கப்பட்டார்? உடலில் கண்டல், கீறல் காயங்களாம்!

லண்டனில் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கருணா அந்தத் தடுப்புக் காவலில் இருந்த வேறு இலங்கைத் தமிழர்களின் குழு ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்.

இதனால் உடலில் கண்டல் மற்றும் கீறல் காயங்களுடன் வேறு பாதுகாப்பான தடுப்புக்காவல் பிரிவுக்கு அவர் மாற்றப் பட்டிருக்கின்றார்.

இவ்வாறு கொழும்பு சிங்கள நாளிதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டிருக்கின் றது.
சிங்களப்பெயர் ஒன்றுடனேயே கருணா லண்டனில் கைதானார். பின்னர் லண்ட னில் தஞ்சம் கோரியோரைத் தடுத்து வைத் திருக்கும் கேம்பிரிட்ஜ் தடுப்பு முகாமில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அச்சமயமே அங்கு தடுத்து வைக்கப் பட்டிருந்த பிற இலங்கைத் தமிழர்களின் குழு ஒன்றினால் அவர் நையப்புடைக்கப் பட்டிருக்கின்றார் என லண்டன் நகர வட் டாரங்கள் கூறுகின்றன.

இதனையடுத்து முகாமின் வதிவிட டாக்டருக்குப் புறம்பாக வெளியிலிருந்து ஒரு டாக்டர் அழைக்கப்பட்டு கருணா வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரே வேறு பாதுகாப்பான தடுப்புக் காவலுக்கு அவர் மாற்றப்பட்டார்.
இப்படி அந்தப் பத்திரிகைச் செய்தி தெரிவித்தது. (சி)

--Uthayan.com-

Thursday, November 08, 2007

ஈழப் பிரச்சனையில் என்ன செய்யப் போகிறோம்? - சோலை!



-குமுதம் ரிப்போர்ட்டர்-
உண்மையில் இலங்கையில், அனுராதபுரம் இலங்கை ராணுவ விமான தளத்தை ஈழப் போராளிகள் தாக்கினர். அவர்கள் முன்னறிவிப்புச் செய்து விட்டு மரணத்தைத் தழுவும் தற்கொலைப் படையினர்.

கடுமையான கட்டுக் காவலையும் உடைத்துக் கொண்டு மூன்று சகோதரிகள் உள்பட 21 பேர் செய்த சாதனை மகத்தானவை. இலங்கை அரசிற்குச் சொந்தமான ராணுவ விமானங்களை அவர்கள் பஸ்பமாக்கினர். பிடிசாம்பலான 18 விமானங்கள் பலநூறு கோடி பெறும் என்கிறார்கள்.

அனுராதபுரம் தாக்குதல் தரை வழித் தாக்குதல் மட்டுமல்ல, வான்வெளித் தாக்குதலும் கூட. இப்படி ஈழப் போராளிகள் இருமுனைத் தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறையாகும். அதனால், உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கும் இலங்கை அரசு, கடுமையான தாக்குதல் தொடுக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்.

ஈழத்தின் வடக்கு மாநிலத்தில் இலங்கை ராணுவ விமானங்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் போராளிகள் இயக்கம் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. இயக்கத்தின் தானைத் தலைவருக்கு அடுத்த வரிசையில் நின்ற தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டிருக்கிறார். இன்னும் நால்வர் பலியாகியிருக்கிறார்கள். யுத்தத்தின் இலக்கணப்படி இவர்கள் களத்தில் மரணத்தைச் சந்தித்த மாவீரர்கள். சிங்கள இனவாத அரசின் கோழைத்தனமான தாக்குதலுக்கு பலியாகி இருக்கிறார்கள். பாலசிங்கமும் இல்லாத நிலையில், தமிழ்ச்செல்வனின் இழப்பு புலிகளுக்குப் பேரிழப்புதான்.

முன்னர் சர்வதேசக் கடல் எல்லைக்குள் வந்த கிட்டு கடத்தப்பட்டார். அவரே மரணத்தைத் தழுவிக் கொண்டார். ஈழப்போராளிகள் இயக்கம் அப்போதும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பிறகு மீண்டது. இப்போது சர்வதேச அரங்கில் அறிமுகமான தமிழ்ச்செல்வனை இழந்திருக்கிறது. மீண்டும் எழும். ஏனெனில், சாணை பிடிக்கப்பட்ட இன்னும் பல போர் வாள்கள் உறைகளில் கண் விழித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை எதிர்த்து வியட்நாம் மக்கள் பல்லாண்டுகளாகக் கெரில்லாப் போர் நடத்தினர். அமெரிக்கா, தனது முப்படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்தது. வியட்நாம் காந்தி ஹோ_சி_மின் தலைமையில் நடந்த அந்த கெரில்லாப் போரை இறுதி வரை அமெரிக்கா வெற்றிகொள்ள முடியவில்லை. தோல்வியை ஒப்புக் கொண்டு தலைகுனிந்து தாயகம் திரும்பியது.

அதன் பின்னர், கெரில்லாப் போரை புதிய போர் தந்திரங்களால் முன்னெடுத்துச் செல்வது ஈழப் போராளிகள் இயக்கம்தான் என்பதனை உலகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. வியட்நாம் கெரில்லாப் போர் வீரர்களுக்கு இல்லாத வலிமை, ஈழப் போராளிகளுக்கு இருக்கிறது. அவர்களிடம் போர் விமானங்கள் இல்லை. இவர்களிடம் போர் விமானங்கள் உண்டு.

வியட்நாம் வீரர்களுக்கு ஆதரவாக சீனமும் அன்றைய சோவியத் யூனியனும் துணை நின்றன. ஆனால், ஈழப் போராளிகள் இயக்கத்திற்கு எந்த நாடும் ஆதரவு தரவில்லை. ஆனால், அவர்களுடைய போரின் நியாயத்தை உலகம் புரிந்து கொண்டிருக்கிறது. சிங்கள இனவாத அரசின் மனித உரிமை மீறல்களை அறிந்து கொண்டிருக்கிறது.

அதே சமயத்தில், ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு நாடா, சுயாட்சியா என்பதனை இலங்கை அரசுதான் தீர்மானிக்க வேண்டும். காரணம், கெரில்லாப் போருக்கு மரணமில்லை.

இத்தனை ஆண்டுகளாக இலங்கையில் என்ன நடைபெறுகிறது? ஈழப் போராளிகள் தாக்கினால் சற்று இளைப்பாறிக் கொண்டு இலங்கை ராணுவம் தாக்குகிறது. அனுராதபுரம் ராணுவ விமான தளத் தாக்குதல் என்பது ஈழப்போராளிகள் நடத்திய ஐந்தாவது விமானத் தாக்குதலாகும். கடந்த மார்ச் மாதம் கொழும்புக்கு அருகில் உள்ள ராணுவ விமான தளத்தை போராளிகள் வெற்றிகரமாகத் தாக்கி விட்டுத் திரும்பினர்.

கடந்த ஆறு மாதங்களாக இலங்கை ராணுவம் என்ன சேதி சொல்கிறது? ‘ஆயுதங்களோடு கடல் வழியில் வந்த ஈழப் போராளிகளின் கப்பல்களைக் குண்டு போட்டு மூழ்கடித்து விட்டோம். போராளிகளின் கப்பற்படைத் தளங்களை அழித்து விட்டோம். படகுத் துறைகளைத் துவம்சம் செய்து விட்டோம். ரகசியமாகக் கொண்டு வரப்பட்ட விமானங்களை நொறுக்கி விட்டோம்’ என்று தினம் தினம் புதிய புதிய செய்திகளைப் பரப்பியது. அதன் பின்னர்தான் அனுராதபுரம் ராணுவ விமான தளம் மீது ஈழப் போராளிகள் தாக்குதல் தொடுத்தனர்.

முன்னதைவிட இப்போது ஈழப் போராளிகளுக்கு இழப்புகள் அதிகம்தான். காரணம், இந்த யுத்தத்தைத் தொய்வின்றி நடத்த இலங்கை ராஜபட்சே அரசு விரும்புகிறது. அவருடைய சகோதரர்தான் பாதுகாப்புத்துறை செயலாளர். அவர்கள் சர்வதேசச் சந்தையில் ஆயுதங்கள் வாங்குவதில் அனுபவம் பெற்று விட்டனர். அந்தக் கணக்குகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

இந்த யுத்தத்தில் மரிப்பது சிங்கள உயிரா? தமிழன் உயிரா என்பதை விட மனித உயிர்கள் மரிக்கின்றன என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

இந்தப் போர் எங்கே நடைபெறுகிறது? இதோ, வேதாரண்யம் கோடியக்கரையிலிருந்து கூப்பிடு தூரத்தில் தமிழகத்தின் வாசலில் நடைபெறுகிறது. இந்திய அரசு என்ன செய்கிறது? அந்த அரசில் அங்கம் பெற்றிருக்கும் தி.மு.க., பா.ம.க. கட்சிகள் என்ன செய்யப் போகின்றன? பசுவின் பால் சுரக்கும் காம்பைத் தேடும் கன்றுக் குட்டி போல் இந்தக் கட்சிகளின் ஆதரவுக் குரலை_நேசக்கரத்தை ஈழத்து மக்கள் எதிர்பார்ப்பது தெரிகிறதா?

இலங்கை அரசும் ஈழப் போராளிகளும் பிரச்னையைப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதுதானே இந்தியாவின் அறிவிக்கப்பட்ட கொள்கை?

‘எந்தக் காரணம் கொண்டும் இலங்கை அரசிற்கு ‘ஆயுதங்கள் அளிக்கமாட்டோம்’ என்று சென்ற மாதம் கூட நமது பிரதமர் மன்மோகன் சிங் முழங்கினாரே? இந்த இரண்டு கோட்பாடுகளிலும் நாம் உறுதியாக இருக்கிறோமா?

இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறுகிறார்:

‘அனுராதபுரம் விமான தளம் மீது விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இதில் இலங்கை ராணுவத்திற்குச் சொந்தமான உளவு விமானங்கள் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டன. அவற்றின் மதிப்பு 160 கோடி ரூபாய்.

இந்தச் சம்பவத்தை அடுத்து இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க தரையிலிருந்து விமானங்களைத் தாக்கி அழிக்கும் பீரங்கிகளை வழங்கியுள்ளோம்.

இன்னும் ஆயுதங்கள் வேண்டும் என்று இலங்கை அரசு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதனை மத்திய அரசு பரிசீலிக்கிறது.

இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியா சிறப்புப் பயிற்சி அளித்து வருகிறது’ என்கிறார். இந்திய ராணுவத் தலைமைத் தளபதி தீபக் கபூர்.

அனுராதபுரம் ராணுவ விமான தளம் தாக்கப்பட்ட மறுநாளே, விசாகப்பட்டினத்திலிருந்து இந்தியக் கப்பற்படை கப்பல்கள் இராமேசுவரம் கடற்பகுதி நோக்கி நகர்ந்தன என்ற செய்தியும் வந்தது.

இந்தச் செயல்பாடுகள் தி.மு.க., பா.ம.க.விற்கு உடன்பட்டவைதானா? இலங்கை அரசிற்கு இன்னும் ஆயுதங்கள் அளிப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்கிறது என்று நமது ராணுவத் தளபதி கூறுகிறார். இது தொடர்பாக, மன்மோகன் சிங் கலைஞருடன், டாக்டர் ராமதாசுடன் கலந்துரையாடினாராம்.

இதுதான் மத்திய அரசின் கொள்கை என்றால், ஈழப்பிரச்னைக்கு சுமுகத் தீர்வு என்று மத்திய அரசு இத்தனை நாளும் சொல்லி வந்த கோட்பாடு என்ன ஆயிற்று? இதுதான் இன்றைக்கு விஸ்வரூபமெடுத்துள்ள கேள்வி!
- குமுதம் ரிப்போர்ட்டர்

Wednesday, November 07, 2007

தமிழச்சி யார்?

தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலை ஆதரவு என்பதுதான் தமிழக வாக்கு அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வில் அவர் பேசியதாவது:

இங்கே உள்ள சு.ப.தமிழ்ச்செல்வனின் புகைப்படத்தையும் அந்தப் புகைப்படத்தின் முன்னால் உள்ள பூக்களையும் பாருங்கள். புன்னகைக்கும் பூக்களுக்கும் வித்தியாசம் தெரியாத அந்த முகத்தைப் பாருங்கள். தமிழண்ணா உங்கள் புன்னகையை எப்போது நாங்கள் பார்க்கப் போகிறோம் என்று ஏங்கித் தவிக்கிறோம்.

இந்த மண்ணிலே என் உடன் பிறந்தான் மரணத்துக்குக்கூட நாங்கள் கூடி அழமுடியாதாம். ஆனாலும் இது சுதந்திர இந்தியாவாம்.

எந்த நாடு உலகத்தில் அடிமைப்பட்டு கிடக்கிறதோ அந்த நாடெல்லாம் என் தாய் நாடு என்றார் சேகுவோரா. ஆனால் எங்கள் இரத்த சொந்தங்கள் அகதிகளாக அடிபட்டு இரத்தம் சிந்தி ஓடுகிற போது நாங்கள் ஒன்றும் செய்யக் கூடாதாம். என் உடம்பிலும் கூட சுத்த தமிழ் இரத்தம் ஓடுவதாக ஒருவர் சொல்லியிருக்கிறார். தன்னை தமிழச்சி என்கிறார். 17 வருடமாக தன் மகனை சிறைக்கொட்டடியிலே விட்டு புழுதி பூமிகளில் எல்லாம் இன விடுதலைக் கூட்டம் நடைபெறுகிற இடங்களிலெல்லாம் வந்து நிற்கிற பேரறிவாளனின் தாயார் அற்புதத்தம்மாள் தமிழச்சி- பரமக்குடியிலே என் வீட்டில் இருக்கும் அண்ணன் பிரபாகரன் புகைப்படத்தை பார்த்து யார் என்று கேட்கும் உறவுகளுக்கெல்லாம் என் மூத்த மகன் இவன் என்று சொல்லுகிற என் தாய் ஒரு தமிழச்சி- அண்ணா குண்டுவீசி அண்ணனை கொன்றுவிட்டார்களே என்று கதறிய என் தங்கை உமா ஒரு தமிழச்சி.. ஆனால் என் உடன்பிறந்தானுக்கு இரங்கல் தெரிவித்ததை கொச்சைப்படுத்திய ஜெயலலிதாவும் ஒரு தமிழச்சி என்றால் இந்த மண்ணிலே நாண்டு கொண்டு சாவவதைத் தவிர வேறு வழியில்லை.

சிறிலங்காவுக்கு அமெரிக்கா இராணுவ உதவி செய்தது. பயிற்சி கொடுத்தது. பாகிஸ்தான் 13 வானோடிகளைக் கொடுத்தது. ஆனாலும் விரட்டியத்தனர் விடுதலைப் புலிகள்.

99 தமிழக மீனவர்களை சிறிலங்கா இராணுவம் கடத்திச் சென்று தற்போது விடுவித்துள்ளது. 800 தமிழக மீனவர்களை சிறிலங்கா இராணுவம் சுட்டுப் படுகொலை செய்துள்ளது.

காசுமீரத்தில் ஒரு நபர் பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவி வந்து விட்டாலே எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கூறுகிற இந்தியா எங்கள் தமிழக மீனவ சகோதரன் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டு செத்து விழுகிற போது ஏன் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று சொல்ல மறுக்கிறது?

எங்கள் தவித்த வாய்க்குத் தண்ணீர் தராத நாட்டிலே எங்களுக்கு வாழ என்ன உரிமை உள்ளது? தனித் தமிழ்நாடு கோரி நாங்கள் போராட வேண்டியிருக்காது. அவர்களே அதனை உருவாக்கிவிடுவார்கள்.

கடந்த 58 ஆண்டுகளாக தன்னை வல்லரசு என்று சொல்லுகிற இந்தியா ஏன் தமிழீழத்தைக் கண்டு அஞ்ச வேண்டும்?

ஏனெனில் தமிழீழம் அமைந்த ஐந்தாவது ஆண்டில் அதனை உலக வல்லரசாக பிரபாகரன் மாற்றிவிடுவார் என்று இந்திய அரசாங்கம் அஞ்சுகிறது. நீங்கள் தமிழீழத்தை அங்கீகரித்துப் பாருங்கள். வர்த்தகத் தொடர்புக்கு வந்து பாருங்கள். அவர்கள் செய்து காட்டுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தமிழன் எருமை மாடு போல் இருக்கிறான். ராஜீவ் கொலையை ஒருபோது மறக்கவும் மன்னிக்கவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜி.கே.வாசன் சொல்கிறார். எங்கள் தலைவர்களைக் கொன்றவர்களை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டோம் என்று புதுதில்லியிலிருந்து ஜெயந்தி நடராஜன் கூறுகிறார்.

எத்தனையோ தலைவர்கள் கெஞ்சி மன்றாடி கதறி அழுதபிறகும் இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டாம் என்று கூறியபின்னரும் நீங்கள் இராணுவத்தை அனுப்பினீர்கள்.

ஜி.கே.வாசன் அவர்களே! ஜெயந்தி நடராஜன் அவர்களே!
அந்தத் தமிழீழ மண்ணில் சிங்கள இராணுவம் செய்த கொடூரங்களை விட எங்கள் அக்காள், தங்கைகளை கொடுமையாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய அந்தக் கோரங்களை தமிழன் மன்னித்து விட்டான்- மறந்துவிட்டான
எங்கள் தமிழீழச் சொந்தங்கள் 40 பேரை நடுவீதியில் கிடத்தில் டாங்கிகளை ஏற்றிக் கொன்றததைத் பார்த்தபிறகும் படித்த பிறகும் மன்னித்துவிட்டான்;
பாலியல் வல்லுறவு அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதற்காக என் தங்கைகளின் அக்காள்களின் பிறப்புறுப்பை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற உங்கள் இந்திய இராணுவத்தின் கொடுஞ்செயலை மன்னித்துவிட்டான்- மறந்துவிட்டான்.

ஈழத் தமிழர்களுக்கு அப்போது உதவிய இந்திய இராணுவத்திலே இருந்த எங்கள் தமிழக வீரர்களை சுட்டுப் படுகொலை செய்ததை நாங்கள் மன்னித்துவிட்டான் - மறந்துவிட்டான்.
அதனால்தான் ஜி.கே.வாசன் இன்று மத்திய அமைச்சராக உள்ளார். ஜெயந்தி நடராஜன் தில்லியிலே உள்ளார் என்ன வெட்கக் கேடு!

எங்கள் அக்காள் தங்கைகளை நிர்வாணப்படுத்தி திறந்த மார்பகங்களில் தார்க் குச்சியால் சிறீ என்கிற சிங்கள எழுத்தை எழுதியபின்பும் எங்கள் உறவுகள் ஏன் ஆயுதம் ஏந்தக் கூடாது?
அவர்களுக்காக நாங்கள் அழக்கூடாது- பேசக்கூடாது எனில் அப்படியான ஒரு தேசம் எங்களுக்குத் தேவைதான?

தமிழனின் தேசிய மொழி இந்தியாம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையிலே எழுதிப்போடுகிறார்கள். ஆனால் எந்தத் தமிழன் கோபப்பட்டான்?

இங்கே எவன் செத்தால் தனக்கு என்ன? என்கிற போக்குதான் உள்ளத
சிரஞ்சீவி மகள் ஒரு பார்ப்பான் மகனோடு ஓடிப்போனதும் இந்தத் தமிழனுக்கு ஒரு செய்தி-
சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்ததும் இந்தத் தமிழனுக்கு ஒரு செய்த
இந்தத் தமிழர்களை எது பாதிக்கிறது? உங்களை ஒன்றுமே பாதிக்காது. ஏனெனில் இங்கே நடப்பது வாக்கு அரசியல் என்கிற கேவலமான கூத்து.

இதே கருநாடக மண்ணில் பிரபாகரன் பிறந்திருந்தால் நிலைமையே வேறு.
எங்களுக்குப் பேச்சுக்கள்- அறிக்கைகளில் உடன்பாடில்லை. பேசியே எங்களையும் சாக விட்டுவீடுர்கள்.

தமிழின விடுதலையை எதிர்க்கின்ற சுப்பிரமணியன் சுவாமியை சென்னை விமான நிலையத்திலேயே வழிமறித்து அடித்து நொறுக்கினால்- துக்ளக் சோவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினால் என்ன?

வரப்பு வாய்க்கால் தகராறுக்காக இரத்தச் சொந்தங்களை வெட்டிக் கொன்றுவிட்டு சிறைக்குப் போகிறவர்கள்தானே நாம்!

ஒரு ஓசி பீடிக்காக கொலை செய்துவிட்டு போகிற தமிழன்- ஏன் இனத்துக்காக ஒன்றைச் செய்துவிட்டு போகக்கூடாது?

நாம் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால் அடைவதற்கு நாடு இருக்கிறது. எதிர்க்கிறவர்களை அழித்துவிட்டால்தான் அனைத்தும் சரிப்படும்.

தமிழின விடுதலையை எதிர்ப்பவர்களே! வந்து பாருங்கள் இராமேசுவரத்துக்கு அந்தக் கரையின் இரத்த வாடை தெரியும்! அவர்களின் கண்ணீர் அந்த இராமேசுவரத்து கடல் நீரில் உப்பாய் கரிக்கும்!

தமிழ்த் திரைப்பட உலகில் அண்ணனைக் கொன்றவனை- அக்காளைக் கொன்றவனை- தங்கையைக் கொன்றவனை- தாயைக் கொன்றவனை கிளைமேக்சில் படுகொலை செய்யும் கதாநாயகனுக்கு சிறந்த விருது கொடுப்பீர்கள்- அது உங்களுக்கு ஹீரோயிசமாகத் தெரியும். அதனையே நிஜத்தில் தமிழீழத்தில் தலைவர் செய்தால் உங்களுக்குத் தீவிரவாதமோ?
தேவாலயத்திலே கர்த்தர் விழிக்கும் நேரத்திலே அந்த நத்தார் நாளிலே ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது ஜான்பால் அறிக்கைவிட்டாரா?

சிங்களத்திலே நன்கு உரையாற்றக்கூடிய- சர்வதேச சமூகத்தின் முன் சிங்களத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்திய ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபோது சர்வதேச சமூகம் கண்டித்ததா?

ஏன் கண்டிக்கவில்லை? ஏனெனில் அவன் தமிழன். அதுதான் உண்மை.
அறிக்கைகள்- பேச்சுக்கள் எப்போதும் சரிப்படுவது இல்லை. செயல்தான். அண்ணன் பிரபாகரன் அறிக்கை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையே.. செயல்தானே... நமக்கு செயல்தான் முக்கியம்.

எம் தமிழ்ச் சொந்தங்களே! ஒரு புழுவை நீங்கள் அடித்தால் கூட அது அடிக்க அடிக்க துடித்து மேலெழும்போது நம் மீதான அடக்குமுறைகளுக்கான எதிர்ப்பை காட்ட வேண்டாமா? தந்தை பெரியார் ஊட்டி வளர்த்த இனமான உணர்வு இங்கே செத்து எரிந்து சாம்பலாகிவிட்டதா?
ராஜீவ் கொலையை மன்னிக்கவும் மறக்கவும் மாட்டேன் என்று சொல்லுகிற அந்த காங்கிரசில் ஒருத்தன் கூட தமிழ் மகன் இல்லையா? இந்தத் தமிழினம் செய்த தவறுதான் என்ன? பிழை என்ன?

என்னவெனில்-

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழத்தையும் ஆதரிக்காத எவனுக்கும் இங்கே வாக்கு இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.

வாக்கு கேட்டு வருபவனிடம் தமிழீழ விடுதலையில் உன் நிலைப்பாடு என்ன? என்று கேட்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்.

இறையாண்மை வெங்காயம் என்ற பெயரில் இந்தியா ஆயுதம் கொடுத்தால் நாங்களும் எங்கள் தமிழர்களுக்காக ஆயுதங்கள் கொடுப்போம்.

இந்திரா ராடார்களை இந்தியா கொடுத்த பின்னர்தான் எங்கள் தமிழர்கள் கட்டுநாயக்க வான் தளத்தை அடித்தார்கள். அப்போது சிங்களவன் சொல்கிறான், இந்தியா கோளாறான ராடார்கள்களைக் கொடுத்துவிட்டது என்றான். அப்போதே தமிழன் மான நட்ட வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும். இப்படிச் சிங்களவன் சொல்வது இங்குள்ள நமக்கு வெட்கமாக இல்லையா?

இன்னைக்கும் இந்தியாக்காரன் ஆயுதம் அனுப்புகிறான். ஆறரைக் கோடி தமிழ் மக்கள் இளிச்சவாயர்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்,
சிறிலங்காவுக்கு ஆயுதங்களை அனுப்பினால்- தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து இங்கு பேசவில்லை எனில் ஆசிட் வீச்சும் அழுகிய முட்டைகளும் வீசப்படும் என்கிற நிலைமை இங்கு இல்லை. அதனால்தான் அவர்கள் செய்கிறார்கள்.

கர்நாடகத்தில் 75 வயது இராசுக்குமார் என்பவர் வயது முதிர்ந்து செத்ததற்காக ஆயிரக்கணக்கிலே பேரூந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு கூத்தாடிப்பயல் மாரடைப்பில் செத்துப் போனதற்காக இத்தனை நடந்துள்ளது போல் இப்போது இங்கு என்ன நடந்திருக்க வேண்டும்,

தமிழர்களே! நீங்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுத்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து நிர்வகிக்கும் இந்திய அரசு தான் சிங்களவனுக்கு ஆயுதங்களைக் கொடுக்கிறது!
அப்படியானால் ஆயுதங்கள் கொடுக்கிற அரசாங்கத்துக்கும் அதனை ஆதரிப்போருக்கும் எங்கள் வாக்குகள் இல்லை என்கிற நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

பெரியார் நம்மை மானமுள்ள மனிதராக்க உழைத்தார். ஈழத்திலே பிரபாகரன் விடுதலை பெற்ற தமிழர்களை உருவாக்கப் போராடுகிறார். பெரியார் இப்போது வாழ்ந்திருந்தால் இந்தப் போராட்டத்துக்காக தன்னை அர்ப்பணித்திருப்பார். ஒரு வரலாற்றுப் பிழை நடந்துவிட்டது. ஈழத்தின் விடுதலைப் போராட்டம் நடக்கும்போது பெரியார் இருந்திருக்க வேண்டும். அல்லது பெரியார் இருந்த காலத்திலேயே பிரபாகரன் நடத்தும் விடுதலைப் போர் தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும் பெரியாரின் அந்த வளைந்த கைத்தடிதான் பிரபாகாரனின் நிமிர்ந்த துப்பாக்கியாகியிருக்கிறது.

இங்கே இராமன் என்கிற ஒருவன் பெயரைச் சொன்னால் வாக்கு கிடைக்கும் என்கிற போது ஏன் இனவிடுதலையை முன்னிறுத்தி நம்மால் செய்ய முடியலை? ஏன் செய்யக் கூடாது?
ரஜினிகாந்தின் மர உருவங்களுக்கு பால் ஊற்றி சாகிற என் உறவுகளே! நீங்கள் இந்தக் களத்தில் சாக வாருங்கள் என்றார் சீமான்.
நன்றி>புதினம்.

Tuesday, November 06, 2007

ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்.

பிரிகேடியர் தமிழ்செல்வன் விவகாரம் உச்ச நீதிமன்றம் செல்லும் ஜெயலலிதா..பதவி வெறியில் உணர்வுகளை இழந்த தமிழினத்தின் எதிரி...

பின்வரும் அவரின் அறிக்கை சினம்ழூட்டுவதாக இருக்கின்றது...ஜெயலலிதா அறிக்கை: எனது உடலிலும் ஓடுகிறது தமிழ் ரத்தம் தான்.

சென்னை, நவ. 6-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான எல்.டி.டி.இ. அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் தழிழ்ச்செல்வன் அண்மையில் மரணமடைந்ததற்கு, இந்திய அரசமைப்புச் சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல்-அமைச்சர் ஆகிய கருணாநிதி தமிழக அரசின் செய்தித்துறை மூலமாக அதிகாரபூர்வமாக கவிதை வடிவில் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்து இருந்தார்.

இதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்து, மத்திய அரசு உடனடியாக கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசை கலைக்க வேண் டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன்.

அதற்குக் கருணாநிதி தனக்கே உரித்தான பாணியில் "எனது உடலில் தமிழ் ரத்தம் ஓடுகிறது அதனால் தான் இவ்வாறு எழுதினேன்'' என்கிறார். இவர் உடம்பில் மட்டும் தான் தமிழ் ரத்தம் ஓடுகிறதாம்.

கருணாநிதி எந்த அர்த்தத்தில் இவ்வாறு சொல்கிறார் என்பது தெரியும். நான் மைசூரில் பிறந்ததை வைத்து இவ்வாறு சொல்கிறார். நான் மைசூரில் பிறந்தாலும் தமிழ் குடும்பத்தில் தான் பிறந்தேன். தமிழ் ரத்தம் தான் எனது உடலில் ஓடுகிறது. எனது தாய்மொழி தமிழ் தான். இலங்கையில் பிறந்தவர்களை தமிழர்கள் என ஏற்றுக்கொள்ளும் போது இந்தியாவின் ஒரு பகுதியாக உள்ள மைசூரில் பிறந்தவரையும் தமிழர் என ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எந்த அளவிற்கு எனக்கு தமிழின உணர்வு ஆரம்பம் முதலே இருந்துள்ளது என்பதை இத்தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே 1972 ஆம் ஆண்டு என்னுடைய 24 ஆவது வயதில் "கங்கா கவுரி'' என்ற தமிழ் படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூருக்குப் சென்றிருந்தேன். அந்த சமயத்தில் நான் அளித்த பேட்டி அங்குள்ள பத்திரிகைகளிலே வெளி வந்திருந்தது. அந்தப் பேட்டியில் நிருபர், "நீங்கள் கன்னடியர் தானேப'' என்று கேட்டிருந்தார்.

அதற்கு நான் "இல்லை'' என்று தெரிவித்தேன். உடனே நிருபர் "நீங்கள் மைசூரில் தானே பிறந்தீர்கள்ப'' என்று கேட்டார். அதற்கு "ஆமாம்'' என்று சொன்னது மட்டும் அல்லாமல், "நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள், என்னுடைய தாய் மொழி தமிழ், நான் ஒரு தமிழச்சி'' என்றும் தெரிவித்தேன். இதைப் பார்த்த கன்னட வெறியர்கள் கத்தி, வாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்ற பிரிமியர் ஸ்டுடியோவிற்குத் திரண்டு வந்துவிட்டார்கள். அந்தப் படத்தினுடைய தயாரிப்பாளர் பி.ஆர். பந்தலு நடிகர்கள் ஜெமினி கணேசன், அசோகன் ஆகியோரும் அந்தப் படப்பிடிப்பில் என்னுடன் இருந்தனர். திரண்டு வந்த அந்த கன்னட வெறியர்கள் சுமார் 1000 பேர் வெளியிலே கூடி "கன்னட துரோகியே மன்னிப்பு கேள்!'' என்று பெரிய ரகளை செய்து படப்பிடிப்பு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்துவிட்டார்கள்.

"கன்னடியர் ஆகிய நீ, தமிழச்சி என்று எப்படி பேட்டி கொடுக்கலாம்ப நீ கன்னடியர் தான் என்று சொல்'' என்று மிரட்டினார்கள். "நான் இல்லாததை எப்படிச் சொல்ல முடியும்ப'' என்று தெரிவித்தேன். உடனே அவர்கள் என்னை தாக்க வந்தார்கள். போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் வரவில்லை. பிரச்சினை கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்தது. பந்தலு இந்தப் படப்பிடிப்பு சம்பந்தமான செய்திகளை சேகரிப்பதற்காக சென்னையில் இருந்து தமிழ் பத்திரிகை நிருபர்கள் குழுவை அழைத்து வந்திருந்தார்.

அவர்கள் அங்கே தான் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் இதற்கு சாட்சி. அந்தக் கன்னட வெறியர்கள் "நீ கன்னடியர் என்று ஒத்துக் கொள்! இல்லையென்றால் குத்துவோம், வெட்டுவோம்!'' என்று கூச்சலிட்டார்கள். உடனிருந்த பந்தலு, ஜெமினி கணேசன், அசோகன் ஆகி யோர் "எதுக்கம்மா வம்புப போலீஸ் வேறு இன்னும் வர வில்லை.

அவர்கள் கேட்பது போல் சொல்லிவிடு'' என்று கூறி னார்கள். நான் அவர்கள் சொல்வதை ஏற்காமல், கன்னட மண்ணில், தமிழ் உணர்வுடன், வீரமறத்தியாக அன்றைக்கே "நான் ஒரு தமிழச்சி'' என்று பெருமையுடன் தைரியமாகச் சொன்னேன்.

கர்நாடகாவில் பிறந்ததால் கன்னடியர் ஆவது கிடையாது. தமிழ் நாட்டில் பஞ்சாபி குடும்பங்கள், ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாடி குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை தமிழர்கள் என்று சொல்வதில்லை. அதே போல், இலங்கையில் பிறக்கின்ற தமிழர்களை சிங்களர்கள் என்று சொல்வதில்லை. இலங்கைத் தமிழர்கள் என்று தான் சொல்கின்றோம். நான் கர்நாடகாவில் பிறந்திருந்தாலும், தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த சுத்த தமிழச்சி.

இலங்கைத் தமிழர்கள் மீது எனக்கும், அ.தி.மு.க.வுக்கு எப்போதும் பரிவும், பாசமும் உண்டு. இலங்கைத் தமிழர்கள் நல் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பமும், எல்லோரது விருப்பமும் ஆகும். ஆனால் கருணாநிதி, கடந்த 2 ஆண்டு காலமாக இலங்கைத் தமிழர்கள் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்த போதும், பலர் மரணமடைந்த போதும் வருத்தம் தெரிவிக் காமல், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் மறைவிற்கு மட்டும் தற்போது கவிதை வடி வில் இரங்கல் தெரிவித்து இருக் கிறார்.

இதன் தீவிரத்தை உணராது மத்திய அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் இருப்பதால், இவ்விஷயம் குறித்து உச்ச நீதிமன்றத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரி வித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


NEWS BY SNS NEWS SERVICE AND THANKS TO MAALAIMALAR.COM

ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா. சுப்பிரமணியசுவாமி, கோமாளிப் பத்திரிகையாளர் சோ. ராமஸ்வாமி என்ற ஒரு சிறு கூட்டம்!!!

வழமைபோல வட இந்திய ஆரியப் போக்குப் பின்புல ஊடகங்கள் இதற்கு ஒத்து ஊதி, இந்த எதிர்ப்பைப் பூதாகரப்படுத்திக் காட்டவும் முழு மூச்சில் தயாராகி நிற்கின்றன.

தமிழ்ச்செல்வனின் குரூரப் படுகொலையால் உலகத் தமிழினமே அதிர்ச்சியில் உறைந்துபோய்க் கிடக்கின்றது. தமிழகத்தில் பெரும் உணர்வலைகளை அது தட்டியெழுப்பியிருக்கின்றது. இச்சமயத்தில் தாம் மௌனம் காப்பது, உலகத் தமிழினத்தின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் தமக்கு பேரிழுக்கையும், தமிழக மக்களின் கடும் அதிருப்தியையும் சம்பாதித்துத் தந்துவிடும் என்பதை உய்த்துணர்ந்து கொண்ட தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முந்திக் கொண்டு மௌனம் கலைத்தார்.

இந்நிலைமை காரணமாக, தமிழ்ச்செல்வன் மறைவை ஒட்டி கழிவிரக்கத்துடன் இரங்கல் செய்தி ஒன்றைத் தமக் கேயுரிய கவிதைப் பாணியில் தமிழக முதல்வர் வெளியிட்டு, இவ்விடயத்தில் உலகத் தமிழினத்தின் உணர்வலைகளோடு தாமும் சேர்ந்து நிற்கின்றார் என்பதை உலகுக்கு அடையாளப் படுத்திக்கொண்டார்.
அவ்வளவுதான். இந்த இரங்கல் செய்தியை ஒரு பெரிய விவகாரமாக்கி, ஊதிப் பெருப்பித்து, அதன்மூலம் அரசியல் குழப்பத்தை உருவாக்கத் தயாராகிவிட்டது ஜெயலலிதா அன்ட் கொம்பனி.

ஈழத் தமிழரின் அரசியல் தலைவர் ஒருவரின் படுகொலையில் குறுகிய அரசியல் லாபம் தேடும் அற்பத் தனத்தில் அந்த அணி குதித்திருக்கின்றது.

இந்த இரங்கல் செய்தி வெளிப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் இடையில் இருந்த இரகசியத் தொடர்பு அம்பலமாகிவிட்டது என்றும் இந்திய அரசமைப்புக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் விசு வாசமாகச் செயற்படுவதற்கு உறுதியளித்து, சத்தியப்பிர மாணம் செய்து பதவியேற்ற கலைஞரின் அரசு, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் பிரமுகர் ஒருவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்ததன் மூலம், தேசிய பாதுகாப்புக்கு விரோதமாகச் செயற்பட்டதால் ஆட்சியிலிருந்து அகற்றப்படவேண்டிய தகுதி இழப்பு நிலைக்குச் சென்றுவிட்டது என்றும் கூக்குரலிட்டு, ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளது ஜெயலலிதா அணி.

உலக நாடுகள் அனைத்தும் சமாதான முயற்சிகளுக்காக அழைத்துப் பேசியது தமிழ்ச்செல்வனைத்தான். பச்சைத் தமிழரான தமிழக முதல்வர் மனித நேயத்தோடு மட்டுமல்ல, தன் இனத்து மாவீரன் ஒருவன் இப்படி அநியாய மாகக் குருத்தோலையாக வளர்ந்த நிலையில் கொல்லப்பட்டு விட்டானே என்று எண்ணிக் கண்ணீர் சிந்துவதற்கும் அவருக்கு உரிமை இல்லையா? என்று ஜெயலலிதா அணியைப் பார்த்து நியாயம் கேட்டிருக்கின்றார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

தானாடாவிட்டாலும் தசையாடும் என்பார்கள். அப்படியேதான் கலைஞர் கருணாநிதியின் மனமும், இந்தக் கொடூரக் கொலையால் கொஞ்சம் அசைந்து கொடுத் திருக்கின்றது.

அந்த உணர்வைக் கொச்சைப் படுத்துகின்றார் ஜெய லலிதா.

ஈழத் தமிழர்களுக்கும், அவர் தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வா(ள்/ல்) பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாய மாகும்.
நன்றி>லங்கசிறீ.

Monday, November 05, 2007

தமிழ் மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன உறவு?--கனிமொழி!

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்: இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி








ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கனிமொழி கருணாநிதி பேசியதாவது:

ஈழத்தில் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழிக்கத் துடிக்கும் இலங்கை அரசைப் பற்றியும் தமிழ் மக்களின் துயரங்களைப் பற்றியும் அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பிறகு உலகுக்குத் தெரிவித்த போராளி தமிழ்ச்செல்வன், போர் தர்மங்களை மீறி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதற்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக இரங்கலும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் இருக்கும் வைகோவும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்ச்செல்வன் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி எழுதிய இரங்கல் கவிதைக்கு அதிமுக தலைவி ஜெயலலிதா அம்மையார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவரை தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தமிழ் மக்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் என்ன உறவு? இவரை தலைவராக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்கள் வெட்கப்பட வேண்டிய, வேதனைப்பட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றார் கனிமொழி.
நன்றி>புதினம்.

இன்னும் ஒரு பாடல்!

பிரிகேடியர் தமிழ்செல்வனுக்காக இன்னுமொரு பாடல்.






Sunday, November 04, 2007

தமிழ்செல்வனுக்காக இன்னொரு பாடல்.

பிரிகேடியர் தமிழ்செல்வனுக்காக இன்னொரு பாடல்.






அனைத்துலகத் தொடர்பகம் வெளியிட்ட அறிக்கை!

04.11.2007

அனைத்துலகத் தொடர்பகம்

தமிழீழம்

தேசியத்தலைவர் அவர்களின் வலதுகரமாகத் திகழ்ந்த அரசியற்றுறைப்பொறுப்பாளரும் பெரும் படைத்துறைத் தளபதியும் அனைத்துலகமட்ட இராஐதந்திரியுமாகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை இழந்துவிட்டோம்.

நயம்பட உரைத்த நா ஓய்ந்துவிட்டது. புன்னகை குன்றா சிரிப்பின் செல்வன் இன்று வரலாறாகிவிட்டார். எமது ரணத்திற்கு நாமே மருந்தாவோம், குறி தவறோம்.

நாம் நலிந்து விட்டோம் என்று எண்ணக்கூடாது. நாம் வீழமாட்டோம், துணிவை இழக்கமாட்டோம், இலட்சியப் பாதையிலிருந்து விலகமாட்டோம். எமது போராட்டம் வலிமையானது.

மலை போன்ற எம்மவர் மறைந்துவிட்டார் என்பதற்காக நாம் உறுதி தளரமாட்டோம். அவர் சிந்திய குருதியின் மீது ஆணை. எமது இலட்சியப் போர் வீரியத்துடன் தொடரும், சாதனைகளை அறுவடைசெய்யும்.

தமிழீழ விடுதலைப் போர் எத்தனையோ சவால்களை இதுவரை எதிர்கொண்டுள்ளது.அத்தனையையும் முறியடித்துள்ளோம். இதற்கு எமது இலட்சிய உறுதிதான் காரணம். தமிழனுக்கு வீரத்தையும், விடுதலைப்பற்றையும் ஊட்டிய உறுதியின் உறைவிடமான தலைவர் இருக்கிறார்.

நாம் தலை குனிந்ததில்லை, உறுதி தளர்ந்ததில்லை. எந்த சக்தியையும் கண்டு பயந்துவிடப் போவதுமில்லை. எதுவித ஐயப்பாட்டிற்கும் இடமில்லாமல் போராட்டம் இன்னமும் வீச்சாகத்தொடரும்.

விடுதலை என்பது இரத்தம் சிந்திப் பெற்றுக்கொள்ளப்படும் புனித உரிமை. வெற்றியைத் தீர்மானிப்பது அசையாத மனவுறுதியும் வீரமும் விடுதலைப்பற்றுமாகும்.

தமிழீழ இலட்சியப் பாதையில் நாம் சந்தித்த சவால்கள் எத்தனை, எத்தனை. அத்தனைக்கும் தடை உடைத்து விடை கண்டுள்ளோம். எண்ணரும் புலிவீரர்கள் முப்படையில் அணிவகுத்து நிற்கின்றனர்.

எந்தச்சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. இனிய உறவுகளே! சோர்வை விலக்குவீர், போராட்டம் வீறுகொண்டெழும் எமது பலம் குன்றவில்லை. விழி நீரைத் துடைத்தபடி நாம் போருக்குச் செல்கிறோம். புலத்தமிழர்களே எழுச்சி கொண்டு எம் தேசத்தலைவருக்குப் பலம் சேருங்கள்.

எமது தமிழீழ இலட்சியம் விரைவில் நிறைவேறும். இதுதான் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்.